என் மலர்

  செய்திகள்

  உலக சாம்பியன்ஷிப்ஸ் குத்துச்சண்டை- மேரி கோம் அரையிறுதிக்கு முன்னேற்றம்- 7-வது பதக்கம் உறுதி
  X

  உலக சாம்பியன்ஷிப்ஸ் குத்துச்சண்டை- மேரி கோம் அரையிறுதிக்கு முன்னேற்றம்- 7-வது பதக்கம் உறுதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்கள் உலக சாம்பியன்ஷிப்ஸ் குத்துச்சண்டையில் மேரி கோம் அரையிறுதிக்கு முன்னேறி 7-வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். #MaryKom #WorldBoxing
  10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. 48 கிலோ ‘லைட் பிளைவெயிட்’ பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான மேரி கோம் சீனாவில் வு யு-வை எதிர்கொண்டார். இதில் மேரி கோம் 5-0 என வு யு-வை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

  இதன் மூலம் 35 வயதாகும் மேரி கோம் உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடர் 7-வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதற்கு முன் 2010-ல் தங்கப்பதக்கம் வென்ற மேரி கோம் ஐந்து தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.  இந்த வெற்றி குறித்து மேரி கோம் கூறுகையில் ‘‘இது ஒரு கடினமான சண்டை. மிகவும் கடினமான சண்டையில்லை. அதேவேளையில் மிகவும் எளிதானதும் கிடையாது. ஏராளமான சிறந்த சீன வீராங்கனைகள் வந்து கொண்டிருக்கிறார்கள். ஏராளமான சீன வீராங்கனைகளை சந்தித்துள்ளேன். ஆனார், வு யு-வை இதற்கு முன் நான் எதிர்கொண்டது கிடையாது’’ என மேரி கோம் தெரிவித்தார்.
  Next Story
  ×