search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரங்கோலி"

    • ரங்கோலி போட்டி மன்னார்குடியில் நடைபெற்றது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்ச கத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் ஜி-20 கல்விப் பணிக்குழு வின் பொதுமக்கள் பங்கேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதன் ஒருபகுதியாக ரங்கோலி போட்டி மன்னார்குடியில் மக்கள் கல்வி நிறுவன தலைவர் கௌசல்யா தலைமையில் நடைபெற்றது.

    திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பாலகணேஷ் முன்னிலை வகித்தார்.

    மகாதேவபட்டினம் ஒன்றிய குழு உறுப்பினர் பாரதி மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்க ளுக்கு பரிசு வழங்கி பாராட்டி னார்.

    நிகழ்ச்சியில் அலு வலர்கள் திருலோகச்சந்தர் , கனகதுர்க்கா , மனோஜ் , பயிற்றுனர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இயக்குனர் வசந்த்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் வாலி மோகன்தாஸ்.
    • இவர் இயக்கத்தில் “ரங்கோலி” என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

    கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக கே.பாபுரெட்டி மற்றும் ஜி.சதீஷ்குமார் தயாரிக்கும் படம் "ரங்கோலி". இயக்குனர் வசந்த்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்த வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இத்திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தில் ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ரங்கோலி

    ஹமரேஷ் நடிகர் உதயா மற்றும் இயக்குனர் விஜய் அவர்களின் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு கேஸ்.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் "ரங்கோலி" திரைப்படம் உருவாகியுள்ளது. பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.


    ரங்கோலி பட போஸ்டர் வெளியிட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

    இதனை திரைப்பிரபலங்களான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அருண் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு, அதர்வா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சதீஷ், வாணி போஜன், நவீன் சந்த்ரா கார்த்திக் ரத்னம் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    • இயக்குனர் வசந்த்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் வாலி மோகன்தாஸ்.
    • இவர் இயக்கத்தில் “ரங்கோலி” என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

    கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக கே.பாபுரெட்டி மற்றும் ஜி.சதீஷ்குமார் தயாரிக்கும் படம் "ரங்கோலி". இயக்குனர் வசந்த்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்த வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இத்திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தில் ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹமரேஷ் நடிகர் உதயா மற்றும் இயக்குனர் விஜய் அவர்களின் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    ரங்கோலி

    ரங்கோலி

    இப்படத்திற்கு இசை-கேஸ்.எஸ்.சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு-மருதநாயகம் ஆகியோர் பணியாற்றுகிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கில் "ரங்கோலி" திரைப்படம் உருவாகியுள்ளது. சென்னை, ஐதராபாத் மற்றும் கேரளாவில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த "ரங்கோலி" படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் சதுரங்க விழிப்புணர்வு ரங்கோலி கோலமிடும் நிகழ்ச்சி நடந்தது.
    • பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    சிவகங்கை

    தமிழகத்தில் முதன்முறையாக தமிழக அரசின் சார்பில் மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது.

    இந்த போட்டிகள் தொடர்பாக பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 12 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழு கூட்டமைப்பைச் சேர்ந்த மகளிர் ஆகியோர் கூட்டாக இணைந்து, விழிப்புணர்வு ரங்கோலி கோலமிடும் நிகழ்ச்சி நடந்தது. அதை மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட அலுவலர் வானதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செஸ் விழிப்புணர்வு ரங்கோலி நிகழ்ச்சி நடந்தது.
    • மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் பார்வையிட்டார்.

    சிவகங்கை

    44-ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் மகளிர் சுய உதவிகுழுவினர்கள் கூட்டாக இணைந்து ரங்கோலி கோலமிடல் நிகழ்ச்சியை நடத்தினர்.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 445 ஊராட்சிகளிலும் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ரங்கோலி கோலமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செஸ் போட்டியின் சிறப்பு அம்சங்கள் குறித்து வண்ண கோலங்களால் விளக்கப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் பார்வையிட்டார். மேலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட அலுவலர் வானதி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணன், உதவி திட்ட அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×