என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nikhat Zareen"

    • பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் நிகாத் ஜரீன்- குவா யி ஜியான் மோதினர்.
    • இந்த போட்டியில் 5-0 என்ற கணக்கில் நிகாத் தங்கப்பதக்கத்தை வென்றார்.

    உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதி சுற்று உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் பிரமாதமாக செயல்பட்டு அசத்தியதுடன், பாரீஸ் ஒலிம்பிக்கில் சந்தித்த ஏமாற்றத்துக்கு பரிகாரம் தேடிக்கொண்டனர்.

    பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் 2 முறை உலக சாம்பியனான இந்திய நட்சத்திர வீராங்கனை நிகாத் ஜரீன் இறுதி சுற்றில் 5-0 என்ற கணக்கில் சீன தைபேயின் குவா யி ஜியானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை முத்தமிட்டார்.

    வெற்றி குறித்து நிகாத் கூறியதாவது:-

    இன்றைய போட்டியில் சொந்த மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் வெற்றி பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு, எனது தங்கப் பயணத்தைத் தொடங்க முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் எதிர்காலத்தில் இதே வழியில் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் என்று நம்புகிறேன் என கூறினார்.

    • பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிகாத் ஜரீன், ஜப்பானின் யுனா நிஷினகாவை எதிர்கொண்டார்.
    • நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்.

    லிவர்பூல்:

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் 2 முறை உலக சாம்பியனான இந்தியாவின் நிகாத் ஜரீன், ஜப்பானின் யுனா நிஷினகாவை எதிர்கொண்டார். இருவரும் ஆவேசமாக மோதிக் கொண்ட போதிலும் முதல் ரவுண்டில் நிஷினகாவின் கையே சற்று ஓங்கியது.

    அடுத்த ரவுண்டில் நிகாத் ஜரீன் எதிராளிக்கு சில குத்துகளை விட்டு அதை புள்ளியாக மாற்றினார். கடைசி ரவுண்டில் ஜரீனின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் விதமாக நிஷினகா அடிக்கடி அவரை கட்டிப்பிடித்ததால் போட்டி நடுவரின் எச்சரிக்கைக்குள்ளானதுடன், ஒரு புள்ளியை அபராதமாக இழந்தார். இது ஜரீனுக்கு சாதகமாக அமைந்தது. முடிவில் நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் மீனாக்ஷி (48 கிலோ) 5-0 என்ற கணக்கில் சீனாவின் வாங் கிபிங்கை வீழ்த்தி கால்இறுதியை எட்டினார். முன்னதாக லக்ஷயா சாஹர் (80 கிலோ), சுமித் குண்டு (75 கிலோ), சச்சின் சிவாச் (60 கிலோ), நரேந்தர் பெர்வால் (90 கிலோவுக்கு மேல்) ஆகிய இந்திய வீரர்கள் தோற்று நடையை கட்டினர்.

    • லவ்லினா 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் அருந்ததியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
    • 50 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப்போட்டியில் உலக சாம்பியன் நிகாத் ஜரீன் தங்கம் வென்று அசத்தினார்.

    போபால்:

    6-வது எலைட் மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்றது. இதில் அசாமை சேர்ந்த லவ்லினா, 75 கிலோ இறுதிப்போட்டியில் சர்வீசஸ் அணியின் அருந்ததி சவுத்ரியை எதிர்த்துப் போட்டியிட்டார்.

    தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய லவ்லினா 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் அருந்ததியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

    அதேபோல, 50 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப்போட்டியில் உலக சாம்பியன் நிகாத் ஜரீன் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனாமிகாவை எதிர்கொண்டார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவந்த நிகாத், அனாமிகாவை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார்.

    • இதற்கு முன்பு நீது கங்காஸ், சவீதி பூரா ஆகியோர் தங்கம் வென்றனர்.
    • நிகத் ஜரீன் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா மூன்றாவது தங்கம் வென்றுள்ளது. இன்று 50 கிலோ எடைப்பிரிவினருக்கான இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் (வயது 26), வியட்நாமைச் சேர்ந்த நிகுயென்னை 5-0 என வீழ்த்தினார்.

    நிகத் ஜரீன் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துள்ளார். இதற்கு முன்பு நீது கங்காஸ், சவீதி பூரா ஆகியோர் தங்கம் வென்றனர்.

    மகளிர் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகளில் மேரி கோமுக்கு பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்ற 2வது இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் என்பது குறிப்பிடத்தக்கது. லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மேரி கோம், 6 உலக சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

    • துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மானு பாகெர் வெண்கலம் வென்றார்.
    • இதன்மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப் பிரிவில் குத்துச்சண்டையில் இந்தியா சார்பில் நிகாத் ஜரின் முதல் சுற்று ஆட்டத்தில் ஜெர்மன் வீராங்கனையை எதிர்கொண்டார்.

    இதில் நிகாத் ஜரின் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 28 வயதான அவர் கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்துக்கு முன்னேறினார்.

    • துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்றார்.
    • இதன்மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர்,சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவில் குத்துச்சண்டையில் இந்தியா சார்பில் நிகாத் ஜரின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் சீன வீராங்கனையை எதிர்கொண்டார்.

    இதில் சீன வீராங்கனை 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் நிகாத் ஜரின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    ×