search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
    X

    தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    • தி.மு.க.வி.ன் தாய்வீடு திருவள்ளூர் மாவட்டம். இந்த மாவட்டத்தின் உண்மையான செயல்வீரர் அண்ணன் நாசர்.
    • உதயநிதி ஸ்டாலினுக்கு ஆவடி நகர இளைஞர் அணி சார்பில் வெள்ளி செங்கோல் மற்றும் வீரவாள், கருணாநிதி உருவ சிலை பரிசாக அளிக்கப்பட்டது.

    திருநின்றவூர்:

    திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் ஆவடியில் நடைபெற்றது. இதில் மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க.வி.ன் தாய்வீடு திருவள்ளூர் மாவட்டம். இந்த மாவட்டத்தின் உண்மையான செயல்வீரர் அண்ணன் நாசர்.

    தேர்தல் வாக்குறுதியாக நீட்தேர்வை தடை செய்வோம் என்று உறுதி அளித்தது உண்மைதான். கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும்போது நீட் தேர்வு தமிழகத்தில் நடை பெறவில்லை. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது தான் நீட்தேர்வுக்கு கையெழுத்து பெற்று தமிழகத்தில் வந்தது.

    இந்த நீட்தேர்வை தடுக்க சட்டபூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் தி.மு.க. போராடிக் கொண்டு இருக்கிறது.

    டிசம்பர் மாதம் நடை பெறும் சேலம் இளைஞர் அணி மாநில மாநாட்டில் இதே உற்சாகத்துடன் இளைஞர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.

    நீட்தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில் இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

    மதுரையில் நடந்த அ.தி.மு.க.மாநாடு கொள்கையே இல்லாத மாநாடு. மத்திய அரசு பல்வேறு துறைகளில் முறைகேடு செய்து உள்ளது சி.ஏ.ஜி. தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திருவள்ளூரில் இருந்து செவ்வாபேட்டை, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழிநெடுக மாலை அணி வித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த னர். விழா மேடைக்கு வந்ததும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆவடி நகர இளைஞர் அணி சார்பில் வெள்ளி செங்கோல் மற்றும் வீரவாள், கருணாநிதி உருவ சிலை பரிசாக அளிக்கப்பட்டது.

    மேலும் திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் சேலம் மாநாட்டிற்கு முதல் தவணையாக ரூ.1 கோடியே 50 லட்சமும், கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் ரூ.1 கோடியும், மேற்கு மாவட்டம் சார்பில் ரூ.1 கோடியும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் ஆவடி மாநகர செயலாளர் சன் பிரகாஷ், திருவேற்காடு நகர செயலாளரும், நகராட்சி தலைவருமான என்.இ.கே.மூர்த்தி, பூந்தமல்லி நகராட்சி தலைவர் காஞ்சனா சுதாகர், திருநின்றவூர் நகர செயலாளர் தி.வை ரவி, திருநின்றவூர் நகராட்சி தலைவர் உஷாராணி ரவி, திருவள்ளூர் மத்திய மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் குமரேசன், திருவள்ளூர் மத்திய மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சரவணன், பூந்தமல்லி ஒன்றிய சேர்மன் பூவை.எம்.ஜெயகுமார், துணை சேர்மன் பரமேஸ் வரி கந்தன், திருமழிசை பேரூராட்சி தலைவர் உ.வடி வேலு, மாவட்ட பிரதிநிதி பூவை. ஜெ.சுதாகர், செவ்வாப்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் டெய்சி ராணி அன்பு, மாவட்ட ஆதி திராவிடர் துணை அமைப்பாளர் அன்பு என்கிற ஆல்பர்ட், கிழக்கு மாவட்ட அமைப்பாளர் கே.வி.லோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×