search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமன்வெல்த் விளையாட்டு போட்டி"

    • சஞ்ஜிதா சானு ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்குவது இது புதிதல்ல.
    • 2020-ம் ஆண்டும் இதே பிரச்சினையில் சிக்கினார்.

    புதுடெல்லி:

    குஜராத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பளு தூக்குதல் வீராங்கனையான சஞ்ஜிதா சானுவிடம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை சோதனை நடத்தியது. இதில் அவர், தடை செய்யப்பட்ட ட்ரோஸ்டனோலோன் மெட்டாபொலிட் என்ற மருந்தை எடுத்துக்கொண்டது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து அனைத்து விதமான போட்டிகளிலும் 4 ஆண்டுகளுக்கு சஞ்ஜிதா சானு பங்கேற்க தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

    இதை இந்திய பளுதூக்குதல் சங்கத்தின் தலைவர் சஹ்தேவ் யாதவும் உறுதி செய்துள்ளார். தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் தடையால் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கத்தை சஞ்ஜிதா சானு இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    கடந்த 2014-ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் 48 கிலோ எடை பிரிவிலும், 2018ம் ஆண்டு கோல்டு கோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் 53 கிலோ எடைப் பிரிவிலும் சஞ்ஜிதா சானு தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

    சஞ்ஜிதா சானு ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்குவது இது புதிதல்ல. மணிப்பூரைச் சேர்ந்த அவர்,கடந்த 2018ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற போது ஊக்க மருந்து விவகாரத்தால் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்தின் தடையை எதிர்கொண்டார். 2020-ம் ஆண்டும் இதே பிரச்சினையில் சிக்கினார்.

    • நாட்டுக்காகத் தங்களது முழு உழைப்பையும் அளித்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது பாராட்டுகள்.
    • இனி வருபவையாவும் இதைவிடச் சிறப்பானவையாக மட்டுமே இருக்கும்.

    சென்னை:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    பர்மிங்காம் காமன் வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்கக்காரனாகி விட்ட சரத் கமல், சத்தியன் ஞானசேகரன், தீபிகா பல்லிகல், இந்தியாவின் பெருமை பி.வி.சிந்து, ஆற்றல்மிகு லக்‌ஷயா சென், ஆதிக்கமிகு நிக்கத் சரீன், இந்திய ஆடவர் ஹாக்கி அணியினர், மகளிர் கிரிக்கெட் அணியினர் உள்ளிட்ட, நாட்டுக்காகத் தங்களது முழு உழைப்பையும் அளித்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது பாராட்டுகள்.

    இனி வருபவையாவும் இதைவிடச் சிறப்பானவையாக மட்டுமே இருக்கும். தங்களது எதிர்கால முயற்சிகளில் வெற்றிபெற எனது வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் உள்பட 61 பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளது.
    • பிவி சிந்து, சரத் கமல், அமித் பங்கால், நிகத் சரீன் உள்ளிட்டோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, வேல்ஸ், கென்யா, நைஜீரியா உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5054 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.

    இந்தியா சார்பில் 106 வீரர்கள், 104 வீராங்கனைகள் என மொத்தம் 210 பேர் 16 விளையாட்டுகளில் கலந்து கொண்டனர். போட்டியின் நிறைவில் இந்தியா பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து , கனடா 2-வது, 3-வது இடங்களில் உள்ளன.

    இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் உள்பட 61 பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளது. குறிப்பாக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ரவி குமார் தயா, வினேஷ் போகத், நவீன் ஆகியோர் தங்கம் வென்றனர். இதேபோல் சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வரும் பிவி சிந்து, சரத் கமல், அமித் பங்கால், நிகத் சரீன் உள்ளிட்டோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

    ஹர்மன்பிரீத்சிங் கவூர் தலைமையிலான மகளிர் கிரிக்கெட் அணி, ஆடவர் ஹாக்கி அணி உள்ளிட்டோர் வெள்ளி பதக்கத்தை வென்றது.

    பதக்கப்பட்டியலில் இந்தியா 4-வது இடம் பதக்கம் வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ள இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • ஷரத் கமல் கலப்பு டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றிருந்தார்.
    • நிகாத் ஜரீன் குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஜூலை 28-ந் முதல் இன்று (ஆகஸ்டு 8-ந் தேதி) வரை நடக்கிறது. இதில் நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்பட 20 விளையாட்டுகளில் மொத்தம் 280 போட்டிகள் நடைபெற்றன.

