search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "OPS team"

    • இது குறித்து ராமுத்தாய் தல்லாக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குளிச்சிபட்டியைச் சேர்ந்தவர் ராமுத்தாய் (வயது 72). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். முதல் மகன் நடராஜன். கப்பலில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு மதுரை ஆத்திகுளம் குறிஞ்சி நகரில் உள்ளது.

    இந்த வீட்டில்தான் ராமுத்தாய் தங்கி இருந்தார். நடராஜன் அனுப்பிய ரூ.15 கோடியே 62 லட்சத்து 35 ஆயிரத்து 236 பணம் ராமுத்தாயின் சகோதரி மகன் பாலமுருகனின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதன் மூலம் மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சொத்துக்கள் வாங்கப்பட்டது.

    இந்த சொத்துக்களுக்கு பாலமுருகன் காப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். மேலும் ராமுத்தாய் வசம் இருந்த நகை மற்றும் சொத்துக்களை பாலமுருகன் மற்றும் அவரது மனைவி சேர்ந்து வெற்றுத்தாளில் கையெழுத்து போடுமாறு மிரட்டி வந்துள்ளனர். இதனால் ராமுத்தாய் சொத்து ஆவணங்கள் அனைத்தையும் மதுரையில் உள்ள முகவரிக்கு மாற்றியுள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு வந்த பாலமுருகன் மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகியோர் ராமுத்தாயிடம் துப்பாக்கி முனையில் மிரட்டி கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் ரூ.1000 பவுன் தங்கம், வைர நகைகளை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.

    இது குறித்து ராமுத்தாய் தல்லாக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இந்த வழக்கு மதுரை மாவட்ட குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பாலமுருகன் என்ற வைகை பாலன் ஓ.பி.எஸ். அணியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக உள்ள இவரது மனைவியை தேடி வருகின்றனர்.

    • நிகழ்ச்சியில் சங்கர் மகாராஜன் உள்ளிட்ட சுமார் 50 பேர் தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.
    • தி.மு.க.வில் உள்ளவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமையும் என ராஜா எம்.எல்.ஏ. பேசினார்.

    சங்கரன்கோவில்:

    குருவிகுளம் ஒன்றியத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சுமார் 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் தங்களை இணைத்து கொள்ளும் நிகழ்ச்சி சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் முகேஷ் முன்னிலை வகித்தார். இதில் குருவிகுளம் ஒன்றியத்தை சேர்ந்த ஓ.பி.எஸ். அணியில் இருந்து மூர்த்தி, சரண், செல்வம், கார்த்தி, ராசு, முத்துராஜ், ராஜா, மணிகண்டன் இசக்கி பாண்டியன், வெள்ளத்துரை, ஜெயக்கொடி, கிருஷ்ணசாமி, சங்கர பாண்டியன், கார்த்தி, பிரகாஷ், சங்கர் மகாராஜன் உள்ளிட்ட சுமார் 50 பேர் ராஜா எம்.எல்.ஏ. முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

    அப்போது ராஜா எம்.எல்.ஏ. பேசுகையில், தி.மு.க.வில் இணைந்து உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. தி.மு.க.வில் கட்சி பணிகளில் முழு ஈடுபாடுடன் பணியாற்ற வேண்டும். தி.மு.க.வில் உள்ளவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமையும் என்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜராஜன், நகர துணை செயலாளர் சுப்புத்தாய், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சென்னம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஓ.பி.எஸ். தரப்பு நகர செயலாளர் கோபி சங்கர் தலைமையில் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக ஓ.பி.எஸ். தரப்பு மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு கலந்துகொண்டனர். இதில் பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து விலகி 100 பேர் ஓ.பி.எஸ். அணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    இதில் நகர அவை தலைவர் சாஜாத் உசேன், சிறுபான்மை நகர செயலாளர் ஆதில் அஹமத், சிறுபான்மை அவைத் தலைவர் அத்தாவுல்லா, சிறுபான்மை துணை செயலாளர் நாசிர் அஹமத், மாவட்ட பிரதிநிதி சலீம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

    • ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பி.எஸ் அணி நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினர்.
    • கொடநாடு வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நெல்லை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்த கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை மற்றும் மர்ம நிகழ்வுகள் குறித்து துரிதமாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைவாக தண்டனை பெற்று தர தி.மு.க.வை வலி யுறுத்தி ஓ. பன்னீர் செல்வம் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் அ.ம.மு.க.வினரும் கலந்து கொண்டனர்.

