என் மலர்

  ஆட்டோமொபைல்

  ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு தள்ளுபடி
  X

  ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு தள்ளுபடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களுக்கு இந்தியாவில் சிறப்பு தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.  கார் தயாரிப்பில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ள கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம் புதிதாக வென்யூ என்ற மாடல் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் அதிகபட்ச தள்ளுபடி சலுகையை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

  ஹூண்டாய் வெர்னா, ஐ20, சான்ட்ரோ, கிராண்ட் ஐ10, எக்ஸென்ட் என அனைத்து மாடல் கார்களுக்கும் தள்ளுபடி சலுகையை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. 2013-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட கிராண்ட் ஐ10 மாடல் 2017-ம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட மாடலாக வெளிவந்தது.   இந்த ஆண்டு அக்டோபரில் புதிய தலைமுறை கிராண்ட் ஐ10 வர இருக்கிறது. இந்நிலையில் இந்த காருக்கு அதிகபட்சமாக ரூ.95,000 வரை தள்ளுபடி அளிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

  ஹூண்டாய் எக்ஸென்ட் காருக்கு ரூ. 85,000 வரை தள்ளுபடி கிடைக்க உள்ளது. வெர்னா மாடலுக்கு ரூ.30,000 சான்ட்ரோ மாடலுக்கு ரூ.31,000 தள்ளுபடி அளிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ஹூண்டாய் ஐ 20 மற்றும் ஐ20 ஆக்டிவ் ஆகிய மாடல் கார்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
  Next Story
  ×