search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Centres"

    விளையாட்டு விடுதி, மையங்களில் சேர தேர்வு போட்டிகள் நடக்கிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை, திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சா வூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாத புரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் ஆகிய இடங்களில் மாணவர்களு க்கான விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது.

    மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி, சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவர்க ளுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை நேரு விளை யாட்டு அரங்கம், திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் நெல்லை யிலும், மாணவிகளுக்கான முதன்மை நிலை விளை யாட்டு மைய விடுதி சென்னை நேரு விளை யாட்டு அரங்கம் மற்றும் ஈரோட்டிலும் செயல்பட்டு வருகிறது.

    மாணவ-மாணவி களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது. விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்காக 7, 8, 9 மற்றும் பிளஸ்-1 வகுப்பு, முதன்மை நிலை விளை யாட்டு மையங்களில் 6 ,7, 8-ம் வகுப்பு சேர்க்கையும் நடைபெறும். மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) காலை 7 மணி அளவில் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்பதை திவிறக்கம் செய்து விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேர்வு போட்டியின்போது கொண்டு வர வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையத்தின் 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தேர்வு போட்டிகளில் கலந்து கொள்ள 24-ந் தேதி காலை 7 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகம் முழுவதும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை 2-ம் நிலை காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.
    • நெல்லை மாவட்ட காவல்துறை எழுத்து தேர்வு சிறப்பு மேற்பார்வை கண்காணிப்பு அதிகாரியான நெல்லை சரக டி.ஜ.ஜி. பிரவேஷ்குமார் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை 2-ம் நிலை காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று தேர்வையொட்டி அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் ஆண் விண்ணப்பதாரர்கள் 11,521 பேர், பெண் விண்ணப்பதாரர்கள் 2,920 பேர், திருநங்கை ஒருவர் என மொத்தம் 14,442 பேர் விண்ணப்பித்திருந்தனர். மாநகர பகுதியில் 10 மையங்களிலும், மாவட்டத்தில் 6 மையங்களிலும் இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி 12.40 மணிக்கு முடிவடைந்தது.

    இதனையொட்டி தேர்வர்கள் அனைவரும் 9.30 மணிக்கு தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக தேர்வர்கள் கடுமையான சோதனைகளுக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    508 போலீசார் பாதுகாப்பு

    மாநகர பகுதியில் பெரும்பாலான மையங்களில் தேர்வர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். ஒரு சில மையங்கள் முன்பு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பாக காணப்பட்டது. நெல்லை மாவட்ட காவல்துறை எழுத்து தேர்வு சிறப்பு மேற்பார்வை கண்காணிப்பு அதிகாரியான நெல்லை சரக டி.ஜ.ஜி. பிரவேஷ்குமார் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது.

    இதற்காக 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 8 உதவி மற்றும் துணை கண்காணிப்பாளர்கள், 17 இன்ஸ்பெக்டர், 82 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 508 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த எழுத்து தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 9,388 ஆண்கள், 2249 பெண்கள் மற்றும் 4 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 11,641 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    இதனையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஒரு சிலருக்கு தேர்வுக்கூட சீட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படம் தெளிவாக இல்லாமல் இருந்தது.

    இதையடுத்து அவர்கள் தங்களது வேறு புகைப்படத்தினை ஒட்டி அரசிதழ் பதிவு பெற்ற ஒரு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று சென்றனர். ஹால் டிக்கெட் கொண்டு வராதவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

    தேர்வு தொடங்கிய பின்னர் வந்தவர்கள் யாரும் தேர்வுக் கூடத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் சில இடங்களில் வாக்குவாதங்கள் ஏற்பட்டது. செல்போன், கால்குலேட்டர் மற்றும் ப்ளுடூத் போன்ற எலக்ட்ரானிக்கருவிகள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 10 மையங்களில் நடந்த இந்த தேர்வுக்கு 11, 818 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் ஒரு திருநங்கையும் அடங்குவார்.

    மாவட்டம் முழுவதும் தேர்வையொட்டி மையங்களில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 25 இன்ஸ்பெக்டர்கள், 126 சப்-இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    • 1,459 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
    • தடுப்பூசி போடாத நபர்களை கண்ட றிந்து சிறப்பு முகாமுக்கு அழைத்து செல்லும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை

    தமிழகத்தில் சில இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனை கட்டுபடுத்தும் வகையில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி

    38-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று (25-ந் தேதி) காலை 7 மணி முதல் நடந்து வருகிறது.

    மதுரை மானவட்டத்தில் உள்ள வாக்குசாவடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் ஒட்டுமொத்தமாக 1,459 மையங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.

    கிராமப்புற பகுதிகளில் 909 மையங்களிலும், நகர பகுதிகளில் 550 மையங்களிலும் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடக்கிறது.

    மதுரை மாவட்டத்தில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த 2 லட்சத்து 7 ஆயிரத்து 806 பேர் தகுதி பெற்று உள்ளனர். இவர்களில் 1லட்சத்து 4 ஆயிரத்து 803 பேர் ஊரக பகுதிகளிலும், 1 லட்சத்து 3 ஆயிரத்து 3 பேர் மாநகர பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.

