search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதிக்க கூடாது-கோரிக்கை மனு
    X

    ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதிக்க கூடாது-கோரிக்கை மனு

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதிக்க கூடாது.
    • முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பெரியார் நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் டாக்டர்.மாடசாமி முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட மத்திய பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மக்களின் கருத்துக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு இது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

    அப்போது ஹைட்ரோ கார்பன் தொடர்பாக பாதிப்புகள், தீமைகள் குறித்து அதிகாரிகள் உரிய பதில் தெரிவிக்காததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, முதுகுளத்தூர், பரமக்குடி, ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க 20 கிலோ மீட்டர் முதல் 25 கி.மீ. வரை நிலம் கையகப்படுத்தப்படும். இதனால் குடியிருப்புகள், வரலாற்று சின்னங்கள், கோவில்கள், நீர் நிலைகள் பாதிக்கப்படும்.

    மாவட்ட மக்கள் 75 சதவீத நிலப்பரப்பை இழந்த வெளியேறும் சூழல் ஏற்படும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாய நிலங்கள் மலட்டு தன்மையாக மாறும். பெண்கள் கருவுற்றல் பாதிக்கப்படும். தொற்று நோய் ஏற்படும். நிலத்தடி நீர் மாசுபடும். இது போன்று பல்வேறு பாதிப்புகள் உருவாகும். எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×