என் மலர்
நீங்கள் தேடியது "லக்ஷயா சென்"
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து சீனாவின் சென் யூபி உடன் மோதினார்.
- இந்த ஆட்டத்தில் 21-13, 21-17 என்ற கணக்கில் சிந்து தோல்வியடைந்தார்.
ஜகார்த்தா:
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து சீனாவின் சென் யூபி உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் 21-13, 21-17 என்ற கணக்கில் சீனா வீராங்கனை சென் யூபி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென் மற்றும் தாய்லாந்தை சேர்ந்த பக்கபோன் தீரரட்சகுல் ஆகியோர் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தீரரட்சகுல் 21-18, 22-20 செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
- இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
ஜகார்த்தா:
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து, டென்மார்க்கின் லைன் ஜேயர்ஸ்பெல்ட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-19, 21-18 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள காலிறுதியில் பிவி சிந்து சீனாவின் சென் யூபி உடன் மோதுகிறார்.
இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் 21-10, 21-11 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
- இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஜகார்த்தா:
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தைவானின் வாங் சூ வெய் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடியா லக்ஷயா சென் முதல் செட்டை 21-13 என வென்றார். இதற்கு பதிலடியாக தைவான் வீரர் 2வது செட்டை 21-16 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 21-14 என்ற செட் கணக்கில் வென்ற லக்ஷயா சென் இரண்டாவ்து சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி 21-15, 21-23, 24-22 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீரரை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
- காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தைவானின் லின் சூ யீ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் முதல் செட்டை 21-17 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட தைவான் வீரர் அடுத்த இரு செட்களை 21-13, 21-18 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் லக்ஷயா சென் தொடரில் இருந்து வெளியேறினார்.
- இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
- 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் வெற்றி பெற்றார்.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் நிஷிமோட்டோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-19, 21-10 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் வெற்றி பெற்றார்.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், சக வீரரான ஆயுஷ் ஷெட்டி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-12, 21-15 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷ்யா சென், சிங்கப்பூரி ஜேசன் டே உடன் மோதினார்.
முதல் செட்டை லக்ஷயா சென் 21-16 என கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை ஜேசன் டே 21-15 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை லக்ஷயா சென் 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-12, 21-17 என்ற செட் கணக்கில் மலேசியாவின் லீ ஜி ஜியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென் வெற்றி பெற்றார்.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தைவானின் சூ டின்-சென் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 17-21 என இழந்த லக்ஷயா சென் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 24-22, 21-15 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் லக்ஷயா சென், ஜப்பானின் யூஷி டனகா உடன் மோதுகிறார்.
- காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், சக நாட்டவரான ஆயுஸ் ஷெட்டியுடன் மோதினர்.
- முதல் செட் 23-21 என்ற கணக்கில் பரபரப்பாக சென்றது.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென் மற்றும் சக நாட்டவரான ஆயுஸ் ஷெட்டியுடன் மோதினர்.
இந்த ஆட்டத்தில் லக்ஷயா சென் 23-21, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் லக்ஷயா சென் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தைவானின் சீ யூ ஜென் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-17, 13-21, 21-13 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அயுஷ் ஷெட்டி 21-17, 21-16 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கோடாய் நரோகாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் லக்ஷயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தைவானின் சூ லீ-யாங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-17, 21-13 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 6-21, 21-12, 21-17 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் மார்சிலினோவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் தோல்வி அடைந்தார்.
டோக்கியோ:
குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரர் லக்ஷயா சென், உலகின் 13ம் நிலை வீரரான ஜப்பானின் கென்டா நிஷியோடோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜப்பான் வீரர் 21-19 என முதல் செட்டை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை லக்ஷயா சென் 21-14 என வென்றார்..
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ஜப்பான் வீரர் நிஷியோடா 21-12 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் லக்ஷயா சென் தொடரில் இருந்து வெளியேறினார்.






