search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குத்துச்சண்டை"

    • சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் விதிப்படி 40 வயதிற்கு மேல் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது.
    • வயது கடந்ததால் கட்டாய ஓய்வை அறிவித்துள்ளார் மோரி கோம்.

    இந்தியாவின் சாதனை வீராங்கனையாக திகழ்பவர் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம். இவர் ஆறு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தவர். மேலும், 2012 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடிக்கொடுத்தவர்.

    சாதனை வீராங்கனையான இவர் குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

    40 வயது வரைதான் ஆண்கள் மற்றும் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க முடியும் என சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் விதி சொல்கிறது.

    ஆனால், 40 வயதை கடந்த பின்னரும் பதக்கம் வெல்லும் வேட்கையில் மேரி கோம் உள்ளார். இருந்த போதிலும் வயது காரணமாக ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேரி கோம் கூறுகையில் "இன்னும் பல போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை உள்ளது. ஆனால் வயது வரம்பு முடிவடைந்ததால் என்னால் எந்தவிதமான போட்டியிலும் கலந்து கொள்ள முடியாது. நான் இன்னும் அதிக போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். இருந்த போதிலும் வயது வரம்பு காரணமாக கட்டாய ஓய்வை அறிவிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதித்துவிட்டேன்" என்றார்.

    • சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் வாழ்த்து செய்தியை சபாநாயகர் பிஸ்வஜித் வாசித்தார்.
    • நம் வாழ்நாளில் நாம் செய்ய முடியாத சாதனையை லவ்லினா செய்திருப்பதாக முதல்வர் பாராட்டினார்

    கவுகாத்தி:

    டெல்லியில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அசாம் மாநில வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் தங்கம் வென்று சாதனை படைத்தார். 75 கிலோ எடைப்பிரிவினருக்கான இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை கெய்த்லின் பார்க்கரை 5-2 என லவ்லினா வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

    இந்நிலையில், உலக சாம்பியன் பட்டம் வென்ற லவ்லினாவுக்கு அசாம் மாநில சட்டசபையில் இன்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் சார்பில் வாழ்த்து செய்தியை சபாநாயகர் பிஸ்வஜித் வாசித்தார்.

    பின்னர் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், 'மாநிலத்தின் விளையாட்டுக் கொள்கையின் அடிப்படையில், குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற லவ்னினாவுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும்' என்று அறிவித்தார்.

    முதல்வர் மேலும் பேசுகையில், "நாம் புதிய லவ்லினா மற்றும் ஹிமா தாசை (தடகள வீராங்கனை) உருவாக்க வேண்டும். அவர்கள் ஏற்கனவே மாநிலத்திற்கு பெருமை சேர்ப்பதற்கான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். லவ்லினா பங்கேற்கும் அடுத்த போட்டியின் முடிவு எப்படி இருக்கும்? என்பதை இப்போது நாம் ஆராய வேண்டாம். நம் வாழ்நாளில் நாம் செய்ய முடியாத சாதனையை அவர் செய்திருக்கிறார்" என பாராட்டினார்.

    • 50 கிலோ எடைப்பிரிவில் நிகத் ஜரீன், கொலம்பியாவின் இங்ரித் வாலன்சியாவை வீழ்த்தினார்.
    • 48 கிலோ எடைப்பிரிவு ஆட்டத்தில் நீது கங்காஸ், கஜகஸ்தான் வீராங்கனையை வென்றார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபற்று வரும் மகளிருக்கான உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனைகள் நிகத் ஜரீன், நீது கங்காஸ் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

    50 கிலோ எடைப்பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான நிகத் ஜரீன், கொலம்பியாவின் இங்ரித் வாலன்சியாவை 5-0 என வீழ்த்தினார். இதேபோல் 48 கிலோ எடைப்பிரிவினருக்கான அரையிறுதியில் நீது கங்காஸ், கஜகஸ்தான் வீராங்கனை அலுவா பால்கிபெகோவாவை 5-2 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். 

