search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹைட்ரோ கார்பன்"

    • ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் திட்டத்திற்கான விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்.
    • தேவேந்திரர் இளைஞர் பேரவை தலைவர் பேட்டியளித்துள்ளார்.

    பனைக்குளம்

    ராமநாதபுரத்தில் தேவேந்திரர் இளைஞர் பேரவை நிறுவன தலைவர் அழகர்சாமி பாண்டியன் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    டெல்டா மண்டலங்களை குறிவைத்து எடுக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன், இப்போது முகவை மாவட் டத்தை பாலைவனமாக்க முயல்கின்றனர்.

    முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை, கமுதி உள்ளிட்ட தாலு காக்களில் 20 இடங்களில் 2ஆயிரம் முதல் 3ஆயிரம் மீட்டர் வரை சோதனை முறையில் ஆழ்துளை கிணறுகளை தோண்டுவதற்காக, தமிழக அரசின் சுற்றுச்சூழலிடம் ஓ.என்.ஜி.சி விண்ணப்பித்திருக்கிறது.

    சமவெளி பகுதியில் மட்டுமில்லாமல் 143 சதுர கிலோமீட்டர் ஆழமற்ற கடல் பகுதியிலும் ஆழ் துளை கிணறுகளை தோண்டுவதற்கான உரிமத்தை ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உரிமக் கொள்கை (ஹெல்ப்) மூலமாக 3-வது சுற்று திறந்தவெளி ஏலத்தின் மூலம் பெற்று இருக்கிறது.

    ஏற்கனவே முகவை மண்டலத்தில் நீடிக்கும் பெரும் வறட்சியால் குடிநீருக்கே பெரும் போராட் டத்தை நாம் நடத்தி வரும் நிலையில், 3 ஆயிரம் மீட்டர் ஆழத்திற்கு ஓ.என்.ஜி.சி ஆழ்துளை கிணறுகளை சோதனை முறையில் அமைக்குமானால், கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

    மேலும் இம்மாவட்டத்தில் வாழும் மீனவ மக்களின் வாழ்வாதாரமும் கேள்வி குறியாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

    ஏற்கனவே அரியலூரில் 10 கிணறுகளை அமைக்கவும், கடலூரில் 5 கிணறுகளை அமைக்கவும், இதே ஓ.என்.ஜி.சி கொடுத்த விண்ணப்பத்தை நிரா கரித்தது போல், ராமநாதபு ரம் மாவட்டம் தொடர்பான விண்ணப்பத்தையும் தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தை பாலைவனம் ஆக்க முயலும் ஓ.என்.சி.சி நிறு வனத்தின் இத்திட்டத்தை எதிர்த்து அனைத்து விவசாயிகள் மீனவர்கள், பொதுமக்களை ஒன்று திரட்டி எனது தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்பதை தமிழக அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
    • பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட அவசர ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கிம் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் சந்தன தாஸ் முன்னிலை வகித்தார்.பசுமை தாயகத்தின் மாநில துணை செயலாளர் கர்ண மஹாராஜா வரவேற்றார்.

    கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலமாக புதியதாக 20 இடத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பு சம்பந்தமாக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் இந்நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது. இதை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.

    இந்த நிறுவனத்தின் மூலமாக இப்பணி செய்தால் ராமநாதபுரம் மாவட்டம் மக்கள் வாழ்வதற்கே பயனற்றதாக ஆகிவிடும். இது போன்ற மக்கள் விரோத மற்றும் இயற்கை வளங்களை அழிக்கக்கூடிய மண் வளங்களை அழிக்க கூடிய இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளை செய்யும் பட்சத்தில் குடிப்பதற்கு குடிநீர் கூட கிடைக்காத சூழ்நிலை உருவாகிவிடும்

    ராமநாதபுரம் மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும். எனவே இந்தத் திட்டத்தை ஒருபோதும் ராமநாதபுரம் மாவட்ட மக்களும் பாட்டாளி மக்கள் கட்சியும் நடத்த விடாது.

    ஆகவே இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். அதை மீறி நமது மாவட்டத்தில் இத்திட்டத்தை கொண்டு வந்தால் அனைத்து சமுதாயத் தலைவர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மக்களவை உறுப்பினர் தலைவர் அன்புமணி ராமதாசை அவர்களை வரவழைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறை வேற்ற ப்பட்டது

    இக்கூ ட்டத்தில் ராமநாதபுரம் நகர செயலாளர் பாலா, திருவாடானை ஒன்றிய செயலாளர் மக்தூம் கான். ராமாபுரம் ஒன்றிய செயலாளர் ஷரீஃப்.

    மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர் மாவட்ட மாணவர் சங்கர் செயலாளர் சந்தோஷ் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராஹிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து வருகிற 16-ந் தேதி ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வழுதூரில் இயங்கி வரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை உடனடியாக ராமநாதபுரம் மாவட்டத்தை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி அந்நிறுவனத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தின் முடிவில் இத்திட்டத்தை செயல்ப டுத்துவதற்கு மக்களின் எதிர்ப்பு இருப்பதை சுட்டிக்காட்ட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதிக்க கூடாது.
    • முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பெரியார் நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் டாக்டர்.மாடசாமி முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட மத்திய பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மக்களின் கருத்துக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு இது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

    அப்போது ஹைட்ரோ கார்பன் தொடர்பாக பாதிப்புகள், தீமைகள் குறித்து அதிகாரிகள் உரிய பதில் தெரிவிக்காததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, முதுகுளத்தூர், பரமக்குடி, ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க 20 கிலோ மீட்டர் முதல் 25 கி.மீ. வரை நிலம் கையகப்படுத்தப்படும். இதனால் குடியிருப்புகள், வரலாற்று சின்னங்கள், கோவில்கள், நீர் நிலைகள் பாதிக்கப்படும்.

    மாவட்ட மக்கள் 75 சதவீத நிலப்பரப்பை இழந்த வெளியேறும் சூழல் ஏற்படும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாய நிலங்கள் மலட்டு தன்மையாக மாறும். பெண்கள் கருவுற்றல் பாதிக்கப்படும். தொற்று நோய் ஏற்படும். நிலத்தடி நீர் மாசுபடும். இது போன்று பல்வேறு பாதிப்புகள் உருவாகும். எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புவி வெப்பமயமாதல் காரணமாக உலகமே பேரழிவை எதிர்கொள்ளும் ஆபத்து இருக்கிறது.
    • ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு துடிப்பது நியாயமல்ல.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்களின் வினாக்களுக்கு எழுத்து மூலம் விடையளித்த மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி, தமிழ்நாட்டின் காவிரி டெல்டாவில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட எந்த திட்டமும் கைவிடப்படவில்லை என்று தெரிவித்தார்.

    தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களின் பட்டியலையும் பெட்ரோலிய அமைச்சர் வெளியிட்டார்.

    மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள விவரங்களின்படி தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மட்டும் மொத்தம் 31 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

    இந்தத் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டால் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பாலைவனமாக மாறிவிடும். இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பிறகு காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்காது; மாறாக பாதுகாக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் மண்டலமாகவே இருக்கும்.

    புவி வெப்பமயமாதல் காரணமாக உலகமே பேரழிவை எதிர்கொள்ளும் ஆபத்து இருக்கிறது. அதைத் தவிர்க்க படிம எரி பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை உலகெங்கும் எழுந்துள்ளது. இத்தகைய தருணத்தில் காவிரி படுகையை அழித்து விட்டு, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு துடிப்பது நியாயமல்ல. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

    காவிரி பாசன மாவட்டங்களில் 31 திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, அவற்றில் ஒன்று கூட இன்று வரை தொடங்கப்படவில்லை. அதனால், அவை அனைத்தும் புதிய திட்டங்களாகவே கருதப்பட வேண்டும். காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டத்தின்படி புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதால் அவை அனைத்தையும் கைவிடும்படி மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் அந்தத் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதால், அவற்றுக்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் நீர்நிலை பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.
    • கடந்த ஓராண்டில் 1,175 டன் அளவிலான பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்ப–ட்டு 177 கம்பெனிகள் மூடப்பட்டுள்ளது.

    வல்லம்:

    தஞ்சை அருகே வல்லத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக 34-வது ஆண்டுவிழா நடந்தது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், திராவிடர் கழகத் தலைவருமான கி. வீரமணி தலைமை வகித்தார். இதில் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ., தஞ்சை மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேலுசாமி வரவேற்றார். பதிவாளர் ஸ்ரீவித்யா நன்றி கூறினார்.

    இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மெய்யநாதன் பின்னர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில் நீர்நிலை பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் மண்ணை மலடாக்கும் திட்டமான ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ எடுக்கும் திட்டங்களுக்கு அனுமதி இல்லை என முதல்-அமைச்சர் தெளிவாக அறிவித்து–ள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் தொழிற்சாலைகள் அமைக்க முடியாது.

    தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 1,175 டன் அளவிலான பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்ப–ட்டுள்ளது. பிளாஸ்டிக் தயாரிக்கும் 177 கம்பெனிகள் மூடப்பட்டுள்ளது. ரூ.105 கோடி அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தினால் தமிழகத்தில் 20 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடு மக்களிடம் குறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து வீரமணி அளித்த பேட்டியில், அ.தி.மு.க.வில் தற்போது ஒற்றைத் தலைமையா, இரட்டை தலைமையா அல்லது முக்கோண தலைமையா என்று பேசுவதை தாண்டி, முதலில் தாங்கள் அடமானம் வைத்த பொருளை மீட்க வேண்டும். முதலில் தங்களுடைய தலைமையை உறுதி செய்யும் முன்பாக, தங்களுடைய கட்சியை மீட்க வேண்டும். அதுதான் தமிழ் மானம் விரும்பக் கூடியவர்களும், தாய் கழகத்துக்கும் உள்ள விருப்பமாகும் என்றார்.

    ×