search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "demand"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதிக்க கூடாது.
    • முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பெரியார் நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் டாக்டர்.மாடசாமி முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட மத்திய பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மக்களின் கருத்துக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு இது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

    அப்போது ஹைட்ரோ கார்பன் தொடர்பாக பாதிப்புகள், தீமைகள் குறித்து அதிகாரிகள் உரிய பதில் தெரிவிக்காததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, முதுகுளத்தூர், பரமக்குடி, ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க 20 கிலோ மீட்டர் முதல் 25 கி.மீ. வரை நிலம் கையகப்படுத்தப்படும். இதனால் குடியிருப்புகள், வரலாற்று சின்னங்கள், கோவில்கள், நீர் நிலைகள் பாதிக்கப்படும்.

    மாவட்ட மக்கள் 75 சதவீத நிலப்பரப்பை இழந்த வெளியேறும் சூழல் ஏற்படும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாய நிலங்கள் மலட்டு தன்மையாக மாறும். பெண்கள் கருவுற்றல் பாதிக்கப்படும். தொற்று நோய் ஏற்படும். நிலத்தடி நீர் மாசுபடும். இது போன்று பல்வேறு பாதிப்புகள் உருவாகும். எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • நகராட்சி பகுதிகளில் மழை நீர் புகாமல் இருக்க பராமரித்து பணிகள் செய்வதற்கு ரூ.8 லட்சம் பொது நிதியில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலை வர் பிரதாபன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் பால்ராஜ் வரவேற்றார் . கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் பணியில் ஈடுபட்டுவரும் பணியாளர்களை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து அவர்களுக்கு ரூ.6 லட்சம் பொது நிதியில் சம்பளம் வழங்க வேண்டும். காந்தி கல்யாண மண்டப பராமரிப்பு பணிக்காக ரூ 8.50 லட்சம் செலவிடுதல் வேண்டும். நகராட்சி பகுதிகளில் மழை நீர் புகாமல் இருக்க பராமரித்து பணிகள் செய்வதற்கு ரூ.8 லட்சம் பொது நிதியில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    தற்போது புகழூர் நகராட்சியின் ஆணையாள ராக பள்ளபட்டி நகராட்சி ஆணையாளர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் பள்ளப்பட்டி நகராட்சியில் பணியாற்றி வருவதால் புகழூர் நகராட்சிக்கு அடிக்கடி வர முடியாத சூழ்நிலையில் உள்ளது. இதனால் நகராட்சியின் பணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே புகழூர் நகராட்சிக்கு நிரந்தரமான ஆணையா ளரை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என ஒட்டுமொத்த குரலில் நகரமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள், நகராட்சி பொறியாளர் மலர்கொடி ,நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வள்ளிமுத்து, நகராட்சி மேலாளர், நகராட்சி வருவாய் ஆய்வாளர் மற்று ம் நகராட்சி நிர்வாக அலுவ லர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பழுதடைந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் கம்பன் நினைவிட சாலையை சரிசெய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
    • தற்போது இந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் உள்ள கம்பன் நினைவிடம் செல்லும் சாலை பல ஆண் டுகளாய் குண்டும், குழியு மாய் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிய டைந்து வருகின்றனர். நாட் டரசன் கோட்டையிலிருந்து கருதுப்பட்டி, கண்டனிப் பட்டி வழியே காளையார் கோவில் செல்லும் சாலை உள்ளது.

    நாட்டரசன்கோட்டையி லிருந்து கண்டனிப்பட்டி வரை சுமார் 4 கி.மீ. தூரம் செல்லும் இந்த சாலை பின்னர் தொண்டி தேசிய நெடுஞ்சாலையுடன் இணை கிறது. நாட்டரசன்கோட்டை வழியே காளையார்கோவில் செல்லும் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த சாலையை பயன்ப டுத்தி வருகின்றனர். 4 கி.மீ. தூரமுள்ள இந்த சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.

    மண் சாலையாக இருந்து முதன்முறையாக தார்ச்சா லையாக மாற்றப்பட்ட பின் னர் எவ்வித பராமரிப் பும் செய்யாமல் விடப்பட்டுள் ளது. நாட்டரசன்கோட்டை யிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் உள்ள கம்பன் நினைவிடத்திற்கு இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். கம்பன் நினைவிடத்திற்கு சிறிது தூரம் முன்புவரை நாட்டர சன்கோட்டை பேரூராட்சி சாலையாகவும், எஞ்சிய 3 கி.மீ. தூரம் காளையார் கோவில் யூனியன் சாலையா கவும் உள்ளது.

