search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞரணி மாநாடு"

    • இளமையும், சுறுசுறுப்பும் கொண்டவர் உதயநிதி.
    • பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை எளிதில் எதிர்கொள்ளும் அளவுக்கு உதயநிதியின் பேச்சு அமைந்து உள்ளதாக தெரிவித்தார்.

    தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.

    இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி பொறுப்புக்கு வந்த பிறகு நடத்திய மாநாடு என்பதால் இந்த மாநாடு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    சுமார் 5 லட்சம் பேர் திரண்ட இந்த மாநாடு அமைச்சர் உதயநிதியின் திறமையை வெளிப்படுத்தும் மாநாடாக அமைந்தது. இந்த மாநாட்டுக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது வதந்தி என்று மாநாட்டுக்கு முன்பே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெளிவுப்படுத்தி இருந்தார்.

    ஆனாலும் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் அமைச்சர் உதயநிதியின் பேச்சையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சையும் கூர்ந்து கவனித்தனர். மாநாட்டின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தலைவர்களது கட்அவுட்டுகளில் பெரியார், அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் உதயநிதி ஸ்டாலின் படமும் இடம்பெற்றிருந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற இளைஞரணியினர் மட்டுமின்றி கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த படியாக அடுத்த தலைவராக உதயநிதியை புகழ்ந்தனர். இளமையும், சுறுசுறுப்பும் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின், இந்துத்துவா அரசியலை எதிர்கொள்ள துணிவுமிக்க தலைவராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார். இப்படிப்பட்ட தலைவர்தான் தேவை என்று புகழ்ந்தனர். சேலம் மாவட்ட இளைஞரணி உறுப்பினர் ஆர்.செல்வராஜ் கூறுகையில், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி விரைவில் கிடைக்கும் என்று நம்புவதாக தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

    இதேபோல் பெரும்பாக்கத்தை சேர்ந்த டி.ஆர்.முருகேசன் என்பவரும் உதயநிதியின் அரசியல் திறமையை வெளிப்படுத்தி புகழ்ந்தார். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை எளிதில் எதிர்கொள்ளும் அளவுக்கு உதயநிதியின் பேச்சு அமைந்து உள்ளதாக தெரிவித்தார்.

    தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி பேசுகையில், அரசியலில் மறைந்த தலைவர் கலைஞர் காட்டிய வழியில் நடந்தோம். அதனை தொடர்ந்து தளபதி மு.க. ஸ்டாலினை ஏற்றுக் கொண் டோம். இப்போது உதய நிதியை துணை முதல்வராக்க விரும்புகிறோம்.

    உதயநிதியின் வருகையால் தி.மு.க. இளைஞரணி புத்துணர்ச்சி பெற்றுள்ளது என்றும் கருத்து தெரிவித்தார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது உதயநிதி பிரசாரம் செய்ததை விட இப்போது அவரது பிரசாரம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றும் அவரது உழைப்புக்கு கண்டிப்பாக அங்கீகாரம் கிடைக்கும் என்றும் நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.

    மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த மாநாடு தி.மு.க.வுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. அவ்வளவு சிறப்பாக மாநாட்டை நடத்தி காட்டியிருக்கிறீர்கள். உங்கள் உழைப்புக்கு உரிய பலன் வந்து சேரும் என்று பெருமையுடன் கூறினார்.

    மாநாட்டில் அமைச்சர் உதயநிதியை போல் அவரது மகனான இன்பநிதியும் வெள்ளை நிற டிசர்ட் அணிந்து பங்கேற்றிருந்தார். அவரது வருகையும் மாநாட்டில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.

    • 1.5 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமான முறையில் பந்தல்.
    • 9 லட்சம் சதுரஅடி பரப்பளவில் மாநாட்டிற்கான ஏற்பாடு.

    சேலத்தில் தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டையொட்டி சேலம் மாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் விழாக்கோமாக காட்சியளித்தது.

    சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் 9 லட்சம் சதுரஅடி பரப்பளவில் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

    1.5 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமான முறையில் பந்தல் அமைக்கப்பட்டது. மாநாட்டு திடலில் லட்சக்கணக்கானோர் மாநாட்டை கண்டுகளிக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இந்நிலையில், திமுக இளைஞரணி மாநாட்டுக்காக சேலத்தில் அமைக்கப்பட்ட அரங்கம், உலகின் மிகப்பெரிய 'ற்காலிக மாநாட்டு அரங்கம்' என்ற Unique World Records புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

    இந்த அரங்கம் 9.50 லட்சம் சதுர அடி பரப்பளவில், 45 நாட்களில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மாநாட்டை பார்க்கும்போது 20 வயது குறைந்ததுபோல் இருக்கிறது.
    • நமது மொழி, கலாச்சாரத்தை அழிக்க பாஜக முயற்சிக்கிறது.

    சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திமுக இளைஞரணியை பார்க்குமபோது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தெற்கில் விடியல் பிறந்தது போல், விரைவில் இந்தியாவிற்கு விடியல் பிறக்கும்.

    மாநாட்டை பார்க்கும்போது 20 வயது குறைந்ததுபோல் இருக்கிறது. 1980ல் மதுரையில் இளைஞரணி தொடங்கப்பட்டது. எனக்கு அப்போது 30 வயது. என்னை வளர்த்த, உருவாக்கிய இடம் இளைஞரணி. 1980ல் முதல் கட்சிக்குள் புதிய ரத்தத்தை பாய்ச்சியது இளைஞரணி. திமுக இளைஞரணி எனது தாய் வீடு.

    மாநாட்டை சிறப்பாக நடத்தி காட்டுபவர் அமைச்சர் நேரு. நேரு என்றால் மாநாடு, மாநாடு என்றால் நேரு.

    நமது வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். திமுக 6வது முறையாக ஆட்சியில் உள்ளது. நவீன தமிழகத்தை உருவாக்கி கொடுத்த சிற்பி கலைஞர். 

    முன்பு நாடுகள் 3 முதல் 4 நாட்கள் நடக்கும். தற்போகது, தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. 75 ஆண்டுகள் ஆகியும் திமுக கம்பீரமாக நிற்க காரணம் நமது கொள்கை என்ற உரம்.

    நமது மொழி, கலாச்சாரத்தை அழிக்க பாஜக முயற்சிக்கிறது.

    மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது நமது முழுக்கம். எல்லா மாநிலங்களுக்கும் மாநில சுயாட்சி வேண்டுமென்பது எங்கள் கோரிக்கை. பாஜக ஆளும் மாநிலங்களுக்கும் மாநில சுயாட்சி தேவை.

    எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் மாநில அரசுகளிடம் ஆலோசனை கேட்பது இல்லை. மத்திய அரசுக்கு பணம் தரும் ஏடிஎம் இயந்திரங்களாக மாநில அரசுகளை மாற்றிவிட்டனர்.

    வெள்ள நிவாரண நிதியை பலமுறை கேட்டும் இன்னும் தரவில்லை. திருக்குறளை சொன்னால், பொங்கல் கொண்டாடினால் போதும் என நினைக்கிறார்கள்.

    தமிழக மக்களை ஏமாற்றுகிறார்கள், இது பெரியார் மண். இங்கு அவர்களது எண்ணம் பலிக்காது.

    கட்சிகளை உடைப்பது, எம்எல்ஏக்களை இழுப்பது, ஆளுநர் மூலம் ஆட்சி செலுத்த பாஜக முயற்சிக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சி என்பது மாநிலங்களை மதிக்கும் ஆட்சியாக இருக்கும்.

    3 மாதங்கள் தேர்தல் பணியாற்றி வெற்றிக்கு உழைக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலுக்காக 3 குழுக்களை ஏற்கனவே அமைத்துவிட்டோம். 5 பேர் கொண்ட குழு 40 தொகுதிகளின் நிர்வாகிகளை அழைத்து அறிவுறுத்துவர். வெற்றி பெறுபவரே பாராளுமன்ற வேட்பாளராக களமிறக்கப்படுவார்.

    நாளை நமதே, நாற்பதும் நமதே என அனைவரும் புறப்படுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இளைஞரணியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சர் இருப்பார்.
    • பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது.

    சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மாநாட்டிற்கு உழைத்த அமைச்சர் நேருக்கு நன்றி. 22 தலைப்புகளில் உரையாற்றிய அனைவருக்கும் நன்றி. திமுக இளைஞரணியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி.

    திமுக இளைஞரணி மாநில மாநாடு 100 சதவீத வெற்றி பெற்றுள்ளது. இந்நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள்.

    சேலம் மாநாடு வரும் தேர்தலுக்கான வெற்றி மாநாடு. பல அணிகள் இருந்தாலும் முதன்மையான அணி இளைஞரணி.

    உழைப்பின் அடிப்படையில் நிர்வாகிகளை நியமனம் செய்தோம். மாவட்ட வாரியாக சென்று இளைஞரணியின் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினோம். 

    இளைஞரணியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சர் இருப்பார். பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது.

    நீட் மிகப் பெரிய உயிர் கொல்லி நோயாக மாறியுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 85 லட்சம் பேரிடம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன.

    கடந்த அதிமுக ஆட்சியின் துணையுடன் தான் மத்திய அரசு நம் உரிமைகளை பறித்தது.

    நம்மிடம் அதிகம் வரியை பெற்றுக்கொண்டு மத்திய அரசு குறைந்த தொகையை தருகிறது. நாம் கேட்ட வெள்ள நிவாரண நிதி மத்திய அரசு வழங்கவில்லை.

    நான் பேசியதற்கு மட்டும் மத்திய நிதியமைச்சர் பாடம் எடுத்தார். மரியாதை கொடுத்து நாம் கேட்ட நிதியை அவர்கள் தரவில்லை.

    தமிழை காக்க உயிரை கொடுக்கவும் தயாராக உள்ளோம். தமிழர்களின் அடையாளத்தை அழிக்க நினைப்பவர்கள், அழிந்து போவார்கள்.

    நாங்கள் எந்த சோதனைக்கும் பயப்பட மாட்டோம். பாஜகவின் உருட்டல் மிரட்டலுக்கு பயப்படும் இயக்கம் திமுக அல்ல.

    திமுக, தொண்டர்களை கைவிட்ட வரலாறு கிடையாது. இந்த இயக்கத்தை நாம் பாதுகாத்தால் தான் சமூக நீதியை பாதுகாக்க முடியும்.

    இந்திய கூட்டணி கைக்காட்டுபவரே அடுத்த பிரதமர். இந்திய கூட்டணி வெற்றி பெற நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

    திமுகவின் தேர்தல் வெற்றியை தமிழக வெற்றியாக மக்கள் கொண்டாடுகின்றனர். முதலமைச்சரின் கனவை நிறைவேற்றி தருவது தான் எங்கள் வேலை.

    திமுக இளைஞரணி மாநாட்டை நாடே உற்று நோக்குகிறது. இது இளைஞர் அணி அல்ல, கலைஞர் அணி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கிறது.
    • வட நாட்டில் உள்ள இருளை அகற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

    சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில் திமுக பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இளைஞர் பட்டாளம் குவிந்ததை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இயக்கத்தின் கொடியை ஏற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி.

    திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கிறது.

    வட நாட்டில் உள்ள இருளை அகற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அந்த இருளை அகற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

    அயோத்தி ராமர் கோவில் திறப்பிற்கு குடியரசு தலைவரை அழைக்காதது குறித்து நான் பேச விரும்பவில்லை. 

    ஒரு கோவிலை முழுமையாக கட்டி முடிக்காமல் திறக்க கூடாது என்கிறது இந்து மதம். ஆனால், இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல், தனது அரசியல் லாபத்திற்காக மட்டும் அவசர அவசரமாக பாஜக கோவிலை திறக்கிறது.

    இதனை தட்டிக் கேட்டால் நமக்கு ஐஸ் கொடுப்பார்கள். ஐஸ் என்பது வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை.

