என் மலர்
நீங்கள் தேடியது "World Boxing Championship"
- பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் நிகாத் ஜரீன்- குவா யி ஜியான் மோதினர்.
- இந்த போட்டியில் 5-0 என்ற கணக்கில் நிகாத் தங்கப்பதக்கத்தை வென்றார்.
உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதி சுற்று உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் பிரமாதமாக செயல்பட்டு அசத்தியதுடன், பாரீஸ் ஒலிம்பிக்கில் சந்தித்த ஏமாற்றத்துக்கு பரிகாரம் தேடிக்கொண்டனர்.
பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் 2 முறை உலக சாம்பியனான இந்திய நட்சத்திர வீராங்கனை நிகாத் ஜரீன் இறுதி சுற்றில் 5-0 என்ற கணக்கில் சீன தைபேயின் குவா யி ஜியானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை முத்தமிட்டார்.
வெற்றி குறித்து நிகாத் கூறியதாவது:-
இன்றைய போட்டியில் சொந்த மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் வெற்றி பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு, எனது தங்கப் பயணத்தைத் தொடங்க முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் எதிர்காலத்தில் இதே வழியில் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் என்று நம்புகிறேன் என கூறினார்.
- உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரில் நடைபெற்று வருகிறது.
- கால்இறுதியில் உஸ்பெகிஸ்தானின் குமோரபோனு மாமஜோனோவாவுடன் அவர் மோதுகிறார்.
லிவர்பூல்:
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா 5-0 என்ற கணக்கில் பிரேசிலின் ஜூஸ்லின் ரோமியுவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றாா். கால்இறுதியில் உஸ்பெகிஸ்தானின் குமோரபோனு மாமஜோனோவாவுடன் அவர் மோதுகிறார்.
மற்ற பிரிவுகளில் இந்திய வீராங்கனைகள் சனமச்சா சானு (70 கிலோ), சாக்ஷி சவுத்ரி (54 கிலோ) ஆகியோர் தோற்று வெளியேறினர்.
ஆண்களுக்கான 2-வது சுற்றில் 65 கிலோ பிரிவில் இந்தியாவின் அபினாஷ் ஜாம்வால் 5-0 என மெக்சிகோவின் ஹியுகோ பேர்ரனை வீழ்த்தினாா்.
10-வது உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.
இதன் அரை இறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனைகளான மேரிகோம் (48 கிலோ பிரிவு), சோனியா சாஹல் (57 கிலோ பிரிவு) லோவிலினா போர்கோஹன் (69 கிலோ பிரிவு), சிம்ரன்ஜித் கவூர் (64 கிலோ பிரிவு) ஆகிய 4 பேர் தகுதி பெற்றனர். இதன்மூலம் இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதியானது.
பிங்கிராணி, மனிஷா, பாக்யபதி, சீமா புனியா ஆகிய 4 இந்திய வீராங்கனைகளும் கால்இறுதியில் தோற்றனர்.
35 வயதான மேரிகோம் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் ஏற்கனவே 5 தங்கமும், ஒரு வெள்ளியும் பெற்று இருந்தார்.
தற்போது மேலும் ஒரு பதக்கத்தால் அவரது பதக்க எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. இது புதிய சாதனையாகும். இதற்கு முன்பு அயர்லாந்து வீராங்கனை கேட்டி டெய்லர் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் 6 பதக்கம் வென்றதே சாதனையாக இருந்தது. #MaryKom #LovlinaBorgohain #SimranjitKaur #SoniaChahal #WorldBoxing
இதன் மூலம் 35 வயதாகும் மேரி கோம் உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடர் 7-வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதற்கு முன் 2010-ல் தங்கப்பதக்கம் வென்ற மேரி கோம் ஐந்து தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

இந்த வெற்றி குறித்து மேரி கோம் கூறுகையில் ‘‘இது ஒரு கடினமான சண்டை. மிகவும் கடினமான சண்டையில்லை. அதேவேளையில் மிகவும் எளிதானதும் கிடையாது. ஏராளமான சிறந்த சீன வீராங்கனைகள் வந்து கொண்டிருக்கிறார்கள். ஏராளமான சீன வீராங்கனைகளை சந்தித்துள்ளேன். ஆனார், வு யு-வை இதற்கு முன் நான் எதிர்கொண்டது கிடையாது’’ என மேரி கோம் தெரிவித்தார்.
இந்த பிரச்சினை குறித்து சர்வதேச குத்துச்சண்டை சங்கம் தனது பிரதிநிதி மூலம் விசாரித்தது. இதைத்தொடர்ந்து பேடார் லிசோவை இடைநீக்கம் செய்து சர்வதேச குத்துச்சண்டை சங்கம் உத்தரவிட்டது. அத்துடன் அவரது அடையாள அட்டையும் பறிக்கப்பட்டது. அவர் எஞ்சிய போட்டிகளில் மைதானத்துக்குள் நுழைய முடியாது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இடைநீக்கம் செய்யப்பட 57 வயதான பேடார் லிசோவ் (பல்கேரியா) ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. #WorldBoxing #Championship #PetarLesov