    இதில் பேரூராட்சி எல் லைக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் புதிய சாலை அமைக்கப்பட்டது. எஞ்சிய 3 கி.மீ. தூரத்திற்கு புதிய சாலை அமைக்க காளையார் கோவில் யூனியன் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக் காததால் சாலை, போக்கு வரத்திற்கு லாயக்கற்ற நிலை யில் உள்ளது.

    மதுரை, தொண்டி சாலையில் செல்லும் சுற்று லாப்பயணிகள் நாட்டரசன் கோட்டை ஊருக்குள் வந்து கண்ணுடையநாயகி அம்மன் கோவில், கம்பன் நினைவி டம் சென்று மீண்டும் மதுரை, தொண்டி சாலை யில் இணைந்து கொள்ளும் வகையில் உள்வட்ட சாலை யாக இருந்தது. பல ஆண்டு களாய் சாலை பழுதால் தற்போது இந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட் டுள்ளது.

    இதுகுறித்து கிராம மக் கள் கூறுகையில், பிரதான சுற்றுலாத்தலமான கம்பன் நினைவிட சாலை பழுத டைந்து சுமார் 10 ஆண்டுக ளுக்கும் மேல் ஆகிவிட்டது. கடந்த 2013-ம் ஆண்டு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு இச்சாலையை பார்வையிட் டது. சாலை பழுது குறித்து பல்வேறு புகார்கள் அனுப்பி யும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக புதிய சாலை அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    • ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் கோரிக்கை மனு கலெக்டரிடம் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டங்களில் நடப்பு பருவத்தில் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்ட கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    சம்பா சாகுபடிக்கான தண்ணீர் உடனடியாக பெற்று தர வேண்டும்.

    2022- 23 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டை மறு ஆய்வு செய்து உரிய இன்சூரன்ஸ் நிதி வழங்க வேண்டும்.

    பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் (சி.பி.ஐ சார்பு) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

    தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார்.

    விவசாய சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் முடித்து வைத்து பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர்கள் துரை.மதிவாணன், முத்துக்குமரன், அரசு பணியாளர் சங்க மாநில துணை தலைவர் திருநாவுக்கரசு, காவிரி தாய் இயற்கை வழி வேளாண் நடுவம் சீர்.தங்கராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் கோரிக்கை மனு கலெக்டரிடம் வழங்கப்பட்டது.

    • உளுந்து விலை உயர்வால் அப்பளம் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.
    • அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத் திதன் மாநில தலைவர் திரு முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    பருப்பு விலை தற்போது கடுமையாக உயர்ந்து உள் ளது. இன்று தீட்டல் எனப்ப டும் பருப்பு வகைகள் 7 ஆயி ரத்தில் இருந்து தற்போது 12 ஆயிரமாக உயர்ந்து உள்ளது. இதனால் அப்பளம் விலை கடுமையாக உயர்வது மட்டு மல்லாமல், தொழில் பாதிக் கும் அபாய நிலையில் இருக் கிறது.

    மாதத்திற்கு ஒரு டன் அப்பளம் தயாரிக்கப்படு கின்ற இடத்தில் தற்போது 100 கிலோ மட்டுமே தயா ரிக்கின்ற நிலைக்கு தள்ளப் பட்டு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உளுந்தம் பருப்பு விலை உயர்வு மட்டும் அல்லாமல் பருப்பு கிடைக்காத சூழ்நிலையும் உருவாகி இருக்கிறது.

    தயாரிப்பு அல்லது விளைச்சல் இல்லையா? அல்லது பதுக்கலா என்று காரணம் தெரியவில்லை. உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து உளுந்து விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் சங்கம் கேட்டுக்கொள் கிறது.

    அப்பளத்திற்கு மார்க் கெட்டில் விலை கிடைக்காத நிலைமை உள்ளதால் ஆயி ரக்கணக்கான தொழிலா ளர்களின் குடும்பங்கள் வேலை இழந்து தீபாவளி கொண்டாட முடியாத சூழ்நி லையில் இருக்கிறார் கள். அது மட்டுமல்லாமல் வியா பாரம் இல்லாத சூழ்நிலையில் தொழிலாளர்களுக்கு போனஸ் கூட வழங்க முடி யாத நிலைமையில் உரிமை யாளர்கள் தவித்துக் கொண் டிருக்கிறார்கள்.