    நெல்லை வண்ணார் பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே ஓ.பி.எஸ் அணி மற்றும் அ.ம.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பி.எஸ் அணியின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பரம சிவன், நெல்லை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தச்சநல்லூர் பகுதி செயலாளர் சொர்ணம் வரவேற்றார்.

    தொடர்ந்து கொடநாடு வழக்கு விசாரணையை துரிதப்படுத்த தி.மு.க. அரசை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப் பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆவின் அண்ணசாமி, துவரை பேச்சிமுத்து, மணி மூர்த்தீஸ்வரம் ஆறுமுகம், ஓ.பி.எஸ். அணி இளைஞர் பாசறை செயலாளர் லெனின், அண்ணா தொழிற் சங்க செயலாளர் பாலசுப் பிரமணியன், மாணவரணி செயலாளர் செல்வ பிரதீப், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் செல்வ கணபதி, மகளிர் அணி செயலாளர் தமிழ் செல்வி,

    நாங்குநேரி சட்ட மன்ற தொகுதி செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ், பகுதி செயலாளர்கள் நெல்லை சுப்பையா, காஜா மைதீன், ஒன்றிய செயலா ளர்கள் ராமர், டோமினிக் பாண்டி, தங்கப்பல் பரம சிவன், பொதுக்குழு உறுப்பி னர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாளை வடக்கு பகுதி செயலாளர் அருள் இம்மானுவேல் ஸ்டீபன் நன்றி கூறினார்.

    • ஒ.பி.எஸ். அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி நன்றி கூறினார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூரில் ஓ.பி.எஸ். அணி சார்பில் ராமநாதபுரத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தர்மர் எம்.பி. தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வருகிற 1-ந் தேதி ராமநாதபுரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொள்வது எனவும், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பி.எஸ். வேட்பாளர் போட்டியிடுவார் எனவும், அதற்காக இப்போதே பணிகளை தொடங்கி விட்டதாகவும், தொண்டர்கள் தீவிர பிரசா ரத்தில் ஈடுபடவேண்டும் என்றும் தர்மர் எம்.பி. கேட்டுக்கொண்டார். முடிவில் ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி நன்றி கூறினார்.

    • அ.தி.மு.க.வின் கட்சி கொடி மற்றும் சின்னம் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு என உத்தரவிட்டது.
    • கட்சி கொடி, சின்னத்தை அ.தி.மு.க.வினர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.

    பவானி:

    ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பவானி நகரில் இன்று மாலை காடையாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் ஆப்பக்கூடல் கோவிந்தன் தலைமையில் நடைபெற உள்ளது.

    இதையொட்டி ஓ.பி.எஸ். அணியினர் பவானி நகரில் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், அ.தி.மு.க. கட்சி கொடியை கட்டி இருந்தனர். இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பவானி நகர அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. பரிந்துரைப்படி நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேற்று இரவு பவானி போலீசில் ஓ.பி.எஸ். அணி மீது புகார் செய்தனர்.

    அ.தி.மு.க.வின் கட்சி கொடி மற்றும் சின்னம் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு என உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கட்சி கொடி, சின்னத்தை அ.தி.மு.க.வினர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. ஆனால் நாளை (இன்று) நடைபெறும் கூட்டத்திற்கு அ.தி.மு.க.வை சாராத மாற்றுக்கட்சியினர் நகரின் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், கட்சி கொடி, சின்னங்கள் போஸ்டர்கள் பயன்படுத்தி அ.தி.மு.க.வின் மாண்பை கெடுக்கும் வகையில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறி இருந்தனர்.

    பவானி நகரில் ஓ.பி.எஸ். அணியினர் இன்று நடத்தும் செயல் வீரர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க.வின் கட்சி கொடி, சின்னம் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் புகார் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சரியான அக்கறை காட்டாத தன்மையும் எடுத்துக்காட்டும் விதத்தில் தான் இந்த சம்பவங்கள் நிகழ்துள்ளது.
    • தற்காலிக பணி நீக்கம்,இடமாற்றம் செய்வதால் இந்த பிரச்ச னைகள் தீர்ந்து விடாது.

