search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consultation meeting"

    • ஓய்வு பெற்ற நீதிபதி சிவகுமார் தலைமையில் அனைத்துதுறை சார்ந்த அதிகாரிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் வன்கொடுமை பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகள் தொடர்பாகவும் விரிவாக விசாரணை நடத்தப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நல ஆணைய தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான சிவகுமார் தலைமையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துதுறை சார்ந்த அதிகாரிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆணையத்தின் உறுப்பினர்கள் புனித பாண்டியன், குமாரவேல், லீலாவதி, இளஞ்செழியன், ரகுபதி, ரேகா பிரியதர்ஷினி மற்றும் ஆணைய உறுப்பினர் செயலாளர் கந்தசாமி, நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விபரங்கள் தொடர்பாகவும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அளித்த புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, வன்கொடுமை பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகள் தொடர்பாகவும் விரிவாக விசாரணை நடத்தப்பட்டது.

    கூட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட வர்களுக்காக வழங்கப்படக்கூடிய நிவாரணத் தொகையை ஆணையத் தலைவர் சிவக்குமார் வழங்கினார்.

    • துப்புரவு பணியாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நாளை நடக்கிறது.
    • மேற்கண்ட தகவல்களை மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு நெறியாளர் சகாய பிலோ மின்ராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரையில் சட்ட விழிப்பு ணர்வு ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கிராமப்புற துப்புரவு பணியாளர்களுக்கு சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள் குறித்த மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் மதுரை அய்டியாஸ் மையத்தில் நாளை (9-ந்தேதி) காலை 9.30 மணிக்கு நடக்கிறது. இதில் குறைந்த பட்ச ஊதியம், துப்புரவு தொழிலாளர் களுக்கான அரசாணைகளை நடை முறைப்படுத்துதல், அரசு அதிகாரிகள் பங்களிப்பு, துப்புரவு பணியாளர் உரிமைகளை காக்க போராட்டங்களும், அவற்றின் தாக்கங்களும், பணி பாதுகாப்பு சட்டங்கள் -சவால்கள், அன்றாடம் சந்திக்கும் உரிமை மீறல்கள் போன்ற தலைப்புகளில் முக்கிய பிரமுகர்கள் பேச உள்ளனர். இதில் வழக்கறி ஞர்கள், சங்க பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், மாண வர்கள் கலந்து கொள்கின் றனர்.

    மேற்கண்ட தகவல்களை மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு நெறியாளர் சகாய பிலோ மின்ராஜ் தெரிவித்துள்ளார்.

    • நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை அதிகம் நடைபெற்று வருகிறது.
    • இதனால் போதை ஆசாமிகளால் பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளம் வருவாய் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெரியகுளம் நகராட்சி, 5 பேரூராட்சி மற்றும் 17 ஊராட்சி பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுப்பத ற்காக பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா தலைமையில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களின் கருத்து கேட்பு கூட்டம் நடை பெற்றது.

    இந்த கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மன்ற உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்கள் பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்து காவல்துறையிடம் தெரிவித்தனர். இதில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை அதிகம் நடைபெறுவ தாகவும், இதனால் போதை ஆசாமிகளால் பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.

    மேலும் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக மக்கள் கூடும் இடங்களான தென்கரை காந்தி சிலை நிறுத்தம், வைகை அணை சாலை உள்ளிட்ட பகுதிகளில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் அனுமதி பெற்று மது விற்பனை நடைபெற்று வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க முறைகேடாக கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்ப னையை தடுத்து நிறுத்த இரவு ரோந்து பணியையும் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும், முக்கிய இடங்களில் புற காவல் நிலையங்கள் அமைத்து சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த வேண்டும் எனவும் கூட்டத்தில் பங்கேற்ற நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • இந்தியாவில் உள்ள கட்சிகளுக்கு முன்னோடி இயக்கமாக தி.மு.க. திகழ வேண்டும்.
    • சேலம் இளைஞரணி மாநாடு ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசினார்.

    மதுரை

    மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர், அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி பேசியதாவது:-

    டிசம்பர் 17-ந் தேதி சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. இதில் மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் 20,625 இளைஞரணி செயல் வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

    சேலம் இளைஞரணி மாநாடு இந்தியாவில் உள்ள மற்ற கட்சிகளுக்கு முன்னோடி இயக்கமாக தி.மு.க. இயக்கம் திகழ்கின்ற வகையில் சிறப்புடன் நடைபெறும்.

