search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hydro carbon"

    • ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் திட்டத்திற்கான விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்.
    • தேவேந்திரர் இளைஞர் பேரவை தலைவர் பேட்டியளித்துள்ளார்.

    பனைக்குளம்

    ராமநாதபுரத்தில் தேவேந்திரர் இளைஞர் பேரவை நிறுவன தலைவர் அழகர்சாமி பாண்டியன் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    டெல்டா மண்டலங்களை குறிவைத்து எடுக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன், இப்போது முகவை மாவட் டத்தை பாலைவனமாக்க முயல்கின்றனர்.

    முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை, கமுதி உள்ளிட்ட தாலு காக்களில் 20 இடங்களில் 2ஆயிரம் முதல் 3ஆயிரம் மீட்டர் வரை சோதனை முறையில் ஆழ்துளை கிணறுகளை தோண்டுவதற்காக, தமிழக அரசின் சுற்றுச்சூழலிடம் ஓ.என்.ஜி.சி விண்ணப்பித்திருக்கிறது.

    சமவெளி பகுதியில் மட்டுமில்லாமல் 143 சதுர கிலோமீட்டர் ஆழமற்ற கடல் பகுதியிலும் ஆழ் துளை கிணறுகளை தோண்டுவதற்கான உரிமத்தை ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உரிமக் கொள்கை (ஹெல்ப்) மூலமாக 3-வது சுற்று திறந்தவெளி ஏலத்தின் மூலம் பெற்று இருக்கிறது.

    ஏற்கனவே முகவை மண்டலத்தில் நீடிக்கும் பெரும் வறட்சியால் குடிநீருக்கே பெரும் போராட் டத்தை நாம் நடத்தி வரும் நிலையில், 3 ஆயிரம் மீட்டர் ஆழத்திற்கு ஓ.என்.ஜி.சி ஆழ்துளை கிணறுகளை சோதனை முறையில் அமைக்குமானால், கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

    மேலும் இம்மாவட்டத்தில் வாழும் மீனவ மக்களின் வாழ்வாதாரமும் கேள்வி குறியாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

    ஏற்கனவே அரியலூரில் 10 கிணறுகளை அமைக்கவும், கடலூரில் 5 கிணறுகளை அமைக்கவும், இதே ஓ.என்.ஜி.சி கொடுத்த விண்ணப்பத்தை நிரா கரித்தது போல், ராமநாதபு ரம் மாவட்டம் தொடர்பான விண்ணப்பத்தையும் தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தை பாலைவனம் ஆக்க முயலும் ஓ.என்.சி.சி நிறு வனத்தின் இத்திட்டத்தை எதிர்த்து அனைத்து விவசாயிகள் மீனவர்கள், பொதுமக்களை ஒன்று திரட்டி எனது தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்பதை தமிழக அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவையில் செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி நாகப்பட்டினம் மாவட்டம் வரையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

    இத்திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் கீழ் தமிழகம், புதுவையில் 274 கிணறுகள் அமைக்கப்படவுள்ளது. இந்த கிணறுகள் ஒவ்வொன்றும் 3 ஆயிரத்து 500 மீட்டர் முதல் 4 ஆயிரத்து 500 மீட்டர் வரை ஆழம் கொண்டதாக இருக்கும். விழுப்புரத்தில் 139 சதுர கி.மீட்டருக்கு கிணறு வெட்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல புதுவை மாநிலத்தில் புதுவை பிராந்தியத்தில் 2 சதுர கி.மீட்டரும், காரைக்காலில் 39 சதுர கி.மீட்டருக்கும் கிணறு வெட்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதுவை பிராந்தியத்தில் அரியாங்குப்பம் முதல் பனித்திட்டு வரையிலான பகுதிகள்தான் கடற்கரையை ஒட்டிய பகுதி.

    இப்பகுதியில்தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக 2 சதுர கி.மீட்டர் நிலம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இப்பகுதியில் ஏம்பலம் மற்றும் மணவெளி ஆகிய தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளை சேர்ந்த அமைச்சர் கந்தசாமியும், அரசு கொறடா அனந்தராமனும் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-

    ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக புதுவை அரசுக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை. புதுவையை பொறுத்தவரை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எந்த காரணத்தை கொண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் புதுவையில் செயல்படுத்தப்பட மாட்டாது என்று கூறினார்.