    விழுப்புரம், மே.18–-

    விழுப்புரம் மாவ ட்டம்,மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச் சாராயம் குடித்தவ ர்கள் முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்து வ மனையில் சிகிச்சை பெற்று வருகி ன்றனர். அவர்களை நேற்று ஓ.பி.எஸ் அணி மாவட்ட செயலாள ர்ஜே.சி.டி. பிரபாகரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.பின்னர்அவர் கூறியதாவது:-

    மரக்காணம்,எக்கியார் குப்பம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கும் ஆறுதல் தெரிவிக்க ஓ.பி.எஸ்., கூறியதின் பேரில் இங்கு வந்துள்ளோம். .செங்கல்பட்டு மாவட்டத்தில் இதேபோல் நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் அறிக்கை கொடுத்துள்ளார்.அரசினுடைய மெத்த னப்போக்கு காரணமாகவும் மதுவிலக்கு கொள்கையில் இன்னும் சரியான அக்கறை காட்டாத தன்மையும் எடுத்துக்காட்டும் விதத்தில் தான் இந்த சம்பவங்கள் நிகழ்துள்ளது. அரசு முறையான, சீரான ஒரு மதுவிலக்கு கொள்கை யை உடனடி நடவடிக்கை எடுத்து சீர்படுத்த வேண்டும் என அ.தி.மு.க.சார்பில் நாங்கள் முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம். அரசு தனது அலட்சியப் போக்கை விட்டு விட்டு சரி செய்ய வேண்டும். உளவு, காவல்,அமலாக்கம் போன்ற துறைகளில் பணிபுரி வோரை தற்காலிக பணி நீக்கம்,இடமாற்றம் செய்வதால் இந்த பிரச்ச னைகள் தீர்ந்து விடாது. மதுவிலக்கு கொள்கையில் ஒரு நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும். மதுவிலக்கு கொள்கையில் அரசு உடனடியாக மாற்ற ங்கள் கொண்டுவர வேண்டும் என அ.தி.மு.க.சார்பில் கோரிக்கையை வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    விழுப்புரம் மாவட்ட செயலா ளர் ஏழுமலை, துணைச் செயலாளர் டாக்டர் கலைச்செல்வன், ஒன்றிய செயலாளர் வேலு, விழுப்புரம் நகர செயலாளர் கமருதீன், மாநில மீனவர் அணி செயலாளர் ஜெயரா மன், தொகுதி பொறுப்பாளர் சுப்பிரமணி, நகர செயலா ளர் சங்கரலி ங்கம், அண்ணா தொழி ற்சங்க நிர்வாகிகள் ஏழும லை ,துரை, மாவட்ட ஜெயல லிதா பேரவை தனுசு ஜெயரா மன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர்உ டனிருந்தனர்.

    • மதுரை ஒத்தக்கடையில் அ.தி.மு.க. ஒ.பி.எஸ். அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
    • தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ந் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    மதுரை

