search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.வி.சிந்து"

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
    • இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 14-வது இடம் பிடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவருடைய சிறந்த தரநிலையாகும். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் அவர் தரவரிசையில் முன்னேறியுள்ளார்.

    மற்ற இந்திய வீரர்கள் லக்ஷயா சென் 12-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் 20-வது இடத்திலும் உள்ளனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 14-வது இடம் பிடித்துள்ளார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 2 இடம் உயர்ந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஒரு இடம் முன்னேறி 11-வது இடத்தை தனதாக்கினார்.

    உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 2 இடம் உயர்ந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இது அவருடைய சிறந்த தரநிலையாகும். மற்ற இந்திய வீரர்கள் லக்ஷயா சென் 22-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் 23-வது இடத்திலும் உள்ளனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஒரு இடம் முன்னேறி 11-வது இடத்தை தனதாக்கினார்.

    • ஜப்பான் நாட்டு டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா முதல் இடம் பிடித்து உள்ளார்.
    • 2வது இடத்தில், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் உள்ளார்.

    உலக அளவில் அதிக சம்பளம் பெறும் வீராங்கனைகளின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற, இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்துவுக்கு இந்த பட்டியலில் 12வது இடம் கிடைத்து உள்ளது.

    இந்த பட்டியலில், ஜப்பான் நாட்டு டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா முதல் இடம் பிடித்து உள்ளார்.

    அவரது மொத்த வருவாய் ரூ.420 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. 2வது இடத்தில், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் உள்ளார். அவரது வருவாய் ரூ.339 கோடியாக உள்ளது.

    இந்த பட்டியலில், பனிச்சறுக்கு விளையாட்டுகளில் ஒன்றான பிரீஸ்டைல் ஸ்கையர் பிரிவில் விளையாடி வரும் அமெரிக்கா நாட்டில் பிறந்தவரான எய்லீன் கூ என்ற வீராங்கனை 3வது இடம் பிடித்து உள்ளார்.

    இந்நிலையில், 12வது இடம் பிடித்துள்ள பி.வி.சிந்து கடந்த 2022ம் ஆண்டில் அவருடைய மொத்த வருவாய் ரூ.58 கோடியாக இருந்து உள்ளது.

    அவற்றில், களத்தில் விளையாடி கிடைத்த தொகை ரூ.82 லட்சம் என்றும் மற்றும் களத்தில் அல்லாமல் வெளியில் இருந்து கிடைத்த தொகையானது ரூ.57.5 கோடி என்றும் கூறப்படுகிறது.

    • காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் இன்று இந்தியா 2 பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
    • பி.வி.சிந்து மற்றும் லக்‌ஷயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.

    இன்று நடைபெற்ற பேட்மிண்டன் பெண்களுக்கான அரையிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சிங்கப்பூர் வீராங்கனையை 21-19, 21-17 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப்போடிக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஆண்களுக்கான அரையிறுதியில் இந்தியாவின் லக்‌ஷயா சென், சிங்கப்பூர் வீரரை 21-10, 18-21, 21-16 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இதையடுத்து, பேட்மிண்டன் பிரிவில் இரு பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

    • முதல் செட்டை இழந்த பிவி சிந்து இரண்டாவது செட்டை கைப்பற்றினார்.
    • காலிறுதியில் சீன தைபே வீராங்கனையிடம் பிவி சிந்து தோல்வி அடைந்தார்.

    கோலாலம்பூர்:

    மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதியில் சீன தைபே வீராங்கனை டாய் சூ யீங்கை எதிர்கொண்டார்.

    முதல் செட்டை 13-21 என்ற கணக்கில் இழந்த பிவி சிந்து, இரண்டாவது செட்டை 21-12 என வென்றார். சுதாரித்துக் கொண்ட டாய் சூ யீங் 3வது சுற்றை 21-12 என கைப்பற்றினார்.

    சுமார் 55 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் பிவி சிந்து 13-21, 21-12, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • காலிறுதிக்கு முந்தைய சுற்றில், சீன வீராங்கனையை எளிதாக வீழ்த்தினார் பி.வி.சிந்து
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் பிரணாயிடம், சீன தைபே வீரர் தோல்வி அடைந்தார்.

    கோலாலம்பூர்:

    மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய போட்டியில் சீன வீராங்கனை ஜாங் யீ மன்னை எதிர்கொண்டார்.

    28 நிமிடங்களே நடந்த இந்த போட்டியில், தரவரிசையில் 32 வது இடத்தில் இருக்கும் சீனாவின் ஜாங் யி மன்னை 21-12, 21-