    திட்டத்தை செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டிருக்கும் தொகுதியின் அமைச்சர் கந்தசாமி கூறியதாவது:-

    சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள், திட்டங்களுக்கு அரசு அனுமதி அளிக்காது என கொள்கை முடிவு எடுத்துள்ளோம். சுற்றுச்சூழல்துறை அமைச்சராக நான்தான் உள்ளேன். பெரிய மாநிலங்களே இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த கடும் எதிர்ப்பினால் தவிக்கின்றனர்.

    சிறிய மாநிலமான புதுவையில் இத்திட்டங்களுக்கு ஒரு போதும் அனுமதி கிடையாது. தேர்தலுக்கு பிறகு மத்தியில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் வந்துவிடும். இதனால் இந்த திட்டம் செயல்படுத்தப்படாது. எக்காரணத்தை கொண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவை மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல மணவெளி தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், அரசு கொறடாவுடமான அனந்தராமனும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவையில் செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம் என கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    ஹைட்ரோ கார்பன் எடுக்க நாகை, விழுப்புரம், புதுவை, காரைக்காலில் 274 கிணறுகளும் பூமியின் கீழ் உள்பகுதிக்கு ஏற்ப 3,500 மீட்டர் முதல் 4,500 மீட்டர் ஆழம் வரை தோண்டப்படுகிறது.

    சென்னை:

    இந்தியாவில் பூமிக்கு அடியில் அதிகப்படியான எண்ணெய் வளமும், இயற்கை எரிவாயுவும் உள்ள பகுதிகளில் காவிரிப் படுகையும் ஒன்றாகும்.

    புதுச்சேரி முதல் மன்னார் வளைகுடா வரை நிலப் பகுதியில் 25 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கடலில் சுமார் 30 ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பளவும் காவிரிப் படுகையாக வரையறுக்கப்பட்டுள்ளது.

    காவிரிப் படுகையை குறிவைத்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எடுக்கும் பணிகள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. நெடுவாசலில் 2006-ம் ஆண்டே பூமிக்கடியில் துளையிடப்பட்டது. இதனால் 21 லட்சம் ஏக்கர் நிலம் உபரி நிலமாக மாறி விடும் என்பது கண்டு பிடிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி அந்த திட்டத்தை கைவிட வைத்தனர்.

    என்றாலும் காவிரி டெல்டா பகுதிகளில் தொடர்ந்து எண்ணெயையும் இயற்கை எரிவாயுவும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காவிரி டெல்டா உள்ளடக்கிய காவிரிப் படுகை முழுவதிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகளை தற்போது மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.

    ஹைட்ரோ கார்பன் என்பது ஹைட்ரஜன் வாயு மற்றும் கார்பன் வாயுக்களின் கூட்டுப் பொருளாகும். இந்த ஹைட்ரோ கார்பன் வாயு ஆக்ஸிசன் உதவியுடன் எரி பொருளாக மாற்றி பயன்படுத்தப்படுகிறது.

    பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு, மண்ணெய், சமையல் எரிவாயு, நாப்தா, ஷேல் எரிவாயு போன்றவற்றின் ஒட்டு மொத்த வடிவமே ஹைட்ரோ கார்பன்கள் தான். எனவே நாட்டில் எரிபொருள் தேவையை முழுமையாக தீர்ப்பது ஹைட்ரோ கார்பன்கள் தான்.

    இதற்கு முன்பு தமிழ் நாட்டில் காவிரிப் படுகைப் பகுதியில் சிறிய அளவில்தான் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் நேற்றும், நேற்று முன்தினமும் மத்திய அரசு யாரும் எதிர்பாராத வகையில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

     


    ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டே மத்திய பெட்ரோலியம் அமைச்சகத்துடன் இணைந்து ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்ட அனுமதி பெற்று விட்டது. இதன் முதல் கட்டப் பணியாக ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க எவ்வளவு செலவாகும்? எவ்வளவு நாட்களாகும்? பூமிக்குள் செலுத்தப்படும் வேதிப்பொருட்களை பாதுகாப்பது எவ்வாறு? கழிவுப் பொருட்களை அகற்றுவது எவ்வாறு? என்பது பற்றி ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு சமீபத்திய உத்தரவில் கேட்டுக் கொண்டுள்ளது.

