search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
    X

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

    விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

    • நகைக்கடன் தள்ளுபடி செய்தது ஆனால் விவசாயிகளுக்கு வழங்க வில்லை.
    • 50-க்கும் மேற்பட்ட பயனாளிகள் மற்றும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே குருவிக்கரம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 39 பயனாளிகளுக்கு, தமிழக அரசால் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

    ஆனால், பயனாளிகளுக்கு இதுவரை நகை திருப்பி வழங்கப்படவில்லை.

    இதையடுத்து, நகைகளை திருப்பித் தர வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தலைமையில், பயனாளிகள் பல கட்டங்களாக போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து வட்டா ட்சியர் த.சுகுமார் தலை மையில் செப்.22 ல், நடைபெற்ற சமாதானப் பேச்சு வார்த்தையில், செப். 28 ஆம் தேதிக்குள், நகை பயனாளிகளுக்கு திருப்பி வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    இந்நிலையில் உறுதியளித்தபடி 28ம் தேதி பயனாளிகளுக்கு நகை திருப்பி வழங்கப்படாததைக் கண்டித்து, நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு குருவிக்கரம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்பு 50க்கும் மேற்பட்ட பயனாளிகள் மற்றும் விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆர்.எஸ்.வேலுச்சாமி, வீ.கருப்பையா, கோ.ராமசாமி தலைமையில் தொடர் காத்திருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்துகூட்டுற வுத்துறை துணைப் பதிவாளர் சுகி.சுவாமிநாதன், பேராவூரணி காவல் ஆய்வாளர் செல்வி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், காலை 12 மணி முதல் மாலை 3 மணி வரை இரண்டு கட்டமாக சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சமாதானப் பேச்சு வார்த்தையில், விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் ஆர்.சி.பழனிவேலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆர்.எஸ்.வேலுச்சாமி, வீ.கருப்பையா, உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    அரசுத் தரப்பில், கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் கள அலுவலர் சின்னப்பொண்ணு, கள அலுவலர் ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.

    இதையடுத்து கூட்டுறவு துணை பதிவாளர் சுகி.சுவாமிநாதன், இரண்டு நாளில் நகைகள் திருப்பித் தரப்படும்" என உறுதி அளித்தார்.

    இதனை ஏற்று போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

    Next Story
    ×