    இந்த போட்டியில் 72 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள். இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை பி.வி.சிந்து ஏந்தி சென்றார். இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற உள்ள நிலையில் நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திச்செல்லும் வீரர்களாக டேபிள் டென்னிஸ் வீரர் அச்சந்தா ஷரத் கமல் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    ஷரத் கமல் கலப்பு டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றிருந்தார். நிகாத் ஜரீன் குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேட்மிண்டன் பெண்களுக்கான இறுதி போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து கனடாவின் மிச்செல் லி விளையாடினர்.
    • முதல் செட்டில் பிவி சிந்து 21-15 எனவும் இரண்டாவது செட்டில் 21-13 என்ற கணக்கில் கனடா வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் முடிவடையவுள்ளது. கடைசி நாளில் பேட்மின்டன், ஹாக்கி , டேபிள் டென்னிஸ் , ஸ்குவாஷ் , டைவிங் ஆகிய 5 விளையாட்டுகளில் 12 தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

    பேட்மிண்டன் பெண்களுக்கான இறுதி போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து கனடாவின் மிச்செல் லி விளையாடினர். முதல் செட்டில் பிவி சிந்து 21-15 எனவும் இரண்டாவது செட்டில் 21-13 என்ற கணக்கில் கனடா வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார். 

    • காமன்வெல்த் விளையாட்டில் முதல் முறையாக கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது.
    • கிரிக்கெட்டும், இந்தியாவும் பிரிக்க முடியாதது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

    காமன்வெல்த் விளையாட்டில் பெண்கள் கிரிக்கெட் 20 ஓவர் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. தங்கப் பதக்கத்துக்கான இப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்தது. பெத்மூனி 61 ரன்னும், கேப்டன் லானிங் 36 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா தரப்பில் ரேணுகாசிங், சினே ரானா தலா 2 விக்கெட்டும், தீப்தி சர்மா, ராதாயாதவ் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் இலக்கை நோக்கி இந்தியா விளையாடியது. தொடக்க வீராங்கனைகள் மந்தனா 6 ரன்னிலும், ஷபாலி வர்மா 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    பின்னர் ரோட்ரிக்ஸ்-கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் ஜோடி தாக்குபிடித்து விளையாடியது. ஸ்கோர் 118 ரன்னாக (14.3 ஓவர்) இருந்தபோது அந்த ஜோடி பிரிந்தது. ரோட்ரிக்ஸ் 33 ரன்னில் ஆட்டம் இழந்தார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்தனர்.

    சிறப்பாக விளையாடிய ஹர்மன்பிரீத்சிங் அரை சதம் அடித்தார். அவர் 65 ரன்னில் அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 5 விக்கெட்டுக்கு 121 ரன்னாக (15.5 ஓவர்) இருந்தது. வெற்றிக்கு 25 பந்தில் 41 ரன் தேவையாக இருந்தது. ஆனால் இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

    கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 11 ரன் தேவைப்பட்டது. கைவசம் 2 விக்கெட் இருந்தது. முதல் பந்தில் ரன் எடுக்கவில்லை. 2-வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டாலும் மேனகா சிங் ரன்-அவுட் ஆனார். 3-வது பந்தில் யாஸ்திகா பாட்டியா (2 ரன்) எல்.பி.டபிள்யு. ஆனார். இந்தியா 19.3 ஓவரில் 152 ரன் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

    ஆஸ்திரேலியா 9 ரன் வித்தியாசத்தில் வென்று தங்கப்பதக்கத்தை தட்டி சென்றது. தோல்வி அடைந்த இந்திய பெண்கள் அணி வெள்ளிபதக்கத்தை கைப்பற்றியது.

    காமன்வெல்த் விளையாட்டில் முதல் முறையாக கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இந்திய பெண்கள் அணி வெள்ளி வென்று அசத்தியுள்ளது.

    வெள்ளி வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, "கிரிக்கெட்டும், இந்தியாவும் பிரிக்க முடியாதது. நமது பெண்கள் கிரிக்கெட் அணி காமன் வெல்த்தில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளனர்.

    கிரிக்கெட்டில், முதல் காமன்வெல்த் பதக்கம் என்பதால் இது எப்போதும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அணியின் அனைவருக்கும் பிரகாசமான எதிர் காலம் அமைய வாழ்த்துக்கள்" என்றார்.

    இதேபோல் நேற்று பதக்கம் வென்றவர்களுக்கும் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    • பேட்மின்டன், ஹாக்கி மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் பதக்கம் கிடைக்கிறது.
    • பதக்க பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து , கனடா 2-வது, 3-வது இடங்களில் உள்ளன.

    இந்தப் போட்டியில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, வேல்ஸ், கென்யா, நைஜீரியா உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5054 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். 20 விளையாட்டுகள் 280 பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தியா சார்பில் 106 வீரர்கள் , 104 வீராங்கனைகள் என மொத்தம் 210 பேர் 16 விளையாட்டுகளில் கலந்து கொண்டனர். கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் முடிகிறது.

    கடைசி நாளில் பேட்மின்டன், ஹாக்கி , டேபிள் டென்னிஸ் , ஸ்குவாஷ் , டைவிங் ஆகிய 5 விளையாட்டுகளில் 12 தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

    பேட்மின்டன், ஹாக்கி மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் பதக்கம் கிடைக்கிறது.

    பதக்க பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து , கனடா 2-வது, 3-வது இடங்களில் உள்ளன.

    இன்றைய பதக்கங்கள் மூலம் இந்தியா பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    • இரவில் நடந்த கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டி மூலம் நேற்று இந்தியாவுக்கு 5- வது தங்கம் கிடைத்தது.
    • நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 15 பதக்கம் கிடைத்தது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. 9-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் ஆக மொத்தம் 40 பதக்கம் பெற்று இருந்தது.

    நேற்றைய 10-வது நாள் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 5 தங்கப்பதக்கம் கிடைத்தது.

    பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ பிரிவில் பங்கேற்ற நிதுன் கங்காஸ் முதல் தங்கத்தை வென்றார். ஆண்களுக்கான குத்துச்சண்டையில் 51 கிலோ பிரிவில் அமித் பங்கால் தங்கப்பதக்கத்தை பெற்றார்.

    ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் எல்டோஸ் பவுல் தங்கம் வென்று முத்திரை பதித்தார். அதைத் தொடர்ந்து குத்துச்சண்டை மூலம் இந்தியாவுக்கு 4-வது தங்கம் கிடைத்தது. பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் நிகாத் ஜரீன் தங்கப்பதக்கம் பெற்று கொடுத்தார்.

    இரவில் நடந்த கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டி மூலம் நேற்று இந்தியாவுக்கு 5- வது தங்கம் கிடைத்தது.

    கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சரத்கமல்- ஸ்ரீஜா அகுலா ( தெலுங்கானா ) ஜோடி மலேசியாவைச் சேர்ந்த சூங்-லியன் ஜோடியை எதிர் கொண்டது. இதில் சரத்கமல் ஜோடி 3-1 என்ற கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் சரத்கமல் மற்றொரு தமிழக வீரர் சத்யனுடன் இணைந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். மேலும் சரத்கமல் ஒற்றை பிரிவில் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றார். சத்யன் அரைஇறுதியில் தோற்றதால் வெண்கல பதக்கத்துக்கு மோதுகிறார்.

    மகளிர் கிரிக்கெட்டிலும், குத்துச்சண்டையிலும் எதிர்பார்த்த தங்கம் வாய்ப்பு கிடைக்காமல் போனது. பெண்கள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

    ஆண்களுக்கான 92 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவு குத்துச்சண்டையில் சாகர் அக்லாவாத் வெள்ளிப் பதக்கம் பெற்றார். அவர் இறுதிப் போட்டியில் 0-5 என்ற கணக்கில் இங்கிலாந்து வீரரிடம் தோற்றார்.

    ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் அப்துல்லா அபுபக்கர் வெள்ளி பதக்கம் பெற்றார்.

    இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் நடைபந்தயத்தில் சந்தீப் குமாரும், பெண்களுக்கான ஈட்டி எறிதலில் அன்னு ராணியும் வெண்கல பதக்கம் பெற்றனர்.

    ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிகல் -சவுரவ் கோஷல் ஜோடி வெண்கல பதக்கம் பெற்றது. இந்த ஜோடி ஆஸ்திரேலிய ஜோடியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது.

