search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "competitions"

    • 2024-ம் ஆண்டிற்கான சர்வதேச திறன் போட்டிகள் (வேல்ட் ஸ்கில்ஸ் காம்ப்ப டிஷன்ஸ் 2024) பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் நகரில் நடைபெற உள்ளது.
    • டிஎன் ஸ்கில்ஸ்-2023 என்ற தேசிய அளவிலான திறன் போட்டிகள் 55 திறன் பிரிவுகளுக்கு நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2024-ம் ஆண்டிற்கான சர்வதேச திறன் போட்டிகள் (வேல்ட் ஸ்கில்ஸ் காம்ப்ப டிஷன்ஸ் 2024) பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் நகரில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னோடியாக டிஎன் ஸ்கில்ஸ்-2023 என்ற தேசிய அளவிலான திறன் போட்டிகள் 55 திறன் பிரிவுகளுக்கு நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் கலந்து கொள்ளுவதற்கான தகுதி வயது வரம்பு மட்டுமே ஆகும். 1.1.2002க்கு பின் பிறந்த வர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். இன்பர் மேஷன் நெட்வொர்க் கேபிளிங், மெக்கட்ரானிக்ஸ் போன்ற திறன் போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளர் களின் வயது வரம்பு 25 வயதிற்கு மேல் இருக்க கூடாது.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், மருத்துவம், மருத்துவம் சார்ந்த, என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல், பாலி டெக்னிக், ஐடிஐ பள்ளிகளில் படித்த மற்றும் படிக்கும் மாணவ மாணவிகளும், தொழில் நிறுவனங்களில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த தொழிற்பழகுநர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தகுதியான தனி நபர்களும் இப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்.

    திறன் போட்டியில் கலந்துகொள்ள விருப்ப முள்ள போட்டியாளர்கள் தங்களது விவரங்களை https://naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற வெப்சைட் மூலம் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப் பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள திறன் பயிற்சி அவலக உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு விபரங்கள் அறியலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • வயதுவரம்பு 1.1.1999 அன்றும், அதற்கு பிறகும் பிறந்திருக்க வேண்டும்.
    • 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரான்ஸில் உள்ள லியான் நகரில் செப்டம்பர் 2024-ம் ஆண்டு சர்வதேச திறன் போட்டி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள ஏதுவாக தொடக்க நிலையில் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்தப்படு கிறது.

    இதில் பங்கேற்க naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளத்தில் தகுதி வாய்ந்த விண்ணப்ப தாரர்கள் விண்ணப்பிக்க லாம். இதில் 55 தொழிற்பிரி வுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற உள்ள இப்போட்டிக்கு விண்ணப் பிக்க வருகிற 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    இதற்கான வயதுவரம்பு 1.1.1999 அன்றும், அதற்கு பிறகும் பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளுக்கு 1.1.2002 அன்றும், அதற்கு பிறகும் பிறந்தவர்கள் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

    இதற்கான கல்வித்தகுதி 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள், படித்து கொண்டிருப்பவர்கள், தொழிற்பயிற்சி நிலையம், தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் படித்து கொண்டிருப்பவர்கள், தொழிற்சாலைகளில் பணியில் உள்ளவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். இதுதொடர்பான விவரங்களை இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் விபரங்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரிடம் நேரிலோ, அல்லது 04365-250126 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடக்கிறது.
    • உதவிஆணையர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    வள்ளலாரின் முப்பெரும் விழாவினை முன்னிட்டு மதுரை இந்து சமய அறநிலை யத்துறை இணை ஆணையர் மண்டலம் சார்பில் ஜூலை 2-ந் தேதி வள்ளலாரின் முப்பெரும் விழா அருப்புக்கோட்டை சொக்கநாதர் திருக்கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    ்இதற்கு முன்னோடியாக விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளும் வள்ளலாரின் வாழ்க்கை மற்றும் பாடல்கள் குறித்து பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, பாடல் போட்டி, ஓவியம் வரைதல் ஆகிய போட்டிகள் விருதுநகர் கே.வி.எஸ். வித்தியாசாலை மேல்நிலைப்பள்ளியில் வருகிற 20-ந் தேதி காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு ஜூலை 2-ந் தேதி நடைபெறும் வள்ளலார் முப்பெரும் விழாவின் போது பரிசுகள் வழங்கப்படும். இதுபற்றிய கூடுதல் விவரங்களை விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    இந்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ரங்கோலி போட்டி மன்னார்குடியில் நடைபெற்றது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்ச கத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் ஜி-20 கல்விப் பணிக்குழு வின் பொதுமக்கள் பங்கேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதன் ஒருபகுதியாக ரங்கோலி போட்டி மன்னார்குடியில் மக்கள் கல்வி நிறுவன தலைவர் கௌசல்யா தலைமையில் நடைபெற்றது.

    திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பாலகணேஷ் முன்னிலை வகித்தார்.

    மகாதேவபட்டினம் ஒன்றிய குழு உறுப்பினர் பாரதி மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்க ளுக்கு பரிசு வழங்கி பாராட்டி னார்.

