என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Boxing Championships"

    • பெண்கள் 4 பிரிவில் பதக்கம் வென்றனர்.
    • ஆண்கள் பிரிவில் ஒருவர் கூட பதக்கம் வெல்லவில்லை.

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீராங்கனைகள் பதக்கம் வென்று அசத்தினர்.

    ஜெய்ஸ்மின் லம்போரியா 57 கிலோ எடைப்பிிவில் தங்கம் வென்றார். அதேபோல் 48 கிலோ எடைப்பிரிவில் மீனாட்சி ஹூடா தங்கம் வென்றார். பூஜா ராணி 80 கிலோ எடைப்பிரிவில் வெண்கல பதக்கமும், நுபுர் ஷொரன் 80 கிலோ எடைக்கு மேல் எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

    ஜெய்ஸ்மின் பதக்கம் வென்ற பிரிவைத் தவிர்த்து, மற்ற மூன்று வீராங்கனைகள் வெற்றி பெற்ற பிரிவு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இடம்பெறாதைவாகும். இதனால் போட்டிகள் கடுமையாக இல்லை எனக் கூறப்படுகிறது. நுபுர் பிரிவில் 10 வீராங்கனைகள்தான் கலந்து கொண்டனர். 80 கிலோ எடைப்பிரிவில் 12 வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    வீராங்கனைகள் பிரிவுகளிலாவது 4 பதக்கம் கிடைத்தது. ஆண்கள் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை.

    ஜட்டுமணி சிங் (50 கிலோ) அபினாஷ் ஜாம்வால் (65 கிலோ) ஆகியோர் மட்டுமே காலிறுதிக்கு முன்னேறினர். மறற வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக முதல் ரவுண்டிலேயே தோல்வியடைந்தனர்.

    உலக குத்துச் சண்டை சங்கம் பிரச்சனை காரணமாக இந்திய வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு இரண்டு தொடர்களில் மட்டுமே விளையாடியுள்ளனர். வீராங்கனைகள் ஒரேயொரு தொடரில் மட்டும்தான் விளையாடியுள்ளனர்.

    • உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது.
    • 48 கிலோ பிரிவில் இந்தியாவின் மீனாட்சி ஹூடா தங்கப் பதக்கம் வென்றார்.

    லிவர்பூல்:

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் 48 கிலோ பிரிவில் இந்தியாவின் மீனாட்சி ஹூடா, கஜகஸ்தான் வீராங்கனையை 4-1 என வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

    ஏற்கனவே பெண்கள் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இறுதிப் போட்டியில் போலந்தின் ஜூலியா ஸ்செரெமெட்டாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
    • ஜூலியா பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர் ஜாஸ்மின் லம்போரியா ஆவர்.

    பெண்களுக்கான 57 கிலோ பிரிவில் (பெதர் வெயிட்) இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்றார்.

    அவர் இறுதிப் போட்டியில் போலந்தின் ஜூலியா ஸ்செரெமெட்டாவை 4-1 என்ற கணக்கில் (30-27, 29-28, 30-27, 28-29, 29-28) வீழ்த்தினார். ஜூலியா பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர் ஆவர்.

    உலக குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் பட் டம் வென்ற 9-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஜாஸ்மின் பெற்றார். மேரி கோம் (6 தடவை), நிகாத் ஜரீன் (2 முறை), சரிதா தேவி, ஜென்னி, லேகா, நிது கங்காஸ், லவ் லினா போர்க்கோஹெய்ன் சவிதா புரா (தலா 1 தடவை) ஆகியோர் ஏற்கனவே உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று இருந்தனர்.

    தனது 3-வது உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 24 வயதான ஜாஸ்மின் தங்கம் வென்று சாதித்துள்ளார்.

    மற்றொரு இந்திய வீராங்கனை நுபுர் ஷியோரனுக்கு (80 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவு) வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அவர் இறுதிப் போட்டியில் போலந்தின் அகதா காஸ்மார்ஸ்கா விடம் 2-3 என்ற கணக்கில் தோற்று இருந்தார்.

    மற்றொரு இந்திய வீராங்கனை பூஜாவுக்கு (80 கிலோ பிரிவு) வெண்கலப் பதக்கம் கிடைத்தது. அவர் அரை இறுதியில் எமிலி அஸ்கித்திடம் (இங்கிலாந்து) 1-4 என்ற கணக்கில் தோற்று இருந்தார்.

    • உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதியானது.
    • வீராங்கனைகளே இந்த பதக்கங்களை பெற்றுக் கொடுத்தனர்.

    லிவர்பூர்:

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் இந்திய வீராங்கனை நூபுர் ஷியோரன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 80-க்கும் மேற்பட்ட எடை பிரிவின் அரைஇறுதியில் அவர் துருக்கி வீராங்கனை ஷெய்மா துஸ்டசை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். ஏற்கனவே 57 கிலோ பிரிவில் ஜாஸ்மின் லம்போரியா இறுதிப்போட்டிக்கு நுழைந்து இருந்தார்.

    உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதியானது. வீராங்கனைகளே இந்த பதக்கங்களை பெற்றுக் கொடுத்தனர்.

    • வெறும் 10 வீராங்கனைகள் மட்டுமே இந்த பிரிவில் களம் கண்டனர்.
    • அரியானாவைச் சேர்ந்த 26 வயதான நுபுர், இந்திய குத்துச்சண்டை ஜாம்பவான் ஹவாசிங்கின் பேத்தி ஆவார்.

    லிவர்பூல்:

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 80 கிலோவுக்கு மேலான பிரிவில் நேரடியாக கால்இறுதியில் கால்பதித்த இந்திய வீராங்கனை நுபுர் ஷியாரன் 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ஒல்டினோ சோடிம்போவாவை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

    இதன் மூலம் குறைந்தது வெண்கலப்பதக்கத்தை அவர் உறுதி செய்தார். அரியானாவைச் சேர்ந்த 26 வயதான நுபுர், இந்திய குத்துச்சண்டை ஜாம்பவான் ஹவாசிங்கின் பேத்தி ஆவார்.

    80 கிலோவுக்கு மேல், ஒலிம்பிக்கில் இடம் பெறாத பிரிவாகும். அதனால் வீராங்கனைகள் மத்தியில் வரவேற்பு இல்லை. வெறும் 10 வீராங்கனைகள் மட்டுமே இந்த பிரிவில் களம் கண்டது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு கால்இறுதியில் 2 முறை உலக சாம்பியனான இந்தியாவின் நிகாத் ஜரீன் 0-5 என்ற கணக்கில் (51 கிலோ) துருக்கியின் ககிரோக்லு புஸ் நாசிடம் தோற்று ஏமாற்றம் அளித்தார்.

    முன்னதாக ஆண்கள் பிரிவில் ஜதுமணி சிங் (48 கிலோ), அபினாஷ் ஜம்வால் (65 கிலோ) ஆகியோர் தங்களது பிரிவில் வெற்றி பெற்று கால்இறுதியை எட்டினர்.

    • பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிகாத் ஜரீன், ஜப்பானின் யுனா நிஷினகாவை எதிர்கொண்டார்.
    • நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்.

    லிவர்பூல்:

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் 2 முறை உலக சாம்பியனான இந்தியாவின் நிகாத் ஜரீன், ஜப்பானின் யுனா நிஷினகாவை எதிர்கொண்டார். இருவரும் ஆவேசமாக மோதிக் கொண்ட போதிலும் முதல் ரவுண்டில் நிஷினகாவின் கையே சற்று ஓங்கியது.

    அடுத்த ரவுண்டில் நிகாத் ஜரீன் எதிராளிக்கு சில குத்துகளை விட்டு அதை புள்ளியாக மாற்றினார். கடைசி ரவுண்டில் ஜரீனின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் விதமாக நிஷினகா அடிக்கடி அவரை கட்டிப்பிடித்ததால் போட்டி நடுவரின் எச்சரிக்கைக்குள்ளானதுடன், ஒரு புள்ளியை அபராதமாக இழந்தார். இது ஜரீனுக்கு சாதகமாக அமைந்தது. முடிவில் நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் மீனாக்ஷி (48 கிலோ) 5-0 என்ற கணக்கில் சீனாவின் வாங் கிபிங்கை வீழ்த்தி கால்இறுதியை எட்டினார். முன்னதாக லக்ஷயா சாஹர் (80 கிலோ), சுமித் குண்டு (75 கிலோ), சச்சின் சிவாச் (60 கிலோ), நரேந்தர் பெர்வால் (90 கிலோவுக்கு மேல்) ஆகிய இந்திய வீரர்கள் தோற்று நடையை கட்டினர்.

    உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரிகோம், மனிஷா ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினர். #WorldBoxing #Championship #MaryKom #ManishaMaun
    புதுடெல்லி:

    10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 48 கிலோ உடல் எடைபிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் அடியெடுத்து வைத்த இந்திய வீராங்கனையும், 5 முறை உலக சாம்பியனுமான மேரிகோம், அய்ஜெரிம் கேசனாயேவாவுடன் (கஜகஸ்தான்) கோதாவில் இறங்கினார். இது தலா 3 நிமிடங்கள் வீதம் மூன்று ரவுண்ட் கொண்ட ஆட்டமாகும். முதல் ரவுண்டில் ஆதிக்கம் செலுத்திய மேரிகோம், 2-வது ரவுண்டில் கொஞ்சம் தடுமாறினார். சில குத்துகளை வாங்கிய மேரிகோம், ஒரு முறை களத்தை சுற்றி இருக்கும் கயிற்றிலும் எதிராளியால் தள்ளப்பட்டார். இதன் பிறகு சுதாரித்துக் கொண்ட மேரிகோம் கடைசி ரவுண்டில் தடுப்பாட்டத்தில் கவனமாக இருந்ததோடு, ஆக்ரோஷமாக சில குத்துகளை விட்டு புள்ளிகளை சேர்த்தார். 5 நடுவர்களும் அவருக்கு சாதகமாக தீர்ப்பளிக்க, மேரிகோம் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்.



    மூன்று குழந்தைகளின் தாயான 35 வயதான மேரிகோம் கூறுகையில், ‘இது போன்ற பெரிய போட்டிகளில் எப்போதும் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். ஆனால் அது இப்போது எனக்கு பழகி போய் விட்டது. குத்துச்சண்டை களத்திற்குள் புகுந்ததும் எனது நம்பிக்கை அதிகரித்து விடும். இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியிருப்பது சந்தோஷம் அளிக்கிறது. ஆனாலும் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. எத்தகைய சவாலையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்’ என்றார். மேரிகோம் கால்இறுதியில் சீனாவின் யு வூவை நாளை சந்திக்கிறார்.

    மற்றொரு ஆட்டத்தில் ‘இளம் புயல்’ இந்தியாவின் மனிஷா மோன் 54 கிலோ பிரிவில் உலக சாம்பியன் டினா ஜோலாமானுடன் (கஜகஸ்தான்) மல்லுக்கட்டினார். உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வலம் வந்த மனிஷா 5-0 என்ற புள்ளி கணக்கில் (30-27, 30-27, 30-27, 29-28, 29-28) உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்து கால்இறுதியை எட்டினார். ‘மிகவும் நம்பிக்கையுடன் ஜோலாமானை எதிர்கொண்டேன். களத்திற்குள் வந்ததும் எதிராளி உலக சாம்பியனா அல்லது வெண்கலம் வென்றவரா என்பது எனக்கு ஒரு பிரச்சினையே கிடையாது’ என்று மனிஷா குறிப்பிட்டார்.

    இதே போல் லவ்லினா போர்கோஹைன் (இந்தியா) 69 கிலோ பிரிவில் ஏதெய்னா பைலோனையும் (பனாமா), பாக்யபதி கச்சாரி (இந்தியா) 81 கிலோ பிரிவில் ஜெர்மனியின் அரினா நிகோலெட்டாவையும் தோற்கடித்து கால் இறுதியை உறுதி செய்தனர்.

    அதே சமயம் முன்னாள் சாம்பியன் இந்தியாவின் சரிதா தேவி ஏமாற்றம் அளித்தார். அவர் 60 கிலோ பிரிவில் 2-3 என்ற புள்ளி கணக்கில் அயர்லாந்தின் கெலி ஹாரிங்கிடம் தோற்று வெளியேறினார். போட்டிக்கு பிறகு 36 வயதான சரிதா தேவி கூறுகையில், ‘நடுவர்களின் தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. மூன்று ரவுண்டிலும் எனது கை தான் ஓங்கி இருந்தது. ஏற்கனவே 2014-ம் ஆண்டு ஆசிய போட்டியின் போது சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடையை அனுபவித்தேன். அதனால் இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை’ என்றார். #WorldBoxing #Championship #MaryKom #ManishaMaun
    ×