    • 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அனாமிகா, பிரான்ஸ் வீராங்கனை வாசில்லாவை வென்றார்
    • ஆடவர் 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கோவிந்த் குமார் சஹானி பைனலுக்கு முன்னேறினார்

    சோபியா:

    பல்கேரியாவில் நடைபெற்றுவரும் சர்வதேச குத்துச்சண்டை தொடரில் இந்திய வீராங்கனைகள் அனாமிகாவும் அனுபமாவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர்.

    50 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனை வாசில்லாவை 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் அனாமிகா வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை அனுபமா, ஆஸ்திரேலிய வீராங்கனை ஜெஸிக்காவை 3-2 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

    இதேபோல் ஆடவர் 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கோவிந்த் குமார் சஹானி, ஜார்ஜியாவின் லூகா கப்லாஷ்விலியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். இவர் இறுதிப்போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஷோடியோர்ஜோனை எதிர்கொள்கிறார்.

    • குத்துச்சண்டை போட்டியில் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரத்தில் 20 பள்ளிகளை சேர்ந்த 180 மாண வர்கள் பங்கேற்ற மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.

    14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 7-ம் வகுப்பு மாணவன் அனீக் ரசீத், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 8-ம் வகுப்பு மாணவன் அப்துல் ரஹ்மான் ஆகியோர் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டி யில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

    14 வயதுக்குட்பட்ட பிரிவில் 6-ம் வகுப்பு மாணவன் செய்யது அப்துல் ஹசன், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் 8-ம் வகுப்பு மாணவன் முகமது ஜாசிர் ஆகியோர் மாவட்ட அளவி லான போட்டியில் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

    வெற்றி பெற்ற மாண வர்கள் மற்றும் பயிற்சி யாளர் ரபீக் உசேன் ராஜா ஆகியோரை பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம், பள்ளி தலைமை ஆசிரி யர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.

    • மாநில மகளிர் குத்துச்சண்டை போட்டி நடக்கிறது.
    • மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழக பொது செயலாளர் டி.என்.செழியன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை குத்துச்சண்டை கழகம் சார்பில் எலைட் பிரிவு பெண்கள் தேர்வு போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் வருகிற 7-ந் தேதி காலை 7 மணிக்கு நடக்க உள்ளது.

    இதில் மாவட்ட குத்துச்சண்டை கழகத்தில் பதிவு பெற்ற சங்கங்கள் மற்றும் வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள், மாவட்ட குத்துச்சண்டை கழகம் சார்பில் மாநில போட்டியில் கலந்து கொள்ள இயலும்.

    மாநில போட்டியில் வெற்றி பெற்றால், மத்தியபிரதேச மாநிலத்தில் இந்த மாதம் நடக்க உள்ள தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க இயலும். எனவே

    1982-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் மட்டும் எலைட் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழக பொது செயலாளர் டி.என்.செழியன் தெரிவித்துள்ளார்.

    • அரையிறுதி சுற்றில் கோவிந்த், கஜகஜ்தான் வீரர் சன்ஜாரிடம் தோல்வியடைந்தார்.
    • நடப்பு ஆசிய சாம்பியன் ஜாபரோவிடம் சுமித் தோல்வியடைந்தார்.

    புதுடெல்லி:

    ஆசிய எலைட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடைபெறுகிறது. இதில், இந்திய வீரர்கள் சுமித், கோவிந்த் குமார் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

    இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில், கோவிந்த் (48 கிலோ எடைப்பிரிவு), கஜகஜ்தான் வீரர் சன்ஜாரிடம் 0:4 என தோல்வியடைந்தார். இதேபோல் 75 கிலோ எடைப்பிரிவில் சுமித், நடப்பு ஆசிய சாம்பியன் ஜாபரோவிடம் (உஸ்பெகிஸ்தான்) 0:5 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார். தாய்லாந்து ஓபனில் சுமித், கோவிந்த் குமார் ஆகிய இருவரும் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    மற்ற இந்திய வீரர்களான சிவ தாபா, முகமது ஹசாமுதீன், நரேந்தர் ஆகியோர் அரையிறுதியில் மோத உள்ளனர். நாளை நடைபெறும் இறுதிப் போட்டிகளில் லவ்லினா, பர்வீன் உள்ளிட்ட 5 இந்திய வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர். 