    நிகழ்ச்சியில் அலு வலர்கள் திருலோகச்சந்தர் , கனகதுர்க்கா , மனோஜ் , பயிற்றுனர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கோடை கால நிகழ்ச்சிகள் மே 2-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • நேற்று நடந்த முகாமில் மொத்தம் 110 போ் கலந்து கொண்டனர்.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூா் வெலிங்டன் ராணுவ முகாமில் குழந்தைகளுக்கான 10 நாள் கோடை கால சாகச முகாம் நடந்தது.

    இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்றனர். ஆண்டுதோறும் வெலிங்டன் ராணுவ முகாம் சாா்பில் கோடைக்கால நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    அதுபோல இந்த ஆண்டிற்கான கோடை கால நிகழ்ச்சிகள் மே 2-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று நடந்த முகாமில் மொத்தம் 110 போ் கலந்து கொண்டனர்.

    இதில் குதிரை சவாரி, ஏா் ரைபிள் மற்றும் பிஸ்டல் ஷூட்டிங், ட்ரெக்கிங், படகு சவாரி, உடற்பயிற்சி என பல்வேறு சாகச போட்டிகள் நடந்தது. மேலும், நாய்களை கையாளுதல், காயம்பட்ட விலங்குகளை பராமரித்தல் மற்றும் முதியோா் இல்லத்தில் ஒரு நாள் முழுவதும் சேவையில் ஈடுபடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரக்கன்று நடும் நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்றன.

    குழந்தைகளை பொறுப்புள்ள குடிமகனாக மாற்றும் வகையில் சாகச உணா்வையும், சமூக விழிப்புணா்வையும் ஏற்படுத்த இந்த முகாம் நடத்தப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

    • போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்.
    • கிராமிய நடன போட்டியில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரத்து 500, 3-ம் பரிசாக ரூ.ஆயிரத்து 250 வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் தெய்வசிகாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

     இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் நேருயுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான கலைவிழா போட்டிகள் வருகிற ஜூன் 10-ந் தேதி நடைபெற உள்ளது. பங்கேற்க விருப்பம் உள்வர்கள் பெரியார் நகர் 4-வது குறுக்கு தெரு சுபாஷ் சந்திரபோஸ் உயர்நிலைப்பள்ளி முதல் மாடியில் உள்ள நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் நேரடியாக தொட்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து வருகிற 31-ந் தேதிக்குள் பதிவு செய்யலாம்.

    போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் உணவு, சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்கள் மாநில அளவிலான, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க பரிந்துரைக்கப்படுவர்.

    ஓவியம், கவிதை, புகைப்படம் எடுத்தல் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.750, 3-ம் பரிசாக ரூ.500, பேச்சுப்போட்டியில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.ஆயிரம் வழங்கப்படும்.

    கிராமிய நடன போட்டியில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரத்து 500, 3-ம் பரிசாக ரூ.ஆயிரத்து 250 வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    விளையாட்டு விடுதி, மையங்களில் சேர தேர்வு போட்டிகள் நடக்கிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை, திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சா வூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாத புரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் ஆகிய இடங்களில் மாணவர்களு க்கான விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது.

    மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி, சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவர்க ளுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை நேரு விளை யாட்டு அரங்கம், திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் நெல்லை யிலும், மாணவிகளுக்கான முதன்மை நிலை விளை யாட்டு மைய விடுதி சென்னை நேரு விளை யாட்டு அரங்கம் மற்றும் ஈரோட்டிலும் செயல்பட்டு வருகிறது.

    மாணவ-மாணவி களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது. விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்காக 7, 8, 9 மற்றும் பிளஸ்-1 வகுப்பு, முதன்மை நிலை விளை யாட்டு மையங்களில் 6 ,7, 8-ம் வகுப்பு சேர்க்கையும் நடைபெறும். மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) காலை 7 மணி அளவில் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்பதை திவிறக்கம் செய்து விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேர்வு போட்டியின்போது கொண்டு வர வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையத்தின் 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தேர்வு போட்டிகளில் கலந்து கொள்ள 24-ந் தேதி காலை 7 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவிகளுக்கு 19 வகையான போட்டிகள் நடைபெற உள்ளன.
    • விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள் 23-ந்தேதியாகும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரூஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத் துறையின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதற்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் 24.05.2023 அன்று காலை 8.00 மணிக்கு திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

    மாணவர்களுக்கான தேர்வுப்போட்டிகள் கீழ்க ண்ட விளையாட்டுக்களில் நடைபெறும் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட 20 வகையான போட்டிகளும், மாணவியர்களுக்கு 19 வகையான போட்டிகளும் நடைபெற உள்ளது.

    மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டி களில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ, மாணவியர்கள் விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தினை 16.05.2023 முதல் விண்ணப்பிக்கலாம்.

    ஆன்லைன் விண்ணப்ப த்தினை பூர்த்தி செய்திடு வதற்கான கடைசி நாள் 23.04.2023 மாலை 5.00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    ஆன்லைன் விண்ணப்ப ங்கள் மட்டுமே ஏற்றுக்கொ ள்ளப்படும்.

    மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைப்பேசி 9514000777 என்ற எண்ணிலும்,

    மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண் 04366-290620-லும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தண்டலைச்சேரி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா நடைப்பெற்றது.
    • கல்லூரி படிப்பு என்பது நமது வாழ்க்கையின் ஆதாரம், எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அங்கம்மாள் தலைமை வகித்தார்.

    மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தமயந்தி முன்னிலை வகித்தார்.

    பேராசிரியர் திலகர் வரவேற்றார்.

    தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக அயல்நாட்டு தமிழ் கல்வித் துறை பேராசிரியர் வெற்றிச்செல்வன் கருத்துரையாற்றினார். நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், ஜேஸீஸ் தலைவர் செந்தில், வழக்கறிஞர் அரசு தாயுமானவன் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

    சிறப்பு அழைப்பாளராக மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்துக்கொண்டு பேசு கையில், மாணவ பருவம் என்பது மகிழ்ச்சியானது மட்டுமல்ல பொறுப்பு மிகுந்ததாகும்.

    கல்லூரி படிப்பு என்பது நமது வாழ்க்கையின் ஆதாரம், எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியது. அரசு வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் போட்டி தேர்வு எழுதவேண்டும்.

    அதற்கான மனநிலையை இப்போதே ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

    அதற்காக தயார் நிலையில் நாம் இருக்க வேண்டும்.

    இக்கல்லூரி மேம்பாட்டி ற்காக அரசு மூலம் பல திட்டங்களை செயல்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம்.

    இக்கல்லூரியை சிறப்பு வாய்ந்ததாக மாற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றார்.

    இதையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் தனியார் கம்பெனிகளில் தேர்வு செய்யப்பட்டதற்கான நியமன உத்தரவை வழங்கி னார்கள்.

    மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், பேராசிரியர் அலெக்ஸாண்டர் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

    பேராசிரியர் யோக பிரகாசம் நன்றி கூறினார்.

    பேராசிரியர் பன்னீர்செல்வம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    • தென்காசி மாவட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கல்லூரி மாணவர்க ளிடையே பேச்சாற்றாலையும், படைப் பாற்றாலையும் வளர்க்கும் நோக்கில் தென்காசி மாவட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் வருகிற 19-ந்தேதி காலை 9.30 மணிக்கு குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ- மாணவிகளும் கலந்து கொள்ளலாம்.

    ஒரு கல்லூரியில் இருந்து ஒரு போட்டிக்கு 2 மாணவர்கள் வீதம் 3 போட்டிகளுக்கு 6 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்கள் கல்லூரி முதல்வரின் பரிந்துரையுடன் உரிய படிவத்தினை நிறைவு செய்து இப்போட்டி நடைபெறும் நாளில் அளிக்க வேண்டும்.

    தென்காசி மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

    மேலும் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக இரண்டாம் தளத்தில் செயல்பட்டு வரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

    தென்காசி மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவிகள் இப்போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
    • 28 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 43 ஆயிரத்து 895 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்தி றனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 339 மனுக்கள் பெறப்பட்டன.

    வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    இளையான்குடி வட்டம் கீழாயூர் கிராமத்தில் அரவிந்தன் என்பவர் மின்சாரம் தாக்கி மரணமடைந்ததையொட்டி அவரது வாரிசுதாரருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதித்தொகை ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும், வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரம் மதிப்பீட்டிலான மானியத் தொகையில் பேட்டரி தெளிப்பான்களையும், 3 பயனாளிகளுக்கு மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தலா ரூ.1,465 வீதம் மொத்தம் ரூ.4 ஆயிரத்து 395 மதிப்பீட்டிலான மானியத் தொகையில் பண்ணைக் கருவிகளையும் கலெக்டர் வழங்கினார்.

    மேற்கண்டவை உள்பட மொத்தம் 28 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 43 ஆயிரத்து 895 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி நடந்த கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற 9 மாணவ-மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) சாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பிற கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தன.
    • சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி அணியினர் முதலிடத்தை பிடித்து வெற்றி கேடயத்தை பெற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறை சங்கப்பலகை இலக்கிய மன்றத்தின் சார்பில் "வானம்பாடி 2023" என்ற தலைப்பில் மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தன.

    முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். பேச்சு, கோலம், மருதாணிப் போட்டி, முகஓவியம், நெருப்பின்றி சமைத்தல், காய்கறிகளில் உருவம் அமைத்தல், வினாடி-வினா, மவுன நாடகம், நிலைக்காட்சி, கிராமிய நடனம் உள்ளிட்ட 10 போட்டிகள் நடந்தன.

    இதில் கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த 9 கல்லூரிகளில் இருந்து 220 மாணவர்கள் பங்கேற்றனர். தமிழியல் துறைத்தலைவர் அமுதா வரவேற்றார். தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் பொற்கொடி நன்றி கூறினார். இந்த நிகழ்வை தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் மரியசெல்வி உள்ளிட்ட தமிழியல் துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைந்தனர். ஒட்டு மொத்த புள்ளிகளின் அடிப்படையில் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி அணியினர் முதலிடத்தை பிடித்து வெற்றி கேடயத்தை பெற்றனர்.

    ×