search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஜ்ரங் புனியா"

    • தகுதி போட்டிக்கு வருமாறு வீரர்-வீராங்கனைகளுக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
    • இதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா நிராகரித்துள்ளார்.

    மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர். இதையடுத்து வீரர்-வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் மல்யுத்த சம்மேளனத்துக்கு நடந்த தேர்தலில் பிரிஜ்பூஷனின் ஆதரவாளர் சஞ்சய்சிங் தலைவராக வெற்றி பெற்றார். இதற்கும் வீரர்-வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் அடுத்த மாதம் கிரிகிஸ்தானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு இந்திய அணி தேர்வுக்காக தகுதி போட்டிக்கு வருமாறு வீரர்-வீராங்கனைகளுக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

    இதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா நிராகரித்துள்ளார். மேலும் வருகிற 10-ந் தேதி டெல்லியில் நடைபெறும் தகுதி தேர்வு போட்டிக்கு தடை விதிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளார்.

    • டெல்லியில் உள்ள ஜந்தர் மந்திரில் 100-க்கும் மேற்பட்ட இளம் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக் ஆகியோர் எங்கள் வாழ்க்கையில் ஓராண்டை வீணாக்கி விட்டனர் என்றனர்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னணி வீரர்களான சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் டெல்லி ஜந்தர்மந்தர் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்துக்கு சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், மகளிர் அமைப்பினர் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.

    இதையடுத்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு 2 முறை இடைநீக்கம் செய்யப்பட்டு, கூட்டமைப்பை தற்காலிகக் குழு நிர்வகித்து வருகிறது. கடந்த 2023 ஜனவரியிலிருந்து தேசிய சாம்பியன்கள் மற்றும் பிற போட்டிகள் எதுவும் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்திரில் 100-க்கும் மேற்பட்ட இளம் மல்யுத்த வீரர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் எங்கள் வாழ்க்கையில் ஓராண்டை வீணாக்கி விட்டனர் என்றனர்.

    இம்மூன்று மல்யுத்த சாம்பியன்களும் தங்களின் வாழ்க்கையை அழித்துவிட்டதாகக் கூறி, அவர்களுக்கு எதிராக இளம் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மேலும், 'சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பே.. எங்களை இந்த 3 வீரர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள்' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்

    இந்தப் போராட்டத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகித்து வரும் தற்காலிகக் குழுவை கலைத்துவிட்டு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்திருக்கும் கூட்டமைப்பு நிர்வாக அமைப்பை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பஜ்ரங் புனியாவுக்கு கடந்த 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
    • தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை அவர் பிரதமருக்கு திருப்பி அளித்தார்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நேற்று நடந்தது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு கடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உறவினரான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை என்னால் ஏற்கமுடியாது. எனவே மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க தெரிவித்தார். இதேபோல், 2019-ம் ஆண்டில் தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா திருப்பி அளித்தார்.


    இந்நிலையில், அரியானாவில் உள்ள மல்யுத்த வீரரான வீரேந்தர் ஆர்யா அகாரா வீட்டுக்கு ராகுல் காந்தி இன்று சென்றார்.

    அங்கிருந்த மல்யுத்த வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ராகுல் காந்திக்கு மல்யுத்தம் செய்வது குறித்து பஜ்ரங் புனியா பயிற்சி அளித்தார். இதுதொடர்பான புகைப்படங்களை ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூரை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சந்தித்தனர்.
    • ஜூன் 15-ம் தேதி வரை எவ்வித போராட்டங்களையும் நடத்த மாட்டோம் என சாக்ஷி மாலிக் கூறினார்.

    புதுடெல்லி:

    மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூரை சந்தித்த பிறகு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாசெய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

    டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்படுகிறது. ஜூன் 15ம் தேதிக்குள் போலீஸ் விசாரணை முடிவடையும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மல்யுத்த வீரர்களுக்கு எதிரான அனைத்து எப்ஐஆர்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி உள்ளோம், அதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.

    பாலியல் புகாரில் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜூன் 15-ம் தேதிக்குள் பிரிஜ் பூஷன் மீதான விசாரணை நிறைவு பெறும். ஜூன் 15ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும்.

    ஜூன் 15-ம் தேதி வரை எந்தவித போராட்டங்களையும் நடத்த மாட்டோம் என கூறினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பஜ்ரங் புனியா தனது டுவிட்டர் தளத்தில் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்-ம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளை காவல்துறை நேற்று கைது செய்தது. கைதான வீராங்கனைகளில் சங்கீதா போகட் மற்றும் வினீஷ் போகட் காவல்துறை வாகனத்தில் சிரித்துக் கொண்டே அமர்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இந்த நிலையில் பஜ்ரங் புனியா தனது டுவிட்டர் தளத்தில் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் ஒன்று உண்மையானது, மற்றொன்று மார்ஃபிங் செய்யப்பட்டு மல்யுத்த வீராங்கனைகள் சிரிப்பது போன்று மாற்றப்பட்டு இருப்பதை காட்டுகிறது. புகைப்படத்தில் சிரித்துக் கொண்டு இருப்பதை அடுத்து, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் தீவிரம் காட்டவில்லை என்பதை உணர்த்துகிறது.

