search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "competitions"

    • மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.
    • மாணவர்களுக்கு பொது நிதியில் இருந்து, போக்குவரத்து செலவு மற்றும் தினப்படியாக ரூ.125 வரை வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும், மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப்பயிற்சி அளிக்க உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளி கல்வித்துறை வாயிலாக குடியரசு தினவிழா மற்றும் பாரதியார் பிறந்த தினவிழா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதேபோல, குறுமைய போட்டியைத் தொடர்ந்து மாவட்ட மற்றும் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள், மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் நடப்பு கல்வியாண்டு, குறுமைய போட்டி துவங்கியுள்ளது. மாணவர்களும், ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்க தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் போட்டியை நடத்தும் பள்ளி நிர்வாகமே, மாணவர்களுக்கான சிற்றுண்டி, தண்ணீர், டீ மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான உணவு செலவினங்களை ஏற்க வேண்டும். ஆனால் அரசால் அப்பள்ளிக்கான நிதியை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவதால், அந்தந்த பள்ளித்தலைமையாசிரியர்களே பொது நிதியில் இருந்து செலவுக்கு அளித்து வருகின்றனர். இதனால் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து செலவு மற்றும் தினப்படியை உயர்த்தி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:- மாணவர்களுக்கு பொது நிதியில் இருந்து, போக்குவரத்து செலவு மற்றும் தினப்படியாக ரூ.125 வரை வழங்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் அதிகப்படியான மாணவர்கள் கலந்து கொண்டால், தலைமையாசிரியர்கள் சொந்த செலவில் மாணவர்களை அனுப்பி வைக்க வேண்டிய நிலை உள்ளது.

    நடப்பாண்டு போட்டிகள் துவங்க உள்ள நிலையில் அதற்கான தொகையை அரசால் உயர்த்தி வழங்க வேண்டும். இதேபோல போட்டி நடத்தும் பள்ளி நிர்வாகம், இதற்கான அனைத்து தொகையையும் செலவிட வேண்டும். நிதி விடுவிக்க தாமதம் ஏற்படுவதால் மாணவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் பயணப்படி வழங்குவதில் குழப்பம் நிலவுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப் பள்ளியில் வண்ண புத்தக தினம் கொண்டாடப்பட்டது.
    • மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்தஅண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப் பள்ளியில் போன் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல் நினைவு தினம்,தேசிய வண்ண புத்தகங்கள் தினம், இந்திய தேசிய கொடியை வடிவமைத்த பிங்களி வெங்கையா பிறந்தநாள் ,தமிழ் மொழியின் தூதர் தனிநாயகம் அடிகள் பிறந்தநாள் தினவிழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியை வசந்தா தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் ஆறுமுகம்,பொறுப்பு தலைமையாசிரியர் இரவீந்திரன், ஆசிரியர்கள் சந்திரசேகரன்,சரண்யா, இலக்கியா, விஜயலட்சுமி,ஆனந்தன் பள்ளி மேலாண்மை குழுவினர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆசிரியர்கள் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் மாணவ -மாணவிகளுக்கு ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பாக ஓவியம் வரைந்தவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. 

    • கலைத்திறன் போட்டிகளில் 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
    • வெற்றி பெற்ற எஸ்.ஆர். பள்ளி அணியினருக்கு பாிசு, கேடயம் வழங்கப்பட்டது.

    சுரண்டை:

    தென்காசி மாவட்டம் இலஞ்சி பாரத் மாண்டிசோாி மற்றும் பாரத் வித்யா மந்திா் உள்ளிட்ட பாரத் கல்வி குழுமத்தின் சாா்பில் கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றன. இதில் 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

    போட்டியில் எஸ்.ஆர். பள்ளி குழுநடனம், ஆடையலங்காரம், புதிா் போட்டி, கணித ஒலிம்பியாய்டு, மாஸ்டா் பெகாசஸ் போன்ற போட்டிகளில் முதல் இடத்தையும், வண்ணம் தீட்டுதல், புத்தக உறை தயாாித்தல் போன்ற போட்டிகளில் 2-ம் இடத்தையும், படக்கதை ஒருங்கிணைத்தல், வாா்த்தை விளையாட்டு, குழுப்பாடல், வினாடி-வினா போன்ற போட்டிகளில் 3-வது இடத்தையும் பெற்று இளையோா் பிாிவில் 3-ம் இடமும், ஒட்டுமொத்த அளவில் எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் அணியினா் 2-ம் இடமும் பெற்றனா்.

    வெற்றி பெற்ற எஸ்.ஆர். பள்ளி அணியினருக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்கப்பாிசு, வெற்றிக் கேடயம் மற்றும் சான்றிதழ்களை இலஞ்சி ஆக்ஸஸ் வங்கியின் முதன்மை மேலாளா் மாாியப்பன், பாரத் கல்விக் குழுமத்தின் செயலாளா் காந்திமதி மோகன கிருஷ்ணன் ஆகியோா் இணைந்து வழங்கினா். எஸ்.ஆர். பள்ளி செயலருக்கு சிறந்த பள்ளி முதல்வருக்கான விருது வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவா்களை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவ பபிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவ டிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா, தலைமை ஆசிாியா் மாாிக்கனி ஆகியோா் பாராட்டினா்.

    • மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு, கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படும்.
    • நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்-ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே திருவண்டார் கோவில் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டா டப்பட்டது.பள்ளி தலைவர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் மிஸ்டிகன் ஆண்டோ ரிச்சர்ட் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ரமேஷ் வரவேற்றார்.

    விவிழாவையொட்டி மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு, கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்-ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கபட்பட உள்ளன.
    • நாளை காலை 9.30 மணிக்கு மயிலாடுதுறை புனித சேவியர் பள்ளியில் நடைபெற உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சராக பேரறிஞர் அண்ணா இருந்தபோது தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என ஜூலை 18-ந்தேதி பெயர் சூட்டினார். அந்த நாளினை "தமிழ்நாடு நாள் விழாவாக" இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இவ்விழாவை கொண்டாடும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட த்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்த ப்பட்டு, வெற்றிபெறும் மாணவர்க ளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கபட்பட உள்ளன.

    அந்த வகையில், மாணவர்களுக்கான போட்டிகள் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு மயிலாடுதுறை புனித சேவியர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

    போட்டிகளுக்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்ப ட்டுள்ளது. வட்டாரக் கல்வி அலுவலர்கள் அவரவர் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் முதற்கட்டமாக கீழ்நிலையில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி வட்டாரத்திற்கு 10 பேர் வீதம் மாணவர்களை தேர்வு செய்து மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்குமாறு தெரிவிக்க ப்பட்டுள்ளது. இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும், விபரங்களுக்கு 74024 38667 என்ற கைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
    • தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் என்றார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார்.

    ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமலிங்கம், ஆசிரியர் சங்க செயலாளர் முகமது ரபீக், ஆசிரியர்கள் தெய்வ சகாயம், தமிழ்ச்செல்வி, உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆசிரியர் சிவராமன் வரவேற்றார்.

    ஓய்வு பெற்ற ஆசிரியர் தேன் அமுத சொல்வேந்தர் சாகுல் ஹமீது இலக்கிய மன்ற விழாவினை தொடக்கி வைத்து பேசும்போது:-

    இலக்கியம் என்பது விரிந்த பொருளில் எழுதிய அனைத்தையும் குறிக்கும்.

    இந்த வரையறையின் கீழ் இலக்கியத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

    தமிழ் இலக்கியம் சுமார் 2000 வருடங்கள் பழமையானது.

    இலக்கிய வளமும் தொடர்ச்சியும் கொண்ட ஒரு மொழியாகும். எனினும், தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலானவை, இன்பியல் இலக்கியங்கள்.

    தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் என்றார்.

    இதையடுத்து நிகழ்ச்சியில் ஜூன் மாதம் விடுப்பு எடுக்காமல் வருகை புரிந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பேனாக்கள் பரிசாக வழங்கப்பட்டது.

    இதில் ஆசிரியர்கள் விஜயகுமார், பாலசுப்பிரமணியன், பிரபாகரன், அன்புமணி, அலுவலர்கள் குமார், சுகந்தி, முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், செல்வம், ஆடின் மெடோனா, சுந்தர், அறிவழகன், அஜிதா கனி, மில்லர் ஆகியோர் செய்து இருந்தனர்.

    ஆசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.

    • நகராட்சி பள்ளியில் பாரதியார் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா நடைபெற்றது.
    • மாணவர்களின் இயல், இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி கூட்டுறவு அர்பன் பேங்க் நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் பாரதியார் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது.

    பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராசுப்பிபிள்ளை,

    நகர மன்ற உறுப்பினர் ஶ்ரீதர் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினர். மாணவர்களின் இயல், இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பல்வேறு இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற,

    பொதுத்தேர்வில் தமிழ்ப்பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு

    நூல்கள் நினைவுப்பரிசாக வழங்கபட்டன.

    பிற துறை ஆசிரியர்கள் வாழ்த்துரையாற்றினர்.

    பள்ளியின் முதுகலை த்தமிழாசிரியர் ராசகணேசன் வரவேற்பு ரையாற்றினார்.

    தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் உயரிய விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது நல்லாசிரியர் விருது பெற்றமைக்காக பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் முனைவர் ராசகணேசன் கவுரவி க்கப்பட்டார்.

    முடிவில் பட்டதாரி தமிழாசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    • மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளி மாணவ விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • மாணவகளுக்கு பரிசளிப்பு விழா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகவளாகத்தில் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ். நிஷா தலைமை தாங்கி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:-

    சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியபோட்டி, பேச்சுபோட்டி, கட்டுரைபோட்டி உள்ளிட்ட ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    கடந்த இரண்டு வருடத்தில் 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1 லட்சத்து 83 ஆயிரத்து 386 லிட்டர் சட்டத்திற்கு புறம்பாக கடத்திவரப்பட்ட மதுபானங்கள், சாரயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    50 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 46 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    வெளி மாநிலம் காரைக்கால் மாவட்ட த்திலிருந்து சாராயம் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதை தடுக்கும் வகையில் நண்டலாறு, நல்லாடை, ஆயப்பாடி ஆகிய இடங்களில் காவல் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணி க்கப்பட்டு வருகிறது.

    மேலும் கஞ்சா விற்பனை செய்தால் அதனை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கும் வகையில் புதிதாக வழங்கப்பட்ட வாட்ஸ்அப் எண் 9626169492 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முடிவில் மாவட்ட குற்ற ஆவண காப்பகம் துணைக் கண்கா ணிப்பாளர் மனோகரன் நன்றி கூறினார்.

    • ஆண்டவர் செவிலியர் கல்லூரியில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.
    • 3 பிரிவுகளில் தனித்தனியே முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட உள்ளன.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே படைப்பர்றறலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் மாவட்ட நிலையில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு அடுத்த மாதம் (ஜூலை) 4-ந் தேதி காலை 9.15 மணிக்கு நாகை சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியிலும், கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு 5-ந் தேதி காலை 9.30 மணிக்கு நாகை அருகே பொரவச்சேரி ஆண்டவர் செவிலியர் கல்லூரியிலும் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.

    கவிதை, கட்டுரை (ம) பேச்சு போட்டிக்கு 3 பிரிவுகளில் தனித்தனியே முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளன.

    நாகை மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு நாகப்பட்டினம் முதன்மை கல்வி அலுவலகம் வழியாகவும், கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கல்லூரி மண்டல இணை இயக்குநர் வழியாகவும் சுற்றறிக்கை அனுப்ப பெற்றுள்ளது.

    தமிழ் ஆர்வமுள்ள மாணவர்கள் மேற்கூறியுள்ள போட்டிகளில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாவட்ட ஊசு போட்டிகள் நடந்தது.
    • பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், மாவட்ட ஊசு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடந்தது. இதில்

    100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். தவுல் பாடம், சான்சு பாடம் போன்ற போட்டிகளில் சப்-ஜூனியர், ஜூனியர், யூத் சீனியர் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.

    இதற்கு சென்னை காளிங்கன், திருவண்ணாமலை பெரியசாமி, சிவகங்கை லதா நடுவராக பணியாற்றினர். இந்த போட்டியில் முதலிடத்தை பெற்ற வீரர்கள் ஜூலை மாதம் வந்தவாசியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    • புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றது
    • போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகளை கம்பன் கழகத்தலைவர் ராமச்சந்திரன் வாழ்த்தி வழங்கினார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா நடைபெறுகிறது. இதனையொட்டி தனியார் பள்ளியில் மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, கம்பராமாயண ஒப்புவித்தல் போட்டி மற்றும் ஒவியப்போட்டிகள் நடைபெற்றது. எல்.கே.ஜி, மற்றும் 1-ம் வகுப்பு முதல் கல்லூரி மாணவ, மாணவிகள் வரை கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 50 பேராசிரியர் நடுவர்களாக பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகளை கம்பன் கழகத்தலைவர் ராமச்சந்திரன் வாழ்த்தி வழங்கினார்.

    இந்நிகழ்வில் கம்பன் கழக செயலாளர் சம்பத்குமார், கம்பன் கழக நிர்வாகி பாரதி, கல்வியாளர்கள் கருப்பையா, பழனிச்சாமி, கோவிந்தராஜன், ராமசாமி, முருகையன், பழனியப்பன், செல்லத்துரை குமார், வள்ளியம்மை, கருணாகரன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கம்பன் பெருவிழாவில் பரிசுகள் வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் நகர்மன்றத்தில் 48-வது கம்பன் பெருவிழா அடுத்தமாதம் 10 நாட்கள் நடைபெறுகிறது.

    • தனிதிறன் போட்டிகளுக்கு வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கூறினார்.
    • மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடைபெற உள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், மருத்துவம் சார்ந்த துறை, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படித்த, படித்து கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள், தொழிற்துறை பணியாளர்கள், தகுதி வாய்ந்த தனிநபர்கள் மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    ராமநாதபுரம் மாவட்ட அளவில் மாணவ, மாண விகள், இளைஞர்களுக்கான திறன் போட்டிகள் நடைபெற உள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் நகரில் 2024-ம் ஆண்டுசெப்டம்பர் மாதத்தில் சர்வதேச திறன் போட்டிகள் நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் பங்கேற்க ஏதுவாக தொடக்க நிலையில் மாவட்ட அளவி லான திறன் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் naanmudhalvan.tn.gov.in>tnskills> என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக் கலாம். மேலும் விவரங்களை tnskills; naanmudhalvan.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

    10 துறைகளில் உள்ள 55 தொழிற்பிரிவுகளில் தங்கள் தனித்திறனை வெளிப்ப டுத்தும் விதமாக மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடைபெற உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×