    • ஷாஸ்வத் 42 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.
    • தங்கப்பதக்க வென்ற மாணவருக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.

    ஊட்டி,

    ஜார்கண்ட் மாநிலம் டாட்டா நகர் ஸ்டேடியத்தில் பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. போட்டியில் நீலகிரி மாவட்டம் பிருந்தாவன் பப்ளிக் பள்ளி மாணவன் ஷாஸ்வத் 42 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.

    தங்கப்பதக்க வென்ற மாணவருக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை அஸ்மா காணும் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் சதீஷ்குமார், ஸ்ரீதர் ஆகியோர் வரவேற்றனர்.

    பாராட்டு விழாவில் மாணவர் ஷாஸ்வத் மற்றும் அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் அப்பாஸ் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த மாணவன் மாநில அளவில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டியில் 2-வது இடமும், மாவட்ட அளவிலான 200 மீட்டர் போட்டியில் தங்கப்பதக்கமும், நீளம் தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கமும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டியில் வெள்ளிப் பதக்கங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஜோடி வெண்கலம் வென்றது.
    • பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.

    பர்மிங்காம்:

    காமன்வெல்த் விளையாட்டு குத்துச் சண்டை பிரிவில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான 92 கிலோ எடைப் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாகர் அலாவத், இங்கிலாந்தின் டீலிசியஸ் ஓரியை எதிர்கொண்டார்.

    இந்தப் போட்டியில் சாகர் 0-5 என்ற கணக்கில் இங்கிலாந்து வீரரிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 


    காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய கலப்பு இரட்டையர் ஜோடியான சவுரவ் கோசல் மற்றும் தீபிகா பல்லிகல் வெண்கலப் பதக்கம் வென்றனர். பதக்கப் பட்டியலில் இந்தியா 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களுடன் 5-வது இடத்தில் உள்ளது.

    • மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நிகாத் சரின் தங்கம் வென்றார்.
    • இன்று ஒரே நாளில் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 3 தங்கம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இன்று இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஏற்கனவே இரண்டு தங்கம் வென்ற நிலையில், மகளிர் பிரிவில் மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது.

    மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவில் நடப்பு உலக சாம்பியனான நிகாத் சரீன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிச்சுற்றில் இவர் வடக்கு அயர்லாந்தின் மெக்னாலை வீழ்த்தினார்.

    இதன்மூலம் இந்தியா 17 தங்கம், 12 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 48 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.

    • காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இன்று இந்தியா 2 தங்கப்பதக்கம் வென்றது.
    • இதன்மூலம் இந்தியா 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 43 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நீத்து காங்காஸ் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இங்கிலாந்து வீராங்கனைக்கு எதிரான போட்டியில் நீத்து கங்காஸ் 5-0 என்ற கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

    இதேபோல், ஆண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் தங்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் இந்தியா 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 43 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.
    • குத்துச்சண்டையில் ரோகித் டோகாஸ் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது.

    இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.

    7-வது நாளில் பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆண்களுக்கான 67 கிலோ எடை பிரிவில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்தியாவின் ரோகித் டோகாஸ் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    குத்துச்சண்டை போட்டியில் இரு அரையிறுதி போட்டிகளிலும் தோல்வி அடைந்தவர்களுக்கும் வெண்கல பதக்கம் உண்டு. இதன் மூலம் ரோகித் டோகாஸ் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

    ×