பொதுமக்களுக்கு ரங்கோலி போட்டி

ரங்கோலி போட்டி மன்னார்குடியில் நடைபெற்றது.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. 
ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. 
Published on

திருத்துறைப்பூண்டி:

இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்ச கத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் ஜி-20 கல்விப் பணிக்குழு வின் பொதுமக்கள் பங்கேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாக ரங்கோலி போட்டி மன்னார்குடியில் மக்கள் கல்வி நிறுவன தலைவர் கௌசல்யா தலைமையில் நடைபெற்றது.

திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பாலகணேஷ் முன்னிலை வகித்தார்.

மகாதேவபட்டினம் ஒன்றிய குழு உறுப்பினர் பாரதி மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்க ளுக்கு பரிசு வழங்கி பாராட்டி னார்.

நிகழ்ச்சியில் அலு வலர்கள் திருலோகச்சந்தர் , கனகதுர்க்கா , மனோஜ் , பயிற்றுனர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com