என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் பேரணி
- திருப்பத்தூரில் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் பேரணி நடந்தது.
- அண்ணா சிலைக்கும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நகரில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் புதிய மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் மற்றும் சார்பு அணிக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தும் வகையில் பேரணி நடந்தது. காந்தி சிலையில் இருந்து நடை பயணமாக புறப்பட்டு அண்ணா சாலை வரை ஊர்வலம் சென்றது. அண்ணா சிலைக்கும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். இதில் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் பங்கேற்று பேசினார்.
மாவட்டச் செயலாளர் கே.ஆர். அசோகன், தொகுதி செயலாளர் பத்மநாபன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேல், மாவட்ட துணை செயலாளர் தமிழரசி, ஒன்றிய செயலாளர்கள் சிவசுப்பிரமணியன், எஸ்.வி. நாகராஜன், தேவேந்திரன், கணேசன், உதயகுமார், விஜயராஜ், சித்திரை செல்வம், செந்தில்குமார், கண்ணன், முத்துக்குமார், முருகேசன், சுப்பிரமணியன், பாண்டி, பேரூர் செயலாளர்கள் ஜெயராமன், கருப்பையா, ராஜு, ராமகிருஷ்ணன், திருஞானம், ஆனந்தராஜ், விஜயமணி, பவானி, சரவணன், மோகன், கணேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் நகர செயலாளர் எம்.முருகேசன் செய்திருந்தார்.