search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்ணீரின்றி கருகிய பயிர்களுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X

    தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

    தண்ணீரின்றி கருகிய பயிர்களுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    • ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    • ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் கோரிக்கை மனு கலெக்டரிடம் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டங்களில் நடப்பு பருவத்தில் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்ட கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    சம்பா சாகுபடிக்கான தண்ணீர் உடனடியாக பெற்று தர வேண்டும்.

    2022- 23 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டை மறு ஆய்வு செய்து உரிய இன்சூரன்ஸ் நிதி வழங்க வேண்டும்.

    பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் (சி.பி.ஐ சார்பு) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

    தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார்.

    விவசாய சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் முடித்து வைத்து பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர்கள் துரை.மதிவாணன், முத்துக்குமரன், அரசு பணியாளர் சங்க மாநில துணை தலைவர் திருநாவுக்கரசு, காவிரி தாய் இயற்கை வழி வேளாண் நடுவம் சீர்.தங்கராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் கோரிக்கை மனு கலெக்டரிடம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×