என் மலர்
நீங்கள் தேடியது "Department of Sports"
- போராட்டம் காரணமாக பிரிஜ்பூஷன் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.
- பிரிஜ்பூஷன் சிங்கின் வீட்டில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர்.
புதுடெல்லி:
பா.ஜனதா எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.
ஒரு மைனர் உள்பட 7 வீராங்கனைகள் பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகார் கூறியுள்ளனர். அவர் பதவி விலக வேண்டும், டெல்லி போலீசார் அவரை கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினிஷ் போகத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களின் தொடர் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த போராட்டம் காரணமாக பிரிஜ்பூஷன் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. அவர் மீதான இரண்டு வழக்குகளில் ஒன்று போக்சோ சட்ட வழக்காகும்.
இதற்கிடையே மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தனர். இதன் பிறகு பிரிஜ்பூஷன் சிங்கின் வீட்டில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். அவ ரது உதவியாளர்கள், பணியாளர்கள் என 12 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.
இந்நிலையில் மல்யுத்த வீராங்கனையுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது. இதுதொடர்பாக மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் நேற்றிரவு வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்சினைகள் குறித்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. நான் மீண்டும் அவர்களுக்கு இது தொடர்பாக அழைப்பு விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The government is willing to have a discussion with the wrestlers on their issues.
— Anurag Thakur (@ianuragthakur) June 6, 2023
I have once again invited the wrestlers for the same.
மத்திய அரசின் இந்த அழைப்பு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாக்ஷி மாலிக் கூறும் போது "மத்திய அரசின் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும். தங்கள் தரப்பில் அனைவருக்கும் சம்மதம் என்றால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்வோம்" என்றார்.
இதற்கிடையே மத்திய அரசின் அழைப்பை தொடர்ந்து பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத்தும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
பிரிஜ்பூஷன் சிங்கை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அனுராக் தாக்கூரிடம் வலியுறுத்தினார்கள்.
- மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூரை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சந்தித்தனர்.
- ஜூன் 15-ம் தேதி வரை எவ்வித போராட்டங்களையும் நடத்த மாட்டோம் என சாக்ஷி மாலிக் கூறினார்.
புதுடெல்லி:
மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூரை சந்தித்த பிறகு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாசெய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்படுகிறது. ஜூன் 15ம் தேதிக்குள் போலீஸ் விசாரணை முடிவடையும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மல்யுத்த வீரர்களுக்கு எதிரான அனைத்து எப்ஐஆர்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி உள்ளோம், அதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.
பாலியல் புகாரில் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜூன் 15-ம் தேதிக்குள் பிரிஜ் பூஷன் மீதான விசாரணை நிறைவு பெறும். ஜூன் 15ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும்.
ஜூன் 15-ம் தேதி வரை எந்தவித போராட்டங்களையும் நடத்த மாட்டோம் என கூறினார்.
- அமைச்சர் துரைமுருகன் பேச்சு
- ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பை அறிமுக விழா நடந்தது
வேலூர்:
ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பை அறிமுக விழா காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடந்தது. விழாவிற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் ஏ.பி. நந்தகுமார், அமலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட திட்ட குழு தலைவர் மு.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயுலின் ஜான் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-
ஆக்கி வீரர்கள் போட்டியில் சென்று வென்று வரவேண்டும் ஒரு காலத்தில் இந்தியா என்றால் ஆக்கி தான் விளையாடுவார்கள் அதுதான் முதலிடம்.
இப்போது கிரிக்கெட் பக்கம் சாய்ந்துள்ளது நாங்கள் கல்லூரி படிக்கும் போது ஆக்கித்தான். வாணியம்பாடி கல்லூரியில் நான் படிக்கும்போது ஆகிய தான் விளையாட வேண்டும் என விருப்பம் கொடுத்தேன.
நான் ஆக்கி விளையாடும் போது எனது காலில் ஒருவன் அடித்து விட்டான் நான் கோபத்தில் அவனை திருப்பி அடித்து விட்டேன் இதை பார்த்து ஆசிரியர் உனக்கு ஆக்கி விளையாட்டு சரிப்பட்டு வராது என கூறிவிட்டார்.
அதிலிருந்து நான் ஆக்கி விளையாடுவதில்லை ஆக்கி வீரர்களை ஊக்கப்படுத்திேய வருகிறேன்.
தமிழக அரசு விளையாட்டு துறையை இந்தியாவில் முதன்மை துறையாக மாநிலத்தின் முதன்மை துறையாக மாற்ற வேண்டும் என முதலமைச்சர் பாடுபட்டு வருகிறார்.
அதனால் அவர் தன்னுடைய மகன் உதயநிதிடம் விளையாட்டு துறையை ஒப்படைத்துள்ளார் விளையாட்டு துறை இந்தியாவில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் முதன்மை துறையாக மாறிவிடும்.
இளம் வயதி உடலை யார் பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்களோ உள்ளத்தையும் அது பத்திரமாக பார்த்துக் கொள்ளும் உடலும் உள்ளமும் நன்றாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
இவர் அவர் பேசினார் விழாவில் விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன் ஜி வி செல்வம் டி.ஐ.ஜி. முத்துசாமி மாவட்ட எஸ் .பி மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
- படிப்புடன், விளையாட்டையும் அன்றாட வழக்கங்களில் இணைத்து கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.
சென்னை:
கனடாவில் நடந்த கேன்டிடேட் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதன்மூலம் கேன்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை இளம் வயதில் (17 வயது) வென்ற வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றார். மேலும், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கும் குகேஷ் தகுதி பெற்றுள்ளார்.
இதற்கிடையே, சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 லட்சத்திற்கான ஊக்கத்தொகைக்கான காசாலையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
மிக இளம் வயதில் 'பிடே' கேன்டிடேட்ஸ் தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள நமது குகேசுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன்.
கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்.
இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும் என பதிவிட்டுள்ளார்.