    இந்தி திணிப்புக்கு எதிராக 1960 ஆண்டு தமிழகத்தில் போராட்டம் உச்சகட்டம் அடைந்த நிலை யில் பேரறிஞர் அண்ணா தலைமையில் தமிழக முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் இந்தி எதிர்ப்பு போராட்ட த்தில் ஈடுபட்டனர். இதில் பலர் உயிரிழந்தனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ந் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    அதன்படி இன்று மதுரை அருகே உள்ள ஒத்தக்கடையில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணி சார்பில் மாணவர் அணி மாநில இணைச்செயலாளர் ஒத்தக்கடை பாண்டியன் தலைமையில் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் முன்னிலையில் தியாகி களின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாணவராணி மாவட்ட செயலாளர் கமல், ஒன்றிய செய லாளர்கள் யோகராஜ், சன்மார்க்கம், ஜோதி முருகன், இளைஞராணி ராஜமாணிக்கம், பேரவை பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், ஒன்றிய துணை செயலாளர் ராஜமாணிக்கம், மாணவராணி ரகு தேவன், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    • எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி கொக்கிரகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் மாவட்ட செயலாளர் வி.கே.பி.சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • பஸ்சில் சென்ற பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி கொக்கிரகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் மாவட்ட செயலாளர் வி.கே.பி.சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் காமராஜ், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் செல்வகணபதி, சிறுபான்மையினர் அணி செயலாளர் சாந்தகுமார், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் லெனின், மாவட்ட அவைத்தலைவர் ஜோதி பரமசிவன், பொருளாளர் மணிமாளிகை கணேசன், துணைச்செயலாளர் டால் சரவணன், மகளிரணி செயலாளர் தமிழ்ச்செல்வி, இணைச்செயலாளர் செல்வசித்ரா, மாணவ ரணி செயலாளர் செல்வபிரதீப், பேரூர் செயலாளர்கள் தங்கப்பல் பரமசிவன், பீர்முகைதீன், ஒன்றிய செயலாளர்கள் சுந்தர்ராஜ், கிருஷ்ணன, ஜெகன், சிதம்பரம், வள்ளல் வைகுண்டம், பகுதி செயலாளர்கள் ஸ்டீபன், வெங்கட், நல்லி சுப்பையா, காஜா மைதீன், தொகுதி செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ் மற்றும் நிர்வாகிகள் முத்து சரவணன், லெட்சுமணன், சாமி, வக்கீல் அணி வேல்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பஸ்சில் சென்ற பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    • நெல்லை அ.தி.மு.க. ஓ.பி.எஸ்.அணி புதிய நிர்வாகிகள் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ.வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
    • முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் சிலைக்கு வி.கே.பி.சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை அ.தி.மு.க. ஓ.பி.எஸ்.அணி மாநகர் மாவட்ட செயலாளர் வி.கே.பி.சங்கர் தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ.வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    பின்னர் சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரி மணிமண்டபத்தில் உள்ள முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட இணைசெயலாளர் செல்லசித்ரா, துணைசெயலாளர் சரவணன், மகளிரணி துணைசெயலாளர் பால்கனி, பாளை சட்டமன்ற தொகுதி இணைசெயலாளர் சாம்சன் ஆசிர்ராஜ், நாங்குநேரி தொகுதி சட்டமன்ற செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ் மற்றும் நிர்வாகிகள் ராஜபிரபு, முண்டசாமி, லெனின், இசக்கிராஜா சர்மா, வேல்பாண்டியன், மனோகரன், செல்வகணபதி, செல்வபிரதீப், தமிழ்செல்வி, பாலசுப்பிரமணியன், மகாராஜன், வக்கீல் பீர்முகைதீன், அருள்இமானுவேல், ஜெய்வெங்கட், காஜாமைதீன், கிருஷ்ணன், சுந்தர்ராஜ், காசிவிஸ்வநாதன், ஜெகநாதன் என்ற ஜெகன், துரைப்பாண்டியன், டோமினிக் பாண்டி, நம்பிராஜன், பரமசிவன், பீர்முகம்மது, கந்தையா, லெட்சுமணன், ராமமூர்த்தி, சாம்சன் சுபாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூரில் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் பேரணி நடந்தது.
    • அண்ணா சிலைக்கும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நகரில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் புதிய மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் மற்றும் சார்பு அணிக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தும் வகையில் பேரணி நடந்தது. காந்தி சிலையில் இருந்து நடை பயணமாக புறப்பட்டு அண்ணா சாலை வரை ஊர்வலம் சென்றது. அண்ணா சிலைக்கும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். இதில் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் பங்கேற்று பேசினார்.

    மாவட்டச் செயலாளர் கே.ஆர். அசோகன், தொகுதி செயலாளர் பத்மநாபன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேல், மாவட்ட துணை செயலாளர் தமிழரசி, ஒன்றிய செயலாளர்கள் சிவசுப்பிரமணியன், எஸ்.வி. நாகராஜன், தேவேந்திரன், கணேசன், உதயகுமார், விஜயராஜ், சித்திரை செல்வம், செந்தில்குமார், கண்ணன், முத்துக்குமார், முருகேசன், சுப்பிரமணியன், பாண்டி, பேரூர் செயலாளர்கள் ஜெயராமன், கருப்பையா, ராஜு, ராமகிருஷ்ணன், திருஞானம், ஆனந்தராஜ், விஜயமணி, பவானி, சரவணன், மோகன், கணேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் நகர செயலாளர் எம்.முருகேசன் செய்திருந்தார்.

    • அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியின் நெல்லை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளராக பதவி வகித்து வருபவர் வக்கீல் முத்துக்குமார்.
    • பாளையங்கோட்டை வீட்டு வசதி கூட்டுறவு கடன் சங்க தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறார்.

    நெல்லை:

    அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் ஜெயலலிதா பேரவை மாநில இணைச்செயலாளராக பாளையங்கோட்டை வீட்டு வசதி கூட்டுறவு கடன் சங்க தலைவர் வக்கீல் முத்துக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியின் நெல்லை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளராக பதவி வகித்து வருபவர் வக்கீல் முத்துக்குமார். இவர் திருநெல்வேலி பாளையங்கோட்டை வீட்டு வசதி கூட்டுறவு கடன் சங்க தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறார். இந்த கூட்டுறவு சங்கம் கடனில் இருந்ததை தற்போது கடன் இல்லாத சங்கமாக முத்துக்குமார் மாற்றி உள்ளார். மேலும் நிரந்தர வைப்பு தொகை மற்றும் நகை கடன் என சுமார் 20 ஆயிரம் பயனாளிகள் இச்சங்கத்தில் உள்ளனர். மாணவர் பருவத்தில் இருந்தே அ.தி.மு.கவில் இருந்து வரும் முத்துக்குமார் தற்போது மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    ×