search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்டலைச்சேரி அரசு  கல்லூரியில் முப்பெரும் விழா
    X

    இறுதியாண்டு மாணவிகள் தனியார் கம்பெனிகளில் தேர்வு செய்யப்பட்டதற்கான நியமன உத்தரவை மாரிமுத்து எம்.எல்.ஏ.விடம் வழங்கினார்.

    தண்டலைச்சேரி அரசு கல்லூரியில் முப்பெரும் விழா

    • தண்டலைச்சேரி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா நடைப்பெற்றது.
    • கல்லூரி படிப்பு என்பது நமது வாழ்க்கையின் ஆதாரம், எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அங்கம்மாள் தலைமை வகித்தார்.

    மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தமயந்தி முன்னிலை வகித்தார்.

    பேராசிரியர் திலகர் வரவேற்றார்.

    தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக அயல்நாட்டு தமிழ் கல்வித் துறை பேராசிரியர் வெற்றிச்செல்வன் கருத்துரையாற்றினார். நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், ஜேஸீஸ் தலைவர் செந்தில், வழக்கறிஞர் அரசு தாயுமானவன் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

    சிறப்பு அழைப்பாளராக மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்துக்கொண்டு பேசு கையில், மாணவ பருவம் என்பது மகிழ்ச்சியானது மட்டுமல்ல பொறுப்பு மிகுந்ததாகும்.

    கல்லூரி படிப்பு என்பது நமது வாழ்க்கையின் ஆதாரம், எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியது. அரசு வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் போட்டி தேர்வு எழுதவேண்டும்.

    அதற்கான மனநிலையை இப்போதே ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

    அதற்காக தயார் நிலையில் நாம் இருக்க வேண்டும்.

    இக்கல்லூரி மேம்பாட்டி ற்காக அரசு மூலம் பல திட்டங்களை செயல்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம்.

    இக்கல்லூரியை சிறப்பு வாய்ந்ததாக மாற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றார்.

    இதையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் தனியார் கம்பெனிகளில் தேர்வு செய்யப்பட்டதற்கான நியமன உத்தரவை வழங்கி னார்கள்.

    மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், பேராசிரியர் அலெக்ஸாண்டர் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

    பேராசிரியர் யோக பிரகாசம் நன்றி கூறினார்.

    பேராசிரியர் பன்னீர்செல்வம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    Next Story
    ×