    செப்டம்பர் 20-ந்தேதி மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மேலூரில் மூத்த முன்னோடிகள் 3 ஆயிரம் தொண்டர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொற்கிழி வழங்குகிறார்.

    மேலும் மதுரை கிழக்கு, சோழவந்தான், மேலூர் தொகுதிகளில் ஆகிய 3 தொகுதிகளில் உள்ள மூத்த முன்னோடிகள் 3 ஆயிரம் பேர்களுக்கு பொற்கிழியும், பூத்து கமிட்டி உறுப்பினர்கள் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படு கிறது

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மாவட்ட துணை செய லாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமைச் செயற் குழு உறுப்பினர் கரு.தியாகராஜன், இளைஞரணி மாநில துணை செயலாளர் ஜி.பி.ராஜா, மாணவரணி மாவட்ட செயலாளர் மருதுபாண்டி, பகுதி செயலாளர் சசிகுமார், ஒன்றிய செயலாளர்கள் ரகுபதி, சிறைச்செல்வன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கலாநிதி, ஒன்றிய சேர்மன் வீரராகவன், இலக்கிய அணி நேருபாண்டி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அழகு பாண்டி, துணை அமைப்பா ளர்கள் வைகை மருது, இளங்கோ, பேரூர் செயலாளர் வாடிப்பட்டி பால்பாண்டி,நகர் செயலாளர் மேலூர் யாசின், விவசாய தொழி லாளர் அணி செயலாளர் ஒத்தக்கடை சரவணன், மாநகராட்சி கவுன்சிலர்கள் செல்வ கணபதி, பாபு, மகளிர் அணி மாவட்ட செயலாளர் உமா சிங்கத்தேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாைலயோர வியாபாரிகளுக்கான கடனுதவி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • புதியதாக கடனுதவி பெறும் பயனாளிகளுக்கு 3 கட்டங்களில் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் சாலையோர வியாபாரிகள் சங்கங்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. வெங்கடேசன் எம்.பி., மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக் கான தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் மூலம் பல்வேறு கடனுதவி வழங்கும் திட்டத்தின் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    இம்முகாமில் புதியதாக கடனுதவி பெறும் பயனாளி களுக்கு 3 கட்டங்களில் ரூ.1 லட்சம் அனைத்து வங்கிகள் மூலம் கடன் தொகை விண்ணப்பித்த அன்றே வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மொத்தம் 14 ஆயிரத்து 402 சாலை யோர வியாபாரிகள் பயன்பெற்று உள்ளனர். மதுரை மாநகராட்சி பகுதிக ளில் உள்ள அனைத்து சாலையோர வியாபாரிக ளுக்கும் அனைத்து வங்கி களும் கடனுதவி வழங்க வேண்டும். கடனுதவி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தாமல் விண்ணப் பித்த அன்றே கடனுதவி வழங்குவதற்கு வங்கிகள் முன்வர வேண்டும். வங்கி கள் பொறுப்பு அலுவலர் களை நியமித்து கடனுதவி வழங்க வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது. வருகிற 1-ந்தேதி சாலை யோர வியாபாரி களுக்கான சிறப்பு கடன் மேளா தமுக்கம் மைதா னத்தில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் துணை மேயர் நாகராஜன், நகர்நல அலுவலர் வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சுகாதார அலுவலர்கள் ராஜ்கண்ணன், வீரன், சிவசுப்பிரமணியன், கோபால், சுகாதார ஆய்வாளர்கள், பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா மற்றும் அனைத்து முன்னணி வங்கி மேலாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடந்தது
    • 4 நிறுவனங்கள் விண்ணப்பித்த நிலையில் 2 நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை அமைச்சர் நமச்சிவாயத்திடம் விளக்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை சேதராப்பட்டு கரசூரில் 100 ஏக்கரில் மருத்துவபூங்கா மற்றும் தொழில்பேட்டை ஏற்படுத்தப்பட உள்ளது.

    முதலீட்டு ஊக்குவிட்டு, வசதி, மத்திய நிதி உதவி திட்டங்களை செயல்படுத்து வது குறித்து ஆலோசனைக்கூட்டம் பிப்டிக் அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார்.