    அடுத்தபடியாக பூஸ்டர் தடுப்பூசி போட 11 லட்சத்து 54 ஆயிரத்து 113 பேர் தகுதி பெற்று உள்ளனர். அவர்களில் 5 லட்சத்து 86 ஆயிரத்து 630 பேர் கிராமப்புற பகுதிகளிலும், 5 லட்சத்து 67 ஆயிரத்து 483 பேர் மாநகர பகுதிகளிலும் வசிக்கின்றனர்.

    மேற்கண்ட அனைவரும் சிறப்பு முகாமுக்கு வந்து தடுப்பூசி போட்டு செல்லுமாறு மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் கேட்டு கொண்டுள்ளார்.

    மேலும் ரோட்டரி, லயன்ஸ் கிளப் மற்றும் தன்னார்வ, தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் பள்ளி- கல்லூரி என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மாணவர்கள் ஒருங்கிணைந்து பொது மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, தடுப்பூசி போடாத நபர்களை கண்ட றிந்து சிறப்பு முகாமுக்கு அழைத்து செல்லும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் நாளை 1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்க உள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு அச்சமின்றியும், தயக்கமின்றியும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு கொரோனா 4-ம் அலையை தடுத்து சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா 4-ம் அலை பரவுதலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

    இதில் 12 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் 2-ம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட 18 வயது மேற்பட்ட வர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு 6 மாதங்கள் கடந்தவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக அனைத்து அரசு மருத்து வமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்களில் செலுத்தப்பட உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் இந்த மாபெரும் தடுப்பூசி முகாமையொட்டி நாளை அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1597 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணையாகவும், 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை செலுத்தி 6 மாதம் கடந்தவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி என 1.50 லட்சம் பேருக்கு இலவசமாக செலுத்தப்பட உள்ளது.

    மேலும் இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 3196 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணி செய்திடவும், 70 வாகனங்கள் முகாமிற்காக பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது மிக வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பி லிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மிகவும் அவசியம்.

    ஈரோடு மாவட்ட பொது மக்கள் அனைவரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு அச்சமின்றியும், தயக்கமின்றியும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு கொரோனா 4-ம் அலையை தடுத்து சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • தேர்வு நடக்கும் கல்வி நிலையத்திற்கு போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், 108 ஆம்புலன்ஸ் தயாராக வைத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • தேர்வர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வருவதுடன் கொரோனா தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    "தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வா ணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு நாளை மறுநாள் (24-ந் தேதி)நடக்கிறது.

    நெல்லை மாவட் டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, மானூர், அம்பை, சேரன் மகாதேவி, நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம் ஆகிய 8தாலுகாக்களில் 191இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 230 மையங்களில் இத்தேர்வு நடக்கிறது.

    தேர்வு சம்பந்தமான அனைத்து நடவடிக்கை–களையும் கண்காணித்து தேர்வை சுமூகமாக நடத்த ஒவ்வொரு தாலுகாவிற்கும் தலா ஒரு துணைகலெக்டர் வீதம், 8 துணை கலெக்டர்களும், தேர்வெழுதுவோரை கண்காணிக்க 230 ஆய்வு அலுவலர்களும், 11 பறக்கும்படை அலுவலர்களும் தேர்வு பணிகள் மேற்கொள்ள தாசில்தார், துணை தாசில்தார் நிலையில் 59 சுற்றுக்குழு அலுவலர்களும், தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்திடும் வகையில் 238 வீடியோ கிராபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேர்வு நாளன்று தடைபடாத மின்சாரம் வழங்கவும், தேர்வு மையத்திற்கு கூடுதலாக பஸ்கள் இயக்கமாறும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    தேர்வெழுத அதிக மாணவர்கள் வர இருப்பதால் தேர்வு மையங்களில் கொரோனா தொற்றின் காரணமாக சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், உதவி இயக்குநர் (ஊராட்சி), (பேரூராட்சி) ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வருவதுடன் கொரோனா தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    தேர்வர்கள் தேர்வு மையங்களை கண்டறிந்து முன்னதாக வருமாறு கேட்டுக்கொள்ளப்படு–கின்றனர்.

    தேர்வறை–யினுள் செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது. தேர்வெழுதுபர்கள் தவிர வேறு யாரும் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
    • அனைத்து தேர்வு மையங்களிலும் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பிளஸ் - 2 முடித்த பின்னர் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நுழைவு தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஏராளமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

    விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

    தேசிய தேர்வு முகமையால் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் பொது நுழைவுத் தேர்வு நாளை நடக்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் 11 மையங்களிலும், தென்காசி மாவட்டத்தில் 1 மையத்திலும் நீட் தேர்வு நடக்கிறது. மதியம் 2 மணி முதல் மாலை 5.20 வரை நடைபெறும் இந்த தேர்வை ஏராளமான மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

    இதனையொட்டி அனைத்து தேர்வு மையங்களிலும் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ×