search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amit Panghal"

    • காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இன்று இந்தியா 2 தங்கப்பதக்கம் வென்றது.
    • இதன்மூலம் இந்தியா 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 43 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நீத்து காங்காஸ் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இங்கிலாந்து வீராங்கனைக்கு எதிரான போட்டியில் நீத்து கங்காஸ் 5-0 என்ற கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

    இதேபோல், ஆண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் தங்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் இந்தியா 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 43 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    அர்ஜுனா விருதுக்கு குத்து சண்டை வீரர்கள் கவுரவ் பிதூரி மற்றும் அமித் பங்கால் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன. #GauravBidhuri #AmitPanghal
    உலக சாம்பியன்ஷிப் குத்து சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற கவுரவ் பிதூரி மற்றும் ஆசிய விளையாட்டு குத்து சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற அமித் பங்கால் ஆகியோரது பெயர்களை அர்ஜுனா விருதுக்கு இந்திய குத்து சண்டை கூட்டமைப்பு பரிந்துரைத்து உள்ளது.

    இதேபோன்று மகளிருக்கான உதவி பயிற்சியாளர் சந்தியா குருங் மற்றும் முன்னாள் மகளிர் தலைமை பயிற்சியாளர் சிவ் சிங் ஆகியோரின் பெயர்களை துரோணாச்சார்யா விருதுக்கு பரிந்துரைத்து உள்ளது. #GauravBidhuri #AmitPanghal
    ஜெர்மனியில் நடைபெற்று வரும் கெமிஸ்ட்ரி கோப்பை குத்துச் சண்டை தொடரில் அமித், கவுரவ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். #Boxing
    ஜெர்மனியின் ஹாலேயில் கெமிஸ்ட்ரி கோப்கை குத்துச் சண்டை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 49 கிலோ எடைப்பரிவில் கலந்து கொண்ட அமித் பங்கல் காலிறுதியில் ஜெர்மனியின் கிறிஸ்டோபர் கோமனை எதிர்கொண்டார். இதில் அமித் பங்கல் 5-0 என ஜெர்மனி வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    52 கிலோ எடைப்பிரிவில் கவுரவ் சோலங்கி ரஷியாவின் வடிர் குட்ரியாகோவை காலிறுதியில் எதிர்கொண்டார். இதில் கவுரவ் 5-0 என வெற்றி பெற்றார். அரையிறுதிக்கு முன்னேறியதால் இருவரும் பதக்கத்தை உறுதி செய்தனர்.



    மணிஷ் கவுசிக் (60), நமன் தன்வார் (91) கிலோ ஆகியோர் தொடக்க சுற்றோடு வெளியேறினார்கள். விகாஸ் கிருஷ்ணன் 75 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
    ×