என் மலர்
நீங்கள் தேடியது "உலக குத்துச்சண்டை தொடர்"
- உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது.
- 48 கிலோ பிரிவில் இந்தியாவின் மீனாட்சி ஹூடா தங்கப் பதக்கம் வென்றார்.
லிவர்பூல்:
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் 48 கிலோ பிரிவில் இந்தியாவின் மீனாட்சி ஹூடா, கஜகஸ்தான் வீராங்கனையை 4-1 என வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
ஏற்கனவே பெண்கள் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வெறும் 10 வீராங்கனைகள் மட்டுமே இந்த பிரிவில் களம் கண்டனர்.
- அரியானாவைச் சேர்ந்த 26 வயதான நுபுர், இந்திய குத்துச்சண்டை ஜாம்பவான் ஹவாசிங்கின் பேத்தி ஆவார்.
லிவர்பூல்:
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 80 கிலோவுக்கு மேலான பிரிவில் நேரடியாக கால்இறுதியில் கால்பதித்த இந்திய வீராங்கனை நுபுர் ஷியாரன் 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ஒல்டினோ சோடிம்போவாவை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் குறைந்தது வெண்கலப்பதக்கத்தை அவர் உறுதி செய்தார். அரியானாவைச் சேர்ந்த 26 வயதான நுபுர், இந்திய குத்துச்சண்டை ஜாம்பவான் ஹவாசிங்கின் பேத்தி ஆவார்.
80 கிலோவுக்கு மேல், ஒலிம்பிக்கில் இடம் பெறாத பிரிவாகும். அதனால் வீராங்கனைகள் மத்தியில் வரவேற்பு இல்லை. வெறும் 10 வீராங்கனைகள் மட்டுமே இந்த பிரிவில் களம் கண்டது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு கால்இறுதியில் 2 முறை உலக சாம்பியனான இந்தியாவின் நிகாத் ஜரீன் 0-5 என்ற கணக்கில் (51 கிலோ) துருக்கியின் ககிரோக்லு புஸ் நாசிடம் தோற்று ஏமாற்றம் அளித்தார்.
முன்னதாக ஆண்கள் பிரிவில் ஜதுமணி சிங் (48 கிலோ), அபினாஷ் ஜம்வால் (65 கிலோ) ஆகியோர் தங்களது பிரிவில் வெற்றி பெற்று கால்இறுதியை எட்டினர்.
- பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிகாத் ஜரீன், ஜப்பானின் யுனா நிஷினகாவை எதிர்கொண்டார்.
- நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்.
லிவர்பூல்:
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் 2 முறை உலக சாம்பியனான இந்தியாவின் நிகாத் ஜரீன், ஜப்பானின் யுனா நிஷினகாவை எதிர்கொண்டார். இருவரும் ஆவேசமாக மோதிக் கொண்ட போதிலும் முதல் ரவுண்டில் நிஷினகாவின் கையே சற்று ஓங்கியது.
அடுத்த ரவுண்டில் நிகாத் ஜரீன் எதிராளிக்கு சில குத்துகளை விட்டு அதை புள்ளியாக மாற்றினார். கடைசி ரவுண்டில் ஜரீனின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் விதமாக நிஷினகா அடிக்கடி அவரை கட்டிப்பிடித்ததால் போட்டி நடுவரின் எச்சரிக்கைக்குள்ளானதுடன், ஒரு புள்ளியை அபராதமாக இழந்தார். இது ஜரீனுக்கு சாதகமாக அமைந்தது. முடிவில் நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் மீனாக்ஷி (48 கிலோ) 5-0 என்ற கணக்கில் சீனாவின் வாங் கிபிங்கை வீழ்த்தி கால்இறுதியை எட்டினார். முன்னதாக லக்ஷயா சாஹர் (80 கிலோ), சுமித் குண்டு (75 கிலோ), சச்சின் சிவாச் (60 கிலோ), நரேந்தர் பெர்வால் (90 கிலோவுக்கு மேல்) ஆகிய இந்திய வீரர்கள் தோற்று நடையை கட்டினர்.
- 50 கிலோ எடைப்பிரிவில் சீன வீராங்கனை ஹூ மெயி-யிடம் அனாமிகா தோல்வியைத் தழுவினார்.
- மகளிர் 81 கிலோ எடைப்பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை எம்மாவிடம் 0-5 என்ற புள்ளிகள் கணக்கில் அனுபமா தோல்வி கண்டார்.
பல்கேரியா:
பல்கேரியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் அனாமிகா, அனுபமா மற்றும் கோவிந்த் ஆகியோர் வெள்ளி வென்று உள்ளனர். மகளிர் 81 கிலோ எடைப்பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை எம்மாவிடம் 0-5 என்ற புள்ளிகள் கணக்கில் அனுபமா தோல்வி கண்டார்.
50 கிலோ எடைப்பிரிவில் சீன வீராங்கனை ஹூ மெயி-யிடம் அனாமிகா தோல்வியைத் தழுவினார். இதேபோல், ஆடவர் 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கோவிந்த் சஹானி, உஸ்பெகிஸ்தான் வீரரிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி கண்டார்.






