search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Commonwealth Games"

    • காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் இன்று இந்தியா 2 பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
    • பி.வி.சிந்து மற்றும் லக்‌ஷயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.

    இன்று நடைபெற்ற பேட்மிண்டன் பெண்களுக்கான அரையிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சிங்கப்பூர் வீராங்கனையை 21-19, 21-17 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப்போடிக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஆண்களுக்கான அரையிறுதியில் இந்தியாவின் லக்‌ஷயா சென், சிங்கப்பூர் வீரரை 21-10, 18-21, 21-16 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இதையடுத்து, பேட்மிண்டன் பிரிவில் இரு பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

    • காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இன்று இந்தியா 2 தங்கப்பதக்கம் வென்றது.
    • இதன்மூலம் இந்தியா 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 43 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நீத்து காங்காஸ் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இங்கிலாந்து வீராங்கனைக்கு எதிரான போட்டியில் நீத்து கங்காஸ் 5-0 என்ற கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

    இதேபோல், ஆண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் தங்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் இந்தியா 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 43 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • காமன்வெல்த்தின் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம் நடைபெற்றது.
    • இதில் நியூசிலாந்தை ஷூட் அவுட் முறையில் 2-1 என இந்தியா வீழ்த்தி வெண்கலம் வென்றது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், மகளிருக்கான ஹாக்கியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி - நியூசிலாந்து அணியை எதிர் கொண்டது. இதில் 1-1 என இரு அணிகளும் சமனிலை வகித்தன.

    இதையடுத்து, ஷூட் அவுட் முறை நடத்தப்பட்டது. இதில் 2 - 1 என்ற கணக்கில் இந்தியா வென்று, வெண்கலப் பதக்கத்தை உறுதிசெய்தது.

    இதன்மூலம் இந்தியா 13 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 41 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3 கோல்கள் அடித்தது.
    • தென் ஆப்பிரிக்க அணி 2 கோல்கள் போட்டது.

    பர்மிங்காம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவருக்கான ஆக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்காவை எதிர் கொண்டது. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்திய அணி தரப்பில் மன்தீப் சிங், அபிஷேக் மற்றும் ஜுக்ராஜ் சிங் ஆகியோரின் கோல்கள் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகி உள்ளது.  

    • முதலில் விளையாடிய இந்திய அணி 164 ரன்கள் அடித்தது.
    • இங்கிலாந்து மகளிர் அணி 160 ரன்கள் எடுத்து தோல்வி.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. இதில் அரை இறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன.

    நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதியில் இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 32 பந்துகளில் 61 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷபாலி வர்மா 15 ரன்னுடன் வெளியேறினார்.

    ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். கேப்டன் ஹர்மன்பீரித் கவுர் 20 ரன்னும், தீப்தி சர்மா 22 ரன்னும் அடித்தனர். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் அடித்தது.

    அதிபட்சமாக அந்த அணி சார்பில் கேப்டன் நாட் ஸ்கிவர் 41 ரன்களும், டேனி வியாட் 35 ரன்களும், அமிஜோன்ஸ் 31 ரன்னும் அடித்தனர். இதையடுத்து இந்திய மகளிர் அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியா மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

    • காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 12 தங்கம் வென்றுள்ளது.
    • பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 5வது இடத்தில் உள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 74  கிலோ எடை பிரிவில் இந்தியாவின் நவீன், பாகிஸ்தானின் முகமது ஷெரீப் தாஹிரை எதிர்கொண்டார். இதில் 9-0 என்ற கணக்கில் முகமது ஷெரீப் தாஹிரை வீழ்த்திய நவீன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    இதன் மூலம் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு 6-வது தங்கப்பதக்கம் கிடைத்தது. பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், தீபக் புனியா, வினேஷ் போகட் மற்றும் ரவி குமார் தஹியா ஆகியோர் மல்யுத்தத்தில் ஏற்கனவே தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். காமல்வெல்த் போட்டியில் இந்தியா 12 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என 34 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

    • காமன்வெல்த் விளையாட்டில் ஹாட்ரிக் தங்கம் வென்றுள்ளார் வினேஷ் போகத்
    • லான் பவுல் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். இன்று லான் பவுல் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. முன்னதாக, பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் இந்திய பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்றார். 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அவினாஷ் சேபிள் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இந்நிலையில், மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம் கிடைத்தது. 57 கிலோ எடைப்பிரிவு ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    இதேபோல் 53 கிலோ எடைப்பிரிவு பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் காமன்வெல்த் விளையாட்டில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார்.

    • வடக்கு அயர்லாந்து அணி 18-5 என வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
    • இந்திய அணியில் சுனில் பகதூர், நவ்னீத் சிங், சந்தன் குமார் சிங், தினேஷ் குமார் இடம்பெற்றிருந்தனர்.

    பர்மிங்காம்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இன்று லான் பவுல் இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா, வடக்கு அயர்லாந்து அணிகள் மோதின. ஒவ்வொரு அணியிலும் 4 வீரர்கள் இடம்பெற்றனர். இதில் வடக்கு அயர்லாந்து அணி 18-5 என வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

    இந்திய அணியில் சுனில் பகதூர், நவ்னீத் சிங், சந்தன் குமார் சிங், தினேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

    • 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
    • 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அவினாஷ் பந்தய துரத்தை 8.11 நிமிடங்களில் கடந்தார்.

    பிரிட்டன்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்கிறது. இன்று பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

    இந்நிலையில், இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அவினாஷ் சேபிள் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இவர் பந்தய துரத்தை 8 நிமிடம் 11.20 வினாடிகளில் கடந்தார். இது அவரது தனிப்பட்ட சாதனை மற்றும் தேசிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
    • இறுதிச்சுற்றில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை பாவனா 8வது இடத்தைப் பிடித்தார்.

    பிரிட்டன்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு இன்று மேலும் ஒரு பதக்கம் கிடைத்தது. பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில் இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இவர் பந்தய தூரத்தை 43 நிமிடம் 38.83 வினாடிகளில் கடந்தார். காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார்.

    இப்போட்டியில் ஆஸ்ரேலியாவின் ஜெமிமா (42:34.30) தங்கப்பதக்கமும், கென்ய வீராங்கனை எமிலி (43:50.86) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

    இப்போட்டியின் இறுதிச்சுற்றில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை பாவனா (47:14.13) 8வது இடத்தைப் பிடித்தார்.

    காமன்வெல்த் வேகநடை போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஹர்மிந்தர் சிங் ஆவார். இவர் 2010ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில், 20 கிமீ வேகநடை போட்டியில் வெண்கலம் வென்றார்.

    • காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்கம் 7 ஆக உயர்ந்துள்ளது.
    • அன்ஷு மாலிக் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    பிரிட்டன்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.நேற்று வரை இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றிருந்தது.

    இந்நிலையில், இன்று இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்கள் 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இந்தியாவின் தங்கப் பதக்கம் 7 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று 21வது பிறந்தநாளைக் கொண்டாடும் இளம் வீராங்கனை அன்ஷு மாலிக், மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.  

    • காமன்வெல்த் மகளிர் டி20 போட்டியின் அரை இறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
    • முதல் அரை இறுதியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மோதுகின்றன.

    காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி யில் 8 அணிகள் பங்கேற்றன. இதில் அரை இறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றன. நேற்றைய கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை இங்கிலாந்து வீழ்த்தியது.

    இதையடுத்து அரை இறுதியில் யார்-யாருடன் மோதுவது என்பது உறுதியானது. முதல் அரை இறுதியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மோதுகின்றன. 2-வது அரை இறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு ஆட்டங்களும் நாளை நடக்கிறது.

    ×