search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகழூர் நகராட்சிக்கு நிரந்தர நகராட்சி ஆணையாளரை நியமிக்க   கோரிக்கை
    X

    புகழூர் நகராட்சிக்கு நிரந்தர நகராட்சி ஆணையாளரை நியமிக்க கோரிக்கை

    • கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • நகராட்சி பகுதிகளில் மழை நீர் புகாமல் இருக்க பராமரித்து பணிகள் செய்வதற்கு ரூ.8 லட்சம் பொது நிதியில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    வேலாயுதம் பாளையம்

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலை வர் பிரதாபன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் பால்ராஜ் வரவேற்றார் . கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் பணியில் ஈடுபட்டுவரும் பணியாளர்களை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து அவர்களுக்கு ரூ.6 லட்சம் பொது நிதியில் சம்பளம் வழங்க வேண்டும். காந்தி கல்யாண மண்டப பராமரிப்பு பணிக்காக ரூ 8.50 லட்சம் செலவிடுதல் வேண்டும். நகராட்சி பகுதிகளில் மழை நீர் புகாமல் இருக்க பராமரித்து பணிகள் செய்வதற்கு ரூ.8 லட்சம் பொது நிதியில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    தற்போது புகழூர் நகராட்சியின் ஆணையாள ராக பள்ளபட்டி நகராட்சி ஆணையாளர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் பள்ளப்பட்டி நகராட்சியில் பணியாற்றி வருவதால் புகழூர் நகராட்சிக்கு அடிக்கடி வர முடியாத சூழ்நிலையில் உள்ளது. இதனால் நகராட்சியின் பணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே புகழூர் நகராட்சிக்கு நிரந்தரமான ஆணையா ளரை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என ஒட்டுமொத்த குரலில் நகரமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள், நகராட்சி பொறியாளர் மலர்கொடி ,நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வள்ளிமுத்து, நகராட்சி மேலாளர், நகராட்சி வருவாய் ஆய்வாளர் மற்று ம் நகராட்சி நிர்வாக அலுவ லர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×