    இந்த விலை ஏற்றத்தினால் அப்பளத்தின் விலை குறைந்த பட்சம் ஒரு கிலோ 50 ரூபாய் அதிகப்படுத்து வதற்கான வாய்ப்புகள் 100 சதவீதம் இருக்கிறது. எனவே இதற்கு உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, தாலுகா தலைமையிடமாகவும் சட்டமன்ற தொகுதியின் தலைமை இடமாகவும் விளங்குகிறது. .
    • சாலை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் நடப்பதற்கும், இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கும் போதிய இடம் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    கந்தர்வகோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, தாலுகா தலைமையிடமாகவும் சட்டமன்ற தொகுதியின் தலைமை இடமாகவும் விளங்குகிறது.

    மேலும் 10,000 மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் ஒரு வளர்ந்து வரும் நகரமாகவும் திகழ்கிறது. தினசரி கந்தர்வகோட்டைக்கு அரசு அலுவலர்கள், மற்றும் பள்ளி ,கல்லூரி, மாணவ, மாணவிகள், கிராம பொதுமக்கள் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். கந்தர்வகோட்டை முக்கிய கடைவீதியானது தஞ்சை மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.

    இதனால் எந்த நேரமும் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். சாலை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் நடப்பதற்கும், இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கும் போதிய இடம் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி பண்டிகை வரும் நாட்களில் மக்கள் அதிகம் இந்த சாலையில் கூடுவதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • இதனால் தொற்று நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
    • கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன் பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் நகர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட சாலையை முழுவதுமாக அமைத்தி டாமலும், ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலை யின் உயரத்தை விட புதிய சாலை உயரமாக இருப்பதா லும்,வடிகால் வசதி இல்லாத காரணத்தாலும் தற்போது அப்பகுதியில் பெய்த மழை நீர் தேங்கி இருப்பதால் அப்பகுதி மக்கள் அவதி வருகின்றனர். இதுகுறித்து ஏற்கனவே வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கோரிக்கை மனு அளிக்கப்பட்டது,

    மனு பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளிக்கப்பட்டது. மேலும் ஊராட்சி மன்றத்தி ற்க்கும் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது பெய்து வரும் மழையால் பொதுமக்களும், பள்ளி செல்லும் குழந்தை களும் அந்த குளம்போல் காட்சி தரும் மழை நீரில் தான் கடந்து செல்லக்கூடிய அவல நிலை இருந்து வருகிறது.

    இதனால் தொற்று நோய் பாதிப்பு ஏற்படும் அபாய சூழல் இருந்து வருகிறது.

    எனவே உடனடியாக மழை நீர் வடிய போர்க்கால அடிப்படையில் நடவடி க்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்கள் சென்றுவர முடியாத நிலையில் சாலைகள் மிகவும் மோசாக உள்ளது.
    • போர்கால அடிப்படையில் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றியம் மகேந்திரப்பள்ளி ஊராட்சி க்கு உட்பட்ட பல்வேறு சாலைகளை சேதமடைந்துள்ளதால் அதனை சீரமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அனுப்ப பட்டுள்ளது. இது குறித்து மகேந்திரப்பள்ளி ஊராட்சி பெரிய தெருவை சேர்ந்த வழக்கறிஞர் அம்சேந்திரன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது, மயிலாடுதுறை மாவட்ட கொள்ளிடம் ஒன்றியம் மகே ந்திரப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியதெரு செல்லும் சாலை, தோப்புமேடு முதல் காளியம்மன் கோவில் வரை உள்ள சாலை, காக்கா முக்கூட்டு சாலை குருமாங்கோட்டகம் சாலை,மகேந்திரப்பள்ளி ஊராட்சி,காட்டூர் ஊராட்சி மக்கள் மயானத்திற்கு செல்லும் சாலை ஆகிய சாலைகள் முழுவதுமாக மோசமான நிலையில் பொதுமக்கள் சென்றுவர முடியாத நிலையில் உள்ளது. ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி போர்கால அடிப்படையில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இலவடி அணை அருகே உறை கிணறு அமைக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நடந்து வந்தது.
    • உறை கிணறு பயன்பாட்டுக்கு வராததால் குடிநீர் தட்டுப்பாடு நீடித்து வருகிறது.

    களக்காடு:

    களக்காடு நகராட்சி பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கிலும், பொது மக்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், பொதுநல அமைப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இதையடுத்து களக்காடு நகராட்சி சார்பில், சிதம்பர புரம் ஊருக்கு மேற்கே மலையடிவாரத்தில் உள்ள இலவடி அணை அருகே புதிதாக உறை கிணறு அமைத்து களக்காடு நகராட்சி பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி இலவடி அணை அருகே உறை கிணறு அமைக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நடந்து வந்தது. தற்போது உறை கிணறு அமைக்கும் பணிகள் முடி வடைந்துள்ளது. கிணற்றில் மோட்டார் பொருத்தப் பட்டுள்ளது.