    பேட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெண்கலம் வென்றார். அவர் 21-15, 21-18 என்ற கணக்கில் சிங்கப்பூர் வீரர் ஹெங்கை தோற்கடித்தார்.

    இதே போல பெண்களுக்கான பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் காயத்ரி கோபிசந்த்-திரிஷா ஜோலி ஜோடியும் வெண்கல பதக்கம் பெற்றது. ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து மற்றும் லக்சயா சென் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளனர்.

    நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 15 பதக்கம் கிடைத்தது.

    நேற்றைய போட்டி முடிவில் இந்தியா 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் ஆக மொத்தம் 55 பதக்கம் பெற்று தொடர்ந்து 5-வது இடத்தில் உள்ளது. 

    • பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக்‌ஷெட்டி ஜோடி இன்று இறுதிப் போட்டியில் களம் காணுகிறது.
    • டேபிள் டென்னிசில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தங்கப்பதக்கத்துக்கான இறுதிப்போட்டி மாலை 4.25 மணிக்கு நடக்கிறது.

    காமன்வெல்த் விளையாட்டில் ஆண்கள் ஹாக்கியில் தங்கப்பதக்கத்துக்கான இறுதிப்போட்டி இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இதில் இந்தியா தங்கம் வெல்லுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி லீக் ஆட்டங்களில் 3 வெற்றி, ஒரு டிராவுடன் 10 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறியது.

    அரை இறுதியில் தென் ஆப்பிரிக்காவை 3-2 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா லீக் ஆட்டத்தில் தான் மோதிய 4 போட்டியிலும் வெற்றி பெற்றது.

    முன்னதாக மதியம் 1.20 மணிக்கு பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து-மைக்கேல் லீ (கனடா) மோதுகிறார்கள்.

    மதியம் 2.10 மணிக்கு நடக்கும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் லக்‌ஷயா சென் (இந்தியா)-ஜி யாங் என்ஜி (மலேசியா) மோதுகிறார்கள்.

    பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக்‌ஷெட்டி ஜோடி இன்று இறுதிப் போட்டியில் களம் காணுகிறது. இப்போட்டி மதியம் 3 மணிக்கு நடக்கிறது.

    மதியம் 3.35 மணிக்கு டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் சத்யன்-பால் டிரிக்ஹால் (இங்கிலாந்து) மோதுகிறார்கள்.

    டேபிள் டென்னிசில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தங்கப்பதக்கத்துக்கான இறுதிப்போட்டி மாலை 4.25 மணிக்கு நடக்கிறது. இதில் இந்திய வீரர் சரத் கமல்-இங்கிலாந்தின் லியாம் பிட்ச்போர்ட் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    • அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3 கோல்கள் அடித்தது.
    • தென் ஆப்பிரிக்க அணி 2 கோல்கள் போட்டது.

    பர்மிங்காம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவருக்கான ஆக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்காவை எதிர் கொண்டது. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்திய அணி தரப்பில் மன்தீப் சிங், அபிஷேக் மற்றும் ஜுக்ராஜ் சிங் ஆகியோரின் கோல்கள் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகி உள்ளது.  

    • முதலில் விளையாடிய இந்திய அணி 164 ரன்கள் அடித்தது.
    • இங்கிலாந்து மகளிர் அணி 160 ரன்கள் எடுத்து தோல்வி.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. இதில் அரை இறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன.

    நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதியில் இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 32 பந்துகளில் 61 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷபாலி வர்மா 15 ரன்னுடன் வெளியேறினார்.

    ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். கேப்டன் ஹர்மன்பீரித் கவுர் 20 ரன்னும், தீப்தி சர்மா 22 ரன்னும் அடித்தனர். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் அடித்தது.

    அதிபட்சமாக அந்த அணி சார்பில் கேப்டன் நாட் ஸ்கிவர் 41 ரன்களும், டேனி வியாட் 35 ரன்களும், அமிஜோன்ஸ் 31 ரன்னும் அடித்தனர். இதையடுத்து இந்திய மகளிர் அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியா மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

    • இன்று நடக்கும் மகளிர் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.

    பர்மிங்காம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இன்று நடக்கும் மகளிர் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது .

    இறுதிபோட்டிக்கு முன்னேற இரு அணிகளும் முனைப்பு காட்டும் கான்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.

    ×