    வைரல் புகைப்படங்கள் மார்ஃபிங் செய்யப்பட்ட ஒன்று என்பது தெளிவாகிவிட்டது. இந்த நிலையில், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, "இந்த புகைப்படங்களை ஐடி செல் தான் பரப்பி வருகிறது. இதனை பதிவிட்ட நபர் மீது புகார் அளிக்கப்படும்," என்று டுவிட் செய்து இருக்கிறார்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்-ம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள், புதிய பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணி நடத்த முயன்ற போது கைது செய்யப்பட்டனர்.

    மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட நாடு முழுக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    • உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கல பதக்கம் வென்றார்.
    • சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பஜ்ரங் புனியா தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெல்கிரேடு:

    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் 65 கிலோ எடைப் பிரிவில் ரெப்பேஜ் முறையில் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் பஜ்ரங் புனியாவுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது.

    இதில் புவர்ட்டோ ரிக்கோ பிராந்தியத்தைச் சேர்ந்த செபாஸ்டியன் ரிவேராவை 11-9 என்ற புள்ளி கணக்கில் வென்ற புனியா வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த தொடரில் அவர் வெல்லும் 4-வது பதக்கம் இதுவாகும்.

    2013, 2018, 2019 மற்றும் 2022 என உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் புனியா பதக்கம் வென்றுள்ளார். இதில் 2018-ல் அவர் வெள்ளி வென்றிருந்தார். மற்ற அனைத்தும் வெண்கலப் பதக்கமாகும்.

    சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பஜ்ரங் புனியா தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

    • பஜ்ரங் புனியா, காலிறுதி ஆட்டத்தில அமெரிக்க வீரர் யான்னியிடம் தோல்வியடைந்தார்
    • 61 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் பங்கஜ் முதல் சுற்றிலேயே வெளியேறினார்

    பெல்கிரேடு:

    செர்பியாவின் பெல்கிரேடு நகரில் மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இதில் 65 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீரர் பஜ்ரங் புனியா கலிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்தார். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா, காலிறுதி ஆட்டத்தில அமெரிக்க வீரர் யான்னி டயகோமிஹாலிசிடம் தோல்வியடைந்தார். எனினும் யான்னி

    டயகோமிஹாலிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், பஜ்ரங் புனியாவுக்கு ரெப்பேஜ் சுற்றில் விளையாடி வெண்கலம் வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    இந்திய இளம் வீரரான சாகர் ஜக்லான், 74 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான தனது முயற்சியைத் தொடர்ந்தார். அவர் மங்கோலியாவின் சுல்ட்கு ஓலோன்பயாரை 7-3 என்ற கணக்கில் தோற்கடித்தார். இனி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஈரான் வீரர் யோனசை சந்திக்க உள்ளார்.

    97 கிலோ எடைப் பிரிவில், இந்திய வீரர் விக்கி தகுதிச் சுற்று ஆட்டத்தில், சுவிட்சர்லாந்தின் சாமுவேல் ஷெரரிடம் 2-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதேபோல் பங்கஜ் (61 கிலோ) பதக்கப் போட்டியில் இருந்து வெளியேறினார். அவர் முதல் சுற்றில் கஜகஸ்தானின் அசில் அய்டகினிடம் தோல்வியடைந்தார்.

    • மல்யுத்த போட்டிகளில் சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா தங்கம் வென்றனர்.
    • இந்திய இளம் வீராங்கனை அன்ஷு மாலிக் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. மல்யுத்த போட்டிகளில் இந்தியா ஒரே நாளில் 3 தங்க பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.

    நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவுவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதேபோல் பெண்களுக்கான 62 கிலோ ஃபிரிஸ்டைல் எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் தங்கம் வென்றார்.

    இதேபோல் 23வது வயதான இந்திய வீரர் தீபக் புனியா, பாகிஸ்தானின் முகம்மது இனாமை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா வென்றுள்ள தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

    காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான 125 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மோஹித் கிரேவால் வெண்கலம் வென்றார். 


    மல்யுத்த போட்டியில் 68 கிலோ பிரி ஸ்டைல் பிரிவில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் வெண்கலப் பதக்கம் வென்றார்


    முன்னாக இந்திய இளம் வீராங்கனை அன்ஷு மாலிக், மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    • காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்கம் 7 ஆக உயர்ந்துள்ளது.
    • அன்ஷு மாலிக் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    பிரிட்டன்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.நேற்று வரை இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றிருந்தது.

    இந்நிலையில், இன்று இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்கள் 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இந்தியாவின் தங்கப் பதக்கம் 7 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று 21வது பிறந்தநாளைக் கொண்டாடும் இளம் வீராங்கனை அன்ஷு மாலிக், மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.  

    ×