    அதுபோல உறை கிணற்றில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்ய குழாய்கள் பதிக்கும் பணி களும், மின் இணைப்பு பணி களும் நிறைவடைந்துள்ள தாக கூறப்படுகிறது. பணிகள் முடிவடைந்து, கிணற்றில் இருந்து நீர் எடுத்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டு 2 மாதங்களை கடந்தும் இன்னும் உறை கிணறு பொதுமக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. உறை கிணறுக்கு வழங்கப் பட்டுள்ள மின் வினியோக குறைபாட்டால் உறை கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தடை ஏற்பட்டுள்ளதாக கூறப்படு கிறது.

    மேலும், உறை கிணறு பயன்பாட்டுக்கு வராததால் நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. வீடுக ளுக்கு புதிய குடிநீர் இணைப்புகளும் வழங்கப்படவில்லை. இந்த உறை கிணறு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டால் களக்காடு நகராட்சி பகுதிக்கு தினசரி குடிநீர் வழங்கலாம் என்றும், தண்ணீர் தட்டுப்பாடும் நீங்கும் என்றும் பொது மக்கள் கூறுகின்றனர். எனவே மின் வினியோக குறைபாட்டை சரி செய்து, உறை கிணற்றை பயன் பாட்டுக்கு கொண்டு வந்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இங்குள்ள குன்று மேட்டுப்பகுதி தெருவில் 200 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.
    • மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கச்சிராயப்பாளையம் அருகே வடக்கநந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட அக்கராயபாளையம் 17 வது வார்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள குன்று மேட்டுப்பகுதி தெருவில் 200 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் சாலை வசதிகள் இல்லாமல் மண்சாலையாகவே இருந்து வருகிறது. இதனால் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக சாலை சேரும் சகதிமாக மாறியது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமலும், வாகனங்களில் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சாலை வசதி அமைத்து தர வேண்டும் என வடக்கநந்தல் பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் சேரும் சகதியுமாக இருந்த சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை வசதி அமைத்து தரவில்லை எனில், ஆதார் மற்றும் ரேஷன் அட்டைகளை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொதுமக்கள் கூறினர்.

    • அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென அரசு சார்பில் பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.
    • நோயாளிகளை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனத்தில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. ஒரு சில இடங்களில் பனிப்பொழிவும் உள்ளது. இதனால் திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பெரும்பா லானோருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென அரசு சார்பில் பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. இதனால் திண்டிவனம் பகுதியில் காய்ச்சல் ஏற்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளனர். இதில் தீவிர காய்ச்சல் உள்ள 15 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளுடன் நிலவேம்பு கசாயம், உப்பு கரைசல், கபாசுர குடிநீர் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள நோயா ளிகளை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையின் பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதனால் மருத்துவ மனையில் குறி ப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகளை மட்டுமே அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி மருத்துவமனை கட்டும் பணியினை துரித ப்படுத்த வேண்டுமென நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பாதுகாப்பான முறையில் நீர் நிலைகளை பயன்படுத்த வேண்டும்.
    • விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்ததது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். செந்தில்நாதன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் பி.எம்.கிஷான் உதவித் தொகை, பயிர் காப்பீடு, தரிசு நில திட்டம், கொப்பரை கொள்முதல், சொட்டு நீர் பாசனம், பயிர்களை அழிக்கும் வன விலங்கு களை கட்டுப்படுத்துதல், கால்வாய்களை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த கோரிக்கைகள் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்கும்படி துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிர மிப்புக்களை உடன டியாக அகற்றி பயன் பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங் களை வன விலங்குகள் சேதப்படுத்தாமல் பாது காத்திடவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தினை பாது காத்திடவும், விவசாயிகளின் கோரிக்கை களுக்கிணங்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துரித நடவ டிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் அரசின் திட்டங்களின் பயன்களை முழுமையாக பெற்றிடவும், தேவையான சான்றி தழ்களை வழங்கிடவும், துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளதால், விவசாயிகள் பாதுகாப்பான முறையில் நீர்நிலைகளை பயன்படுத்த வேண்டும். தங்களது கால்நடைகளையும் பாதுகாப்பான முறையில் பராமரித்துக் கொள்ள வேண்டும். மேலும், மழை யினால் கிடைக்கப்பெறும் நீரினை முறையாக பயன் படுத்தி பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால் துரை (தேவகோட்டை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×