search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 288 கோடிக்கு பயிர்கடன்
    X

    பயிர்கடன் வழங்கப்பட்டது.

    திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 288 கோடிக்கு பயிர்கடன்

    • கள்ளிக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இதுவரை ரூ.3.78 கோடி விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது.
    • நிகழ்ச்சிக்கு கூட்டுறவு இணை பதிவாளர் சித்ரா தலைமை தாங்கினார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளிக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 69 ஆவது கூட்டுறவு வார விழா நடைபெற்றது.

    கூட்டுறவு இணை பதிவாளர் சித்ரா தலைமை தாங்கி பேசும்போது,

    திருவாரூர் மாவட்டத்தில் இதுவரையில் விவசாயிகளுக்கு பயிர் கடனாக ரூ. 288 கோடியும், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ரூ.6.60 லட்சம் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

    கள்ளிக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இதுவரை ரூ.3. 78 கோடி விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் விவசாயிகள் மாற்றுத்திறனாளி தொழில் தொடங்க உள்ளிட்ட 17.81 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது என்றார்.

    சரக துணை சார்பதிவாளர் ராமசுப்பு முன்னிலை வகித்தார்.கள்ளிக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் செந்தில்நாதன் வரவேற்று பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாரி முத்து எம்.எல்.ஏ, கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் தொகைகளை வழங்கி னார். இதில் முத்துப்பேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளர் மனோகரன், கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா செந்தில்நாதன், சரக துணை பதிவாளர் பிரபா, கள மேலாளர்கள் சசிகலா மற்றும் கார்த்தி முன்னோடி விவசாயிகள் ஜெயராமன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் வங்கி செயலாளர் வி.கமலராஜன் நன்றி கூறினார்.

    Next Story
    ×