    தொழில்நுட்ப ஆலோசகர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

    தொழிற்சாலைகள் கொண்டு வர வழி காட்டுதல் நெறிமுறைகள் ஏற்படுத்த கன்சல்டன்சி நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. 4 நிறுவனங்கள் விண்ணப்பித்த நிலையில் 2 நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை அமைச்சர் நமச்சிவாயத்திடம் விளக்கினர்.

    கூட்டத்தில் தொழில் துறை செயலர் ஜவகர், இயக்குனர் ருத்ரகவுடு ஆகியோர் பங்கேற்றனர்.

    • புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு சார்பாக தலைவர் பாபு தலைமையில் வணிகர்கள் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
    • எனது விலைப்பட்டியல் எனது உரிமை என்ற திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

    புதுச்சேரி:

    நுகர்வோர் பயன்படும் வகையில் எனது விலைப்பட்டியல் எனது உரிமை என்ற திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி வணிகவரித்துறையில் நடந்தது.

    வணிகவரித்துறை ஆணையர் முகமது மன்சூர் தலைமையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் கூடுதல் வணிகவரி துறை அதிகாரி ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு சார்பாக தலைவர் பாபு தலைமையில் வணிகர்கள் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் மத்திய அரசு புதுச்சேரி , ஹரியானா, அசாம், குஜராத் ஆகிய மாநிலங்களில் எனது விலைப்பட்டியல் எனது உரிமை என்ற திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

    இதன் மூலம் எந்த ஒரு ஜி.எ.ஸ்.டி பதிவு பெற்ற வணிக நிறுவனத்திடம் இருந்து ஒரு வாடிக்கையாளர் குறைந்தபட்சம் ரூ.200-க்கு மேல் கொள்முதல் செய்யும் பொருளுக்கான விலை பட்டியல் ரசீதைமத்திய அரசு (ஜி.எஸ்.டி.என்) பிரத்தியேக செயலி மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    அவ்வாறாக பதிவேற்றம் செய்யப்படும் விலைப்பட்டியல் ரசீது அடிப்படையில் பிரதி மாதம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.1 கோடிக்கு வரையான பரிசுத் தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது.

    இந்த குலுக்கல் முறை முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. என்பதனை வணிகவரித் துறை அதிகாரிகள் வணிகர்களிடத்தில் தெரியப்படுத்தினார்.

    நுகர்வோர்கள் பயிரிடும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த எனது விலைப்பட்டியல் எனது உரிமை திட்டத்திற்கு வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் வரவேற்பு அளித்தனர்.

    • ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.
    • 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சிகாமணி வரவேற்றார். பாலமுருகன், பிரகாசம் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

    • போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    கீழக்கரை

    கீழக்கரையில் நிலவிவரும் போக்குவரத்து நெரி சலை கட்டுப்படுத்திட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக வெல்பேர் கமிட்டி சார்பில் மாவட்ட நீதிமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்தால் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையில் போக்கு வரத்து நெரிசல் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது.

    போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் வகையில் ஒரு பக்க பார்க்கிங் விஷயத்தில் காவல்துறை முனைப்பு காட்டுவதோடு நோ பார்க் கிங் ஏரியாவில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் நிறுத்தும் பைக், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கையை ஏற்று கொண்ட போலீசார் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக் கும் வகையில் பிரச்சா ரம் செய்யுமாறு கேட்டு கொண்டனர்.

    பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் நலன் கருதி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எடுக்கப் படும் நடவடிக்கைகளுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    முக்குரோட்டிலிருந்து குயின் டிராவல்ஸ் அலுவல கம் வரை ரோட்டின் இரு பக்கமும் உள்ள ஆக்கிர மிப்புகளை முழுமையாக அகற்றுவதோடு இனி எந்த காலத்திலும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு தொடர்ந்து கண்காணிக்கப்படு மென்றும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க படுமென்றும் தீர்மானிக்கப் பட்டது.

    கூட்டத்தில் போலீஸ் ஆய்வாளர் சரவணன், சுகா தாரத்துறை ஆய்வாளர் பரக்கத்துல்லா, கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி நிர்வாகி கள், நகர்மன்ற உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
    • தன்னுடைய கடைசி காலம் வரை தமிழ், தமிழர் நலன், சமத்துவம், சமூகநீதி என்று பாடுபட்டவர் கருணாநிதி என அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    முழுமையான வெற்றி

    முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் அனைத்து தரப்பினரின் நலன் காக்கும் அரசாகவும் இருந்து வருகிறது. அவர் செய்த சாதனைகள் ஏராளம். இதை அனைத்து தரப்பினர்களிடம் கொண்டு சேர்த்து 2024-ல் நடைபெறும் தேர்தலில் முதல்-அமைச்சர் உத்தரவுபடி நாம் முழுமையான வெற்றியை பெற வேண்டும்.

    அதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும். ராமநாதபுரம் வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். தி.மு.க.வை தோற்றுவித்த அண்ணாவின் மறைவுக்கு பின் இந்த இயக்கத்தை கட்டிக்காத்து 5 முறை முதல்-அமைச்சராக இருந்து தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றவர் கருணாநிதி.

    தன்னுடைய கடைசி காலம் வரை தமிழ், தமிழர் நலன், சமத்துவம், சமூகநீதி என்று பாடுபட்டவர். அவர் நம்மைவிட்டு சென்றாலும் அவரது கொள்கை மற்றும் கோட்பாடு வழியில் இன்றைய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இயக்கத்தை வழி நடத்தி வருகிறார். கலைஞரின் நினைவு தினம் வருகிற 7-ந் தேதி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, கிளைக்கழகம் மற்றும் வார்டுகள் தோறும் கலைஞர் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆலோசனை கூட்டம்

    கூட்டத்தில் ராமநாதபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 17-ந் தேதி தென் மாவட்டங்களுக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்தில் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளின் பாக முகவர்கள் அனைவரும் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செ யலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், பிரமிளா, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரி தங்கம், ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதா கிருஷ்ணன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வ நாதன், முருகேசன், சின்னப்பா ண்டியன், ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, செல்வராஜ், சின்ன மாரிமுத்து, நவநீதகண்ணன், அன்புராஜன், ராமசுப்பு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதிய ழகன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்கு மார், ரவீந்திரன், நிர்மல்ராஜ், மேகநாதன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இந்தக் கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தி.மு.க. சார்பில் பாக முகவர்க ளுக்கான ஆலோசனைக் கூட்டம் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணி மாறன் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.

    தொடர்ந்து மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசியதாவது:-

    தேர்தலில் கிளைச் செய லாளராக இருப்பவர்கள் பாக முகவர்தான். உங்கள் பணி மிகவும் முக்கியமானது. நமது பகுதியில் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர். அதை சரியாக கணக்கெடுக்க வேண்டும். பாக முகவர்கள் தான் தேர்தலின் அடித்தளம் பொதுமக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்வு காண்பதற்காக வாட்ஸ்அப் குரூப் ஒன்றை அமைத்து அதை உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.

    கிராமம், கிராமமாக சென்று திண்ணை பிரசாரம் செய்து அ.தி.மு.க.வின் பொய் பிரசாரத்தை முறி யடிக்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பணிகளை கொண்டு வந்தது காங்கிரஸ் தான். அதனை தாங்கள் கொண்டு வந்ததாக

    அ.தி.மு.க.வினர் கூறி வருகின்றனர்.

    அதனை முறியடிக்க வேண்டும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. நல்லாட்சியின் சான்றாக இந்த தேர்தல் அமைய வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் தற்போது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற்று தமிழகத்தில் முதல் தொகுதி யாக தொண்டர்கள் அனை வரும் பாடுபட வேண்டும்.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன், முத்துராமன் மகிழன் மாநில விவசாய அணி இணைச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், அணி அமைப்பாளர்கள் கொடி சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் லதா அதியமான், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதிமூலம், சிவமுருகன், ஒன்றிய செய லாளர்கள் தனபாண்டியன், ராமமூர்த்தி, நாகராஜ், மதன்குமார், பாண்டியன், பேரூர் செயலாளர்கள் வருசை முகமது, திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதிய மான் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஒ.பி.எஸ். அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி நன்றி கூறினார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூரில் ஓ.பி.எஸ். அணி சார்பில் ராமநாதபுரத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தர்மர் எம்.பி. தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வருகிற 1-ந் தேதி ராமநாதபுரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொள்வது எனவும், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பி.எஸ். வேட்பாளர் போட்டியிடுவார் எனவும், அதற்காக இப்போதே பணிகளை தொடங்கி விட்டதாகவும், தொண்டர்கள் தீவிர பிரசா ரத்தில் ஈடுபடவேண்டும் என்றும் தர்மர் எம்.பி. கேட்டுக்கொண்டார். முடிவில் ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி நன்றி கூறினார்.

    ×