search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உளுந்து"

    • உளுந்து விலை உயர்வால் அப்பளம் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.
    • அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத் திதன் மாநில தலைவர் திரு முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    பருப்பு விலை தற்போது கடுமையாக உயர்ந்து உள் ளது. இன்று தீட்டல் எனப்ப டும் பருப்பு வகைகள் 7 ஆயி ரத்தில் இருந்து தற்போது 12 ஆயிரமாக உயர்ந்து உள்ளது. இதனால் அப்பளம் விலை கடுமையாக உயர்வது மட்டு மல்லாமல், தொழில் பாதிக் கும் அபாய நிலையில் இருக் கிறது.

    மாதத்திற்கு ஒரு டன் அப்பளம் தயாரிக்கப்படு கின்ற இடத்தில் தற்போது 100 கிலோ மட்டுமே தயா ரிக்கின்ற நிலைக்கு தள்ளப் பட்டு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உளுந்தம் பருப்பு விலை உயர்வு மட்டும் அல்லாமல் பருப்பு கிடைக்காத சூழ்நிலையும் உருவாகி இருக்கிறது.

    தயாரிப்பு அல்லது விளைச்சல் இல்லையா? அல்லது பதுக்கலா என்று காரணம் தெரியவில்லை. உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து உளுந்து விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் சங்கம் கேட்டுக்கொள் கிறது.

    அப்பளத்திற்கு மார்க் கெட்டில் விலை கிடைக்காத நிலைமை உள்ளதால் ஆயி ரக்கணக்கான தொழிலா ளர்களின் குடும்பங்கள் வேலை இழந்து தீபாவளி கொண்டாட முடியாத சூழ்நி லையில் இருக்கிறார் கள். அது மட்டுமல்லாமல் வியா பாரம் இல்லாத சூழ்நிலையில் தொழிலாளர்களுக்கு போனஸ் கூட வழங்க முடி யாத நிலைமையில் உரிமை யாளர்கள் தவித்துக் கொண் டிருக்கிறார்கள்.

    இந்த விலை ஏற்றத்தினால் அப்பளத்தின் விலை குறைந்த பட்சம் ஒரு கிலோ 50 ரூபாய் அதிகப்படுத்து வதற்கான வாய்ப்புகள் 100 சதவீதம் இருக்கிறது. எனவே இதற்கு உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • நெல் கொள்முதல் ஈரப்பதம் 22 சதவீதம் வரை கொள்முதல் செய்திட வேண்டும்.
    • உளுந்து பயிருக்கு போதுமான நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருத்துறைப்பூண்டி ஒன்றிய நகர குழுக்களின் சார்பில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுபயிர்க்காப்பீட்டுடன் முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதியும் சேர்த்து ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம்வழங்கிட வேண்டும், நெல் கொள்முதல் ஈரப்பதம் 22 சதம் வரை கொள்முதல் செய்திட வேண்டும். உளுந்து பயிருக்கு போதுமான நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார்.

    விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர்ஜோசப் முன்னிலை வகித்தார்.கோரிக்கைகளை விளக்கி விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளரும் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்சந்திரராமன், ஒன்றிய செயலாளர்ஜவகர் , விவசாய சங்க ஒன்றிய செயலாளர்ஜெயபால், ஒன்றிய தலைவர்பாலு, நகர செயலாளர் டி.பி.சுந்தர், நகர தலைவர் பி.எம்.பக்கிரிசாமி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வி ராஜா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்சுஜாதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • டிஎஸ்பி உரத்தினை கரைத்து தெளிந்த கரைசலை மேலாக வடிகட்டி கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
    • விவசாயிகள் தங்கள் வரப்பு உளுந்து சாகுபடியில் கூடுதல் கவனம் வைத்து அதிக மகசூல் அடைய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் சம்பா தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல் வரப்புகளில் பெருமளவில் உளுந்து சாகுபடி உள்ளது.

    இவ்வாண்டு குறிப்பிட்ட இடைவெளியில் சீராக வடகிழக்கு பருவமழை கிடைப்பதால் வரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து நன்கு செழித்து வளர்ந்து உள்ளது. தற்போது பூக்கும் தருணத்தில் உள்ளது.

    ஆடுதுறை 5 வம்பன் 8 முதலிய இடங்களில் பயிரிடப்பட்டுள்ளன வரப்புகளில் உளுந்து சாகுபடி செய்வதால் கூடுதல் வருமானமும் இயற்கை முறையில் நெல் வயலில் தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்த முடிகிறது.

    2 சதவீதம் டிஏபி கரைசல் 20 லிட்டர் தண்ணீரில் நாலு கிலோ டிஎஸ்பி உரத்தினை கரைத்து 24 மணி நேரம் ஊற வைத்து பிறகு தெளிந்த கரைசலை மேலாக வடிகட்டி எடுத்து அத்துடன் 180 லிட்டர் தண்ணீர் கலந்து மாலை நேரத்தில் கைதெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

    பயிர் வகை நுண்ணுட்டம் இரண்டு கிலோ 100 லிட்டர் தண்ணீர் கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும் பஞ்சகவ்யா பசு மாட்டின் சாணம் கோமியம் பால்,நெய் தயிர் முதலியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் நொதி கரைசல் பஞ்சகாவியம் ஆகும் .

