என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
பெரியகுளத்தில் போதை பொருள் விற்பனையை கட்டுப்படுத்த ஆலோசனை கூட்டம்
- நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை அதிகம் நடைபெற்று வருகிறது.
- இதனால் போதை ஆசாமிகளால் பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.
பெரியகுளம்:
தேனிமாவட்டம் பெரியகுளம் வருவாய் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெரியகுளம் நகராட்சி, 5 பேரூராட்சி மற்றும் 17 ஊராட்சி பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுப்பத ற்காக பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா தலைமையில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களின் கருத்து கேட்பு கூட்டம் நடை பெற்றது.
இந்த கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மன்ற உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்கள் பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்து காவல்துறையிடம் தெரிவித்தனர். இதில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை அதிகம் நடைபெறுவ தாகவும், இதனால் போதை ஆசாமிகளால் பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.
மேலும் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக மக்கள் கூடும் இடங்களான தென்கரை காந்தி சிலை நிறுத்தம், வைகை அணை சாலை உள்ளிட்ட பகுதிகளில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் அனுமதி பெற்று மது விற்பனை நடைபெற்று வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க முறைகேடாக கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்ப னையை தடுத்து நிறுத்த இரவு ரோந்து பணியையும் காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும், முக்கிய இடங்களில் புற காவல் நிலையங்கள் அமைத்து சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த வேண்டும் எனவும் கூட்டத்தில் பங்கேற்ற நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.






