search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1262 பயனாளிகளுக்கு கடனுதவி- அமைச்சர் வழங்கினார்
    X

    பயனாளிகளுக்கு கடனுதவிகளை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.

    1262 பயனாளிகளுக்கு கடனுதவி- அமைச்சர் வழங்கினார்

    • இதுவரை 50,327 பேருக்கு ரூ.286.27 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
    • ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கினார்.

    திருவாரூர்:

    திருவாரூர்மாவட்டம், திருவாரூர் நகராட்சிக்கு ட்பட்ட தெற்கு வீதியில் நடைபெற்ற 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு 1262 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி னார்.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். நாகை நாடாளு மன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் அமை ச்சர் தெரிவித்ததாவது, அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவானது ஆண்டு தோறும் நவம்பர்-14ஆம் தேதி முதல் ஆரம்பிக்க ப்பட்டு தொட ர்ந்து ஏழு நாட்கள் நடத்தப்ப ட்டு வருகிறது.இந்தியாவிலேயே முதன் முதலாக கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது தமிழகத்தில் தான். திருவாரூர் மாவட்டத்தில், மத்திய கூட்டுறவு வங்கி ஏதுவுமில்லை.

    டெல்டா மாவட்டங்களில் கும்பகோ ணம் மற்றும் தஞ்சாவூர் என இரண்டு மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. மானியக்கோரியின் போது திருவாரூக்கு மத்திய கூட்டுறவுவங்கி வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரி க்கையின் அடிப்படையில் விரைவில் திருவாரூர் மாவட்டத்திற்கு மத்திய கூட்டுறவு வங்கி திறப்ப தற்கு உண்டான உரிய நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படும்.

    முதலமைச்சர் சில கட்டமைப்புகளுடன் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் முழு நேர நியாய விலைக்கடைகளும், ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பகுதி நேர நியாய விலைக டைகளும், கழிப்பறை வசதியுடன் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்கள். 2022-2023ஆம் நிதியாண்டில் இதுவரை 50327 நபர்களுக்கு ரூ.286.27 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக பண்ணை சாராக் கடன்கள், சிறு வணிகக் கடன்கள், மாற்றுத்திறனாளி களுக்கான கடன்கள், டாம்கோ மற்றும் டாப்செ ட்கோ உள்ளிட்ட கடன்கள் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

    அதனைதொடர்ந்து, சுய உதவிக்குழு கடன், பயிர்க்கடன் என மொத்தம் 1262 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 25 லட்சம் மதிப்பி லான கடனுதவிகளும், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களும், பேச்சுப்போ ட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் அமைச்சர்அர.சக்கரபாணி வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், திருவாரூர் கூட்டுறவு சங்க ங்களின் மண்டல இணை பதிவாளர் சித்ரா, தஞ்சாவூர் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் ப.உமா மகேஸ்வரி, திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் தேவா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×