    இப் பஞ்சகாவியத்தினை ஒரு டேங்க்கு 300 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். உயிர் உரங்கள் ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஸ் பாக்டீரியா மூன்றையும் தலா 250 மில்லி கலந்து இந்த கரைசலை டேங்குக்கு 100 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

    உளுந்து சாகுபடிகள் மூலம் கூடுதல் வருமானம் புரதச்சத்து உள்ள உணவு கிடைப்பதுடன் கால்நடைகளுக்கு உளுந்து தட்டை தீவனமாக பயன்படுகிறது. எனவே விவசாயிகள் தங்கள் வரப்பு உளுந்து சாகுபடியில் கூடுதல் கவனம் வைத்து அதிக மகசூல் அடைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உளுந்து விதைப்பதற்கு முன் விதை பரிசோதனை அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
    • விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தல்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் உளுந்து விதைப்பதற்கு முன் விதை பரிசோதனை அவசியம் என வேளாண் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் 325 எக்டேர் பரப்பளவில் மார்கழி, தை பட்டத்தில் விவசாயிகளால் உளுந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகள் தமிழக விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையினால் சான்றளிக்கப்பட்டு சான்று அட்டை பொருத்திய விதைகளைப் பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் சேமித்து வைத்துள்ள உளுந்து விதைகள் அல்லது விற்பனையாள ர்களிடமிருந்து பெறப்பட்ட உளுந்து விதைகளை பரிசோதனை செய்த பின்னர் விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும்.

    விதைப்பரிசோதனை நிலையத்தில் இவ்விதைகளின் முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிறரக கலவன், பிற பயிர்கள் போன்ற காரணிகள் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    உளுந்து விதைப்பரிசோதனையில் பிற ரக கலவன்கள் ஏதேனும் இருப்பின் அதன் முடிவுகளையும் தெரிந்து கொள்ளலாம். விதைப்பரிசோதனை நிலையத்தில் ஒரு பணி விதை மாதிரிக்கு ரூ.80 பரிசோதனைக் கட்டணமாக செலுத்தி பயிர் மற்றும் ரகம், குவியல் எண் ஆகியவை குறித்த விபரச் சீட்டுடன், உளுந்து 100 கிராம் அனுப்பி விதைகளை பரிசோதனை செய்து பயன்பெறலாம்.

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கான விதைபரிசோதனை நிலையமானது பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் அருகில், மாவட்ட மைய நூலகம் மேல்புறம், துறைமங்கலம், பெரம்பலூர்-621 220 என்ற முகவரியில் செயல்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

    • நசியனூர் அடுத்த மலையம்பாளையத்தில் சித்ரா என்ற விவசாயி உயர் விளைச்சல் தரும் உளுந்து வம்பன் 10 ரகத்தை பயிரிட்டு விதைப்பண்ணையாக பதிவு செய்துள்ளனர். இந்த விதை பண்ணையை சென்னை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் (மத்திய திட்டம்) சிவகுமார் ஆய்வு செய்தார்.
    • இந்த உயர் விளைச்சல் ரகமானது 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வரும். மஞ்சள் தேமல் நோய், இலைச்சுருள் நோயை எதிர்த்து வளரக்கூடியது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் தரக்கூடியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நசியனூர் அடுத்த மலையம்பாளையத்தில் சித்ரா என்ற விவசாயி உயர் விளைச்சல் தரும் உளுந்து வம்பன் 10 ரகத்தை பயிரிட்டு விதைப்பண்ணையாக பதிவு செய்துள்ளனர். இந்த விதை பண்ணையை சென்னை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் (மத்திய திட்டம்) சிவகுமார் ஆய்வு செய்தார்.

    ஈரோடு வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி, துணை இயக்குனர் (மாநில திட்டம்) அசோக், ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

    ஆய்வின் போது கூடுதல் இயக்குனர் சிவகுமார் கூறியதாவது:

    இந்த உயர் விளைச்சல் ரகமானது 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வரும். மஞ்சள் தேமல் நோய், இலைச்சுருள் நோயை எதிர்த்து வளரக்கூடியது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் தரக்கூடியது.

    உளுந்து விதை பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு அரசு உற்பத்தி மானியம் வழங்குகிறது. இவ்விதை பண்ணை கலவன்கள் இன்றி வயல் தரத்தில் தேர்ச்சி பெற்றவுடன் பாதுகாப்பான முறையில் அறுவடை செய்யப்பட்டு விதை சுத்தி நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும்.

    விதை சுத்தி நிலையத்தில் சுத்தி செய்யப்பட்டு விதை மாதிரி எடுத்து விதை பரிசோதனை நிலைய த்துக்கு அனுப்பப்படும். விதை பரிசோதனையில் பகுப்பாய்வு முடிவில் தேர்ச்சி பெற்றதும் சான்றட்டை இணைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு விதைச்சான்று அலுவலர் ஹேமாவதி, கணேசமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

    ×