    குறிப்பாக காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதால் பொதுமக்களுக்கு என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பது பற்றியும் இது தொடர்பாக பொது மக்களிடம் கருத்து கேட்கவும் வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய வன மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகம் இந்த ஒப்புதலை வழங்கி இருப்பதால் வேதாந்தா நிறுவனம் உடனடியாக காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் கிணறு தோண்டும் பணிகளைத் தொடங்கும்.

    காவிரிப் படுகையை இரு மண்டலமாகப் பிரித்து மொத்தம் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட உள்ளது. விழுப்புரம், புதுச்சேரியை சுற்றியுள்ள பகுதிகளில் (பிரிவு-1) 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டப்படும். கடலூர் முதல் நாகை வரையுள்ள பகுதிகளில் (பிரிவு-2) 158 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படும்.

    இந்த 274 கிணறுகளும் பூமியின் கீழ் உள்பகுதிக்கு ஏற்ப 3,500 மீட்டர் முதல் 4,500 மீட்டர் ஆழம் வரை தோண்டப்படும். காவிரிப் படுகையில் கடல் பகுதியில் சுமார் 4 ஆயிரம் கி.மீ. பரப்பளவுக்கு இந்த கிணறுகளில் பல இடங்களில் அமைக்கப்படும். நிலப்பகுதிகளைப் பொருத்த வரை நாகை, காரைக்கால், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் கிணறுகள் அதிகம் அமையும்.

    சில ஹைட்ரோ கார்பன் கிணறுகள் மக்கள் அடர்த்தியாக, அதிகம் வாழும் பூம்புகார், வேளாங்கண்ணி, நாகை, காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் அமைய உள்ளது. சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் இயற்கையாக அமைந்துள்ள பிச்சாவரம் பாம்குரோவ் காடுகளின் மிக, மிக அருகில் அதாவது பிச்சாவரம் பாம்குரோவ் காட்டுப் பகுதியில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவிலும் எண்ணெய் கிணறுகள் வர உள்ளன.

    விழுப்புரத்தில் தொடங்கி புதுச்சேரி வரையிலான முதல் பிரிவு திட்டத்தின்படி மொத்தம் 1,794 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டப்பட உள்ளன. இதில் 1654 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வங்க கடலில் அமைகிறது. மீதமுள்ள 141 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விழுப்புரம் பகுதியில் 139 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பூமிக்கு அடியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படும். புதுச்சேரி பகுதியில் 2 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு எண்ணெய் கிணறுகள் அமைக்கப்படும்.

    இரண்டாவது பிரிவில் 2574 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் நாகையில் 142 சதுர கிலோ மீட்டருக்கும், காரைக்காலில் 39 சதுர கிலோ மீட்டருக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப் பட உள்ளது. மீதமுள்ள 2393 சதுர கிலோ மீட்டர் பகுதி கடலில் அமைகிறது.

    274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகளை ஏற்கனவே வேதாந்தா நிறுவனம் முடித்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே கிணறு அமைக்கும் பணிக்கான ஆய்வறிக்கையை அது மத்திய அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கும் என்று தெரிகிறது. அந்த அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும் காவிரிப் படுகையில் உள்ள ஹைட்ரோ கார்பன்களை உறிஞ்சி எடுக்கும் பணிகள் தொடங்கி விடும்.