    விரைவில் ஒரு மாற்றம் வர வேண்டும். தமிழகத்தில் மட்டும் வந்தால் போதாது. மக்களால் தான் மாற்றத்தை நிகழ்த்த முடியும். அப்போது தான் நாட்டை காப்பாற்ற முடியும்.

    தமிழகத்தில் 40க்கு 40 வெற்றி பெற்று விடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளைஞரணி மாநாட்டையொட்டி நிகழ்ச்சிகள் இன்றே தொடங்கின.
    • டிரோன் கேமரா கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் வருகிற 21-ந் தேதி (நாளை) மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 5 லட்சத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நடைபெறும் மாநாடு என்பதால் இதை வெற்றி மாநாடாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    இந்த மாநாட்டையொட்டி சென்னையில் இருந்து மாநாட்டுக்கு சுடர் தொடர் ஓட்டம் கடந்த 18ம் தேதி அண்ணாசாலை சிம்சன் சந்திப்பு அருகே காலை 7 மணியளவில் சுடர் தொடர் ஓட்டத்தை இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில், சேலம் மாநாட்டு திடல் முன்பு மாநாட்டு சுடரை மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் மற்றும் துணைச் செயலாளர்கள் பெற்றுக்கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இன்று மாலை ஒப்படைத்தனர்.

    பிறகு, மாநாட்டு சுடரினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒப்படைத்தார்.

    மேலும், இளைஞரணி மாநாட்டையொட்டி நிகழ்ச்சிகள் இன்றே தொடங்கின.

    இதில், டிரோன் கேமரா கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

    ட்ரோன் வாயிலாக வானில் பெரியார், அண்ணா, கருணாநிதி, உதயசூரியன், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உருவங்கள் ஒளிர்ந்தன. 

    • 'மிச்சாங்' புயலால் பெய்த கனமழை-வெள்ளம் காரணமாக சில மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.
    • இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு தேதி மாற்றப்பட்டுள்ளது.

    சென்னை:

    தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    'மிச்சாங்' புயலால் பெய்த கனமழை-வெள்ளம் காரணமாக சில மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி மழை வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், வருகிற 17-ந்தேதி அன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு தேதி மாற்றப்பட்டு வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தி.மு.க.வி.ன் தாய்வீடு திருவள்ளூர் மாவட்டம். இந்த மாவட்டத்தின் உண்மையான செயல்வீரர் அண்ணன் நாசர்.
    • உதயநிதி ஸ்டாலினுக்கு ஆவடி நகர இளைஞர் அணி சார்பில் வெள்ளி செங்கோல் மற்றும் வீரவாள், கருணாநிதி உருவ சிலை பரிசாக அளிக்கப்பட்டது.

    திருநின்றவூர்:

    திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் ஆவடியில் நடைபெற்றது. இதில் மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க.வி.ன் தாய்வீடு திருவள்ளூர் மாவட்டம். இந்த மாவட்டத்தின் உண்மையான செயல்வீரர் அண்ணன் நாசர்.

    தேர்தல் வாக்குறுதியாக நீட்தேர்வை தடை செய்வோம் என்று உறுதி அளித்தது உண்மைதான். கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும்போது நீட் தேர்வு தமிழகத்தில் நடை பெறவில்லை. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது தான் நீட்தேர்வுக்கு கையெழுத்து பெற்று தமிழகத்தில் வந்தது.

    இந்த நீட்தேர்வை தடுக்க சட்டபூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் தி.மு.க. போராடிக் கொண்டு இருக்கிறது.

    டிசம்பர் மாதம் நடை பெறும் சேலம் இளைஞர் அணி மாநில மாநாட்டில் இதே உற்சாகத்துடன் இளைஞர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.

    நீட்தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில் இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

    மதுரையில் நடந்த அ.தி.மு.க.மாநாடு கொள்கையே இல்லாத மாநாடு. மத்திய அரசு பல்வேறு துறைகளில் முறைகேடு செய்து உள்ளது சி.ஏ.ஜி. தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருவள்ளூரில் இருந்து செவ்வாபேட்டை, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழிநெடுக மாலை அணி வித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த னர். விழா மேடைக்கு வந்ததும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆவடி நகர இளைஞர் அணி சார்பில் வெள்ளி செங்கோல் மற்றும் வீரவாள், கருணாநிதி உருவ சிலை பரிசாக அளிக்கப்பட்டது.

