என் மலர்

  நீங்கள் தேடியது "Quarters"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சென்னிமலை-ஊத்துக்குளி மெயின் ரோட்டில் காலிகுடங்களுடன் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

  சென்னிமலை:

  சென்னிமலை யூனியன், புஞ்சை பாலதொழுவு ஊராட்சிக்குட்பட்ட வெங்கமேடு, மேற்கு பள்ளபாளையம், கிழக்கு பள்ளபாளையம், ஒலப்பாளையம், ராசம்பாளையம், திப்பம்பாளையம், வசந்தம் நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

  இந்த பகுதி நொய்யல் ஆற்றின் ஒரத்துப்பாளையம் அணையொட்டிய பகுதிகளில் வருவதால் சாயகழிவு நீர் தேங்கிய காரணத்தால் இந்த பகுதி முழுவதும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. இதனால் இந்த பகுதி மக்களுக்கு கொடுமுடி, முத்தூர், காங்கேயம் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

  இந்த நிலையில் இன்று காலை குடிநீர் கேட்டு புஞ்சை பாலதொழுவு கிராம மக்கள் சென்னிமலை -ஊத்துக்குளி மெயின் ரோட்டில் ஆலமரம் 4 ரோடு சந்திப்பில் அரசு டவுன் பஸ்சினை சிறைப்பிடித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தீர்வு ஆக வில்லை. இதனால் காலையில் திருப்பூர் பனியன் நிறுவனத்திக்கு வேலைக்கு செல்ல வேண்டிய பணியாளர்கள் செல்லும் வேன்கள் அதிகளவில் வந்ததால் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  உடனடியாக பெருந்துறை தாசில்தார் குமரேசன், மாவட்ட கவுன்சிலரும், சென்னிமலை மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளருமான எஸ்.ஆர்.எஸ்.செல்வம், புஞ்சை பாலதொழுவு ஊராட்சி தலைவர் தங்கமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  உடனடியாக லாரி தண்ணீர் வழங்கவும், தொடர்ந்து நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட 9 பேர் கொண்ட கமிட்டி அமைத்து விரைவில் சென்னிமலை யூனியன் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. தலைமையில் கூட்டம் நடத்தி அதற்கு நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் குமரேசன் உறுதிமொழி கொடுத்ததை தொடர்ந்து ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியல் கைவிடப்பட்டது.

  இந்த சாலை மறியலால் சென்னிமலை- ஊத்துக்குளி ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரிகோம், மனிஷா ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினர். #WorldBoxing #Championship #MaryKom #ManishaMaun
  புதுடெல்லி:

  10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 48 கிலோ உடல் எடைபிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் அடியெடுத்து வைத்த இந்திய வீராங்கனையும், 5 முறை உலக சாம்பியனுமான மேரிகோம், அய்ஜெரிம் கேசனாயேவாவுடன் (கஜகஸ்தான்) கோதாவில் இறங்கினார். இது தலா 3 நிமிடங்கள் வீதம் மூன்று ரவுண்ட் கொண்ட ஆட்டமாகும். முதல் ரவுண்டில் ஆதிக்கம் செலுத்திய மேரிகோம், 2-வது ரவுண்டில் கொஞ்சம் தடுமாறினார். சில குத்துகளை வாங்கிய மேரிகோம், ஒரு முறை களத்தை சுற்றி இருக்கும் கயிற்றிலும் எதிராளியால் தள்ளப்பட்டார். இதன் பிறகு சுதாரித்துக் கொண்ட மேரிகோம் கடைசி ரவுண்டில் தடுப்பாட்டத்தில் கவனமாக இருந்ததோடு, ஆக்ரோஷமாக சில குத்துகளை விட்டு புள்ளிகளை சேர்த்தார். 5 நடுவர்களும் அவருக்கு சாதகமாக தீர்ப்பளிக்க, மேரிகோம் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்.  மூன்று குழந்தைகளின் தாயான 35 வயதான மேரிகோம் கூறுகையில், ‘இது போன்ற பெரிய போட்டிகளில் எப்போதும் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். ஆனால் அது இப்போது எனக்கு பழகி போய் விட்டது. குத்துச்சண்டை களத்திற்குள் புகுந்ததும் எனது நம்பிக்கை அதிகரித்து விடும். இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியிருப்பது சந்தோஷம் அளிக்கிறது. ஆனாலும் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. எத்தகைய சவாலையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்’ என்றார். மேரிகோம் கால்இறுதியில் சீனாவின் யு வூவை நாளை சந்திக்கிறார்.

  மற்றொரு ஆட்டத்தில் ‘இளம் புயல்’ இந்தியாவின் மனிஷா மோன் 54 கிலோ பிரிவில் உலக சாம்பியன் டினா ஜோலாமானுடன் (கஜகஸ்தான்) மல்லுக்கட்டினார். உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வலம் வந்த மனிஷா 5-0 என்ற புள்ளி கணக்கில் (30-27, 30-27, 30-27, 29-28, 29-28) உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்து கால்இறுதியை எட்டினார். ‘மிகவும் நம்பிக்கையுடன் ஜோலாமானை எதிர்கொண்டேன். களத்திற்குள் வந்ததும் எதிராளி உலக சாம்பியனா அல்லது வெண்கலம் வென்றவரா என்பது எனக்கு ஒரு பிரச்சினையே கிடையாது’ என்று மனிஷா குறிப்பிட்டார்.

  இதே போல் லவ்லினா போர்கோஹைன் (இந்தியா) 69 கிலோ பிரிவில் ஏதெய்னா பைலோனையும் (பனாமா), பாக்யபதி கச்சாரி (இந்தியா) 81 கிலோ பிரிவில் ஜெர்மனியின் அரினா நிகோலெட்டாவையும் தோற்கடித்து கால் இறுதியை உறுதி செய்தனர்.

  அதே சமயம் முன்னாள் சாம்பியன் இந்தியாவின் சரிதா தேவி ஏமாற்றம் அளித்தார். அவர் 60 கிலோ பிரிவில் 2-3 என்ற புள்ளி கணக்கில் அயர்லாந்தின் கெலி ஹாரிங்கிடம் தோற்று வெளியேறினார். போட்டிக்கு பிறகு 36 வயதான சரிதா தேவி கூறுகையில், ‘நடுவர்களின் தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. மூன்று ரவுண்டிலும் எனது கை தான் ஓங்கி இருந்தது. ஏற்கனவே 2014-ம் ஆண்டு ஆசிய போட்டியின் போது சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடையை அனுபவித்தேன். அதனால் இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை’ என்றார். #WorldBoxing #Championship #MaryKom #ManishaMaun
  ×