என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு நுபுர் தகுதி
    X

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு நுபுர் தகுதி

    • வெறும் 10 வீராங்கனைகள் மட்டுமே இந்த பிரிவில் களம் கண்டனர்.
    • அரியானாவைச் சேர்ந்த 26 வயதான நுபுர், இந்திய குத்துச்சண்டை ஜாம்பவான் ஹவாசிங்கின் பேத்தி ஆவார்.

    லிவர்பூல்:

    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 80 கிலோவுக்கு மேலான பிரிவில் நேரடியாக கால்இறுதியில் கால்பதித்த இந்திய வீராங்கனை நுபுர் ஷியாரன் 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ஒல்டினோ சோடிம்போவாவை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

    இதன் மூலம் குறைந்தது வெண்கலப்பதக்கத்தை அவர் உறுதி செய்தார். அரியானாவைச் சேர்ந்த 26 வயதான நுபுர், இந்திய குத்துச்சண்டை ஜாம்பவான் ஹவாசிங்கின் பேத்தி ஆவார்.

    80 கிலோவுக்கு மேல், ஒலிம்பிக்கில் இடம் பெறாத பிரிவாகும். அதனால் வீராங்கனைகள் மத்தியில் வரவேற்பு இல்லை. வெறும் 10 வீராங்கனைகள் மட்டுமே இந்த பிரிவில் களம் கண்டது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு கால்இறுதியில் 2 முறை உலக சாம்பியனான இந்தியாவின் நிகாத் ஜரீன் 0-5 என்ற கணக்கில் (51 கிலோ) துருக்கியின் ககிரோக்லு புஸ் நாசிடம் தோற்று ஏமாற்றம் அளித்தார்.

    முன்னதாக ஆண்கள் பிரிவில் ஜதுமணி சிங் (48 கிலோ), அபினாஷ் ஜம்வால் (65 கிலோ) ஆகியோர் தங்களது பிரிவில் வெற்றி பெற்று கால்இறுதியை எட்டினர்.

    Next Story
    ×