    மேலும் திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் சேலம் மாநாட்டிற்கு முதல் தவணையாக ரூ.1 கோடியே 50 லட்சமும், கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் ரூ.1 கோடியும், மேற்கு மாவட்டம் சார்பில் ரூ.1 கோடியும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் ஆவடி மாநகர செயலாளர் சன் பிரகாஷ், திருவேற்காடு நகர செயலாளரும், நகராட்சி தலைவருமான என்.இ.கே.மூர்த்தி, பூந்தமல்லி நகராட்சி தலைவர் காஞ்சனா சுதாகர், திருநின்றவூர் நகர செயலாளர் தி.வை ரவி, திருநின்றவூர் நகராட்சி தலைவர் உஷாராணி ரவி, திருவள்ளூர் மத்திய மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் குமரேசன், திருவள்ளூர் மத்திய மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சரவணன், பூந்தமல்லி ஒன்றிய சேர்மன் பூவை.எம்.ஜெயகுமார், துணை சேர்மன் பரமேஸ் வரி கந்தன், திருமழிசை பேரூராட்சி தலைவர் உ.வடி வேலு, மாவட்ட பிரதிநிதி பூவை. ஜெ.சுதாகர், செவ்வாப்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் டெய்சி ராணி அன்பு, மாவட்ட ஆதி திராவிடர் துணை அமைப்பாளர் அன்பு என்கிற ஆல்பர்ட், கிழக்கு மாவட்ட அமைப்பாளர் கே.வி.லோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்தியாவில் உள்ள கட்சிகளுக்கு முன்னோடி இயக்கமாக தி.மு.க. திகழ வேண்டும்.
    • சேலம் இளைஞரணி மாநாடு ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசினார்.

    மதுரை

    மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர், அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி பேசியதாவது:-

    டிசம்பர் 17-ந் தேதி சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. இதில் மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் 20,625 இளைஞரணி செயல் வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

    சேலம் இளைஞரணி மாநாடு இந்தியாவில் உள்ள மற்ற கட்சிகளுக்கு முன்னோடி இயக்கமாக தி.மு.க. இயக்கம் திகழ்கின்ற வகையில் சிறப்புடன் நடைபெறும்.

    செப்டம்பர் 20-ந்தேதி மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மேலூரில் மூத்த முன்னோடிகள் 3 ஆயிரம் தொண்டர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொற்கிழி வழங்குகிறார்.

    மேலும் மதுரை கிழக்கு, சோழவந்தான், மேலூர் தொகுதிகளில் ஆகிய 3 தொகுதிகளில் உள்ள மூத்த முன்னோடிகள் 3 ஆயிரம் பேர்களுக்கு பொற்கிழியும், பூத்து கமிட்டி உறுப்பினர்கள் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படு கிறது

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மாவட்ட துணை செய லாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமைச் செயற் குழு உறுப்பினர் கரு.தியாகராஜன், இளைஞரணி மாநில துணை செயலாளர் ஜி.பி.ராஜா, மாணவரணி மாவட்ட செயலாளர் மருதுபாண்டி, பகுதி செயலாளர் சசிகுமார், ஒன்றிய செயலாளர்கள் ரகுபதி, சிறைச்செல்வன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கலாநிதி, ஒன்றிய சேர்மன் வீரராகவன், இலக்கிய அணி நேருபாண்டி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அழகு பாண்டி, துணை அமைப்பா ளர்கள் வைகை மருது, இளங்கோ, பேரூர் செயலாளர் வாடிப்பட்டி பால்பாண்டி,நகர் செயலாளர் மேலூர் யாசின், விவசாய தொழி லாளர் அணி செயலாளர் ஒத்தக்கடை சரவணன், மாநகராட்சி கவுன்சிலர்கள் செல்வ கணபதி, பாபு, மகளிர் அணி மாவட்ட செயலாளர் உமா சிங்கத்தேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×