    அடுத்த 15 ஆண்டுகளுக்குள் காவிரிப் படுகையில் உள்ள பெரும்பாலான இயற்கை எரிவாயுவை எடுக்கும் வகையில் இந்த திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையை தயாரிக்க ரூ.106 கோடி செலவாகும் என்றும் கிணறு தோண்ட தலா ரூ.49 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    காவிரிப் படுகையில் இதற்கு முன்பு இயற்கை எரி வாயும், கச்சா எண்ணெயையும் மட்டுமே எடுக்கப்பட்ட வந்தது. தற்போது மிக, மிக ஆழமான பகுதிகளில் உள்ள ஷேல் எரிவாயுவை எடுக்க முடிவு செய்துள்ளனர். காவிரிப் படுகையில் ஷேல் எரிவாயு மிக, மிக அதிக அளவில் இருப்பது நவீன ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஷேல் எரிவாயு என்பது பூமியின் மிக ஆழமான பகுதிகளில் களி மண் பாறைகளில் உள்ள துளைகளில் தங்கி இருக்கும் வாயுவாகும். இந்த வாயுவை வெளியில் எடுப்பது சாதாரணமான பணி அல்ல.

    78 விதமான வேதிப் பொருட்களை தண்ணீருடன் கலந்து அதை 6 டன் வேகத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் செலுத்தினால்தான், அந்த ஷேல் வாயுக்கள் களிமண் பாறை துளைகளில் இருந்து வெளியேறி வரும். எனவே இந்த திட்டத்தை செயல்படுத்த அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    காவிரி டெல்டா பகுதி மக்கள் ஏற்கனவே குடிநீரே கிடைக்காமல் தவித்தப்படி உள்ளனர். விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லை. இந்த நிலையில் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கும் தண்ணீரை எடுத்தால் மிகப் பெரிய அளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

    அதுமட்டுமின்றி பூமிக்கு கீழ் துளைகளில் உள்ள வாயுவை அகற்றும் போது கடல் நீர் புகுந்து நல்ல நிலம் உலர் நிலமாக மாறும். 78 வகையான வேதிப் பொருட்களை பூமிக்குள் செலுத்துவதால் நிலத்தடி நீர் மாசுபடும். அது புற்று நோயை மிக எளிதாக வரவழைக்கும் என்கிறார்கள்.

    காவிரிப் படுகையின் பூமி சல்லடையாக துளைக்கப்படும் பட்சத்தில் நில நடுக்கம் அபாயம் அதிகரிக்கும். இந்த திட்டத்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று மத்திய அரசு சொல்கிறது. ஆனால் ஹைட்ரோ கார்பன் கிணறுகளில் பணி புரிய லட்சக்கணக்கான வட மாநிலத்தவர்கள் தமிழ் நாட்டில் குடியேற வாய்ப்புள்ளது. இது தமிழர்களின் கலாச்சாரத்தை உடைக்கும் வகையில் மாறும்.

    தமிழர்களின் ஒட்டு மொத்த வாழ்வாரத்தையே இந்த திட்டம் அழித்து விடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே காவிரிப் படுகையில் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    வேதாரண்யம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினத்தில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கரியாப்பட்டினத்தில் 7-வது நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டம் திருகாரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஏல அறிவிப்பு செய்துள்ளது.

    இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் விளைநிலங்கள் மற்றும் தண்ணீர் பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கரியாப்பட்டினம் அரசு மருத்துவமனை சாலையில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழுவினர் மற்றும் கரியாப்பட்டினம், செட்டிப்புலம், வடமலை மணக்காடு, தென்னம்புலம், மருதூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து 7-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வேதாரண்யம் தாலுக்கா முழுவதும் இன்று 1000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வர்த்தகர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தினால் தமிழகம் போர்க்களமாக மாறும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். #HydroCarbonProject #Mutharasan
    விழுப்புரம்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று விழுப்புரம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஒப்பந்தத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மற்றும் வேதாந்த நிறுவனத்துடன் இணைந்து மத்திய அரசு கையெழுத்திட உள்ளது. தமிழகத்தில் இந்த திட்டத்தை அமல்படுத்தினால் தமிழகமே போர்க்களமாக மாறும்.

    தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளையும் இணைக்க வேண்டும். ஒவ்வொரு ஆறுகளையும் இணைக்கும் முன்பு அந்தந்த பகுதிகளில் அணைகள் கட்ட வேண்டும்.

    பழைய அணைக்கட்டுகள் அனைத்தையும் மழை காலத்துக்கு முன்பு தூர் வார வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #HydroCarbonProject #Mutharasan
    ×