என் மலர்

  நீங்கள் தேடியது "Crop loan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் வழங்கும் முகாம் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.
  • விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.190 கோடி பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.14.40 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

  விருதுநகர்

  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.190 கோடி பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.14.40 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

  மாவட்டத்தில் மானாவாரி பகுதியில் விவசாய பணிகள் தொடங்கி உள்ள நிலையில் விவசாயிகள் பயிர்க்கடன் பெற எதுவாக பயிர்க்கடன் வழங்கும் முகாம் வருகிற 23-ந் தேதி அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடைபெறுகிறது. கணினி சிட்டா நகல், பயிர் சாகுபடி தொடர்பான கிராம நிர்வாக அலுவலர் அடங்கல் சான்று, மத்திய கூட்டுறவு வங்கி சேமிப்பு கனாக்கு எண், ஆதார் அட்டை நகல், எம்மார்ட் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் அருகாமையிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை விவசாயிகள் தொடர்பு கொண்டு கடன் மனு அளித்து பயனடையலாம்.

  மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை அளித்து கடன் பெற்று பயனடையலாம். பயிர்க்கடன் வழங்கலில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் (9489927001) கடன் பிரிவு உதவி பொது மேலாளர் (9489327006), கடன் பிரிவு மேலாளர் (9489927177) என்ற கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

  மேற்கண்ட தகவலை விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உரிய நேரத்துக்குள் பயிர் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்வது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. #centralgovernment
  புதுடெல்லி:

  சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியை பறிகொடுத்தது. அங்கு ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சி, விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.

  இதனால், விவசாயிகள், காங்கிரசுக்கு ஆதரவாக திரும்பும் நிலை ஏற்படும் என்று பா.ஜனதா கருதுகிறது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், விவசாயிகள் பிரச்சினை முக்கிய இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விவசாயிகளை கவரும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

  அதன்படி, விவசாயிகளின் பயிர் கடன்களுக்கு வட்டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்யும் திட்டத்தை அறிவிப்பது பற்றி பரிசீலித்து வருகிறது. தற்போது, விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம்வரை குறுகிய கால பயிர் கடன் அளிக்கப்படுகிறது. உரிய நேரத்தில் கடனை திருப்பி செலுத்தினால், 3 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.

  இந்நிலையில், உரிய தேதிக் குள் பயிர் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு மீதி 4 சதவீத வட்டியையும் தள்ளுபடி செய்யும் திட்டத்தை அறிவிக்கலாமா? என்று மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

  ஏற்கனவே, வட்டி தள்ளுபடி மூலம் மத்திய அரசுக்கு ஓராண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி சுமை ஏற்பட்டு வருகிறது. வட்டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்தால், இந்த சுமை ரூ.30 ஆயிரம் கோடியாக உயரும் அபாயம் உள்ளது.

  விவசாயிகளுக்கு மற்றொரு சலுகையாக, உணவு தானிய பயிர்களின் காப்பீட்டுக்கு அவர்கள் செலுத்தி வரும் பிரிமியம் தொகையை தள்ளுபடி செய்யவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.  இயற்கை காரணிகளால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு காப்பீடு வழங்கும்வகையில், ‘பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா’ என்ற பயிர் காப்பீட்டு திட்டம், 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இதில், விவசாயிகளிடம் இருந்து 2 சதவீதம், 1.5 சதவீதம், 5 சதவீதம் என பயிர்களுக்கு ஏற்ப குறைவான பிரிமியம் தொகையே வசூலிக்கப்பட்டு வருகிறது. மீதி பிரிமியத்தை மத்திய-மாநில அரசுகள் ஏற்று வருகின்றன.

  இனிமேல், விவசாயிகள் செலுத்தும் சொற்ப பிரிமியத்தையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதனால், அவர்கள் ஓராண்டுக்கு செலுத்தும் ரூ.5 ஆயிரம் கோடி பிரிமியத்தை மத்திய அரசே ஏற்க வேண்டி இருக்கும்.

  அத்துடன், நடப்பு நிதியாண்டில், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடன் அளவை ரூ.11 லட்சம் கோடியாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

  விவசாயிகளுக்கான சலுகைகளை வகுப்பது பற்றி உயர்மட்ட அளவில் ஆலோசனை கூட்டங்களை மத்திய அரசு நடத்தி வருகிறது. புத்தாண்டு பரிசாக இத்திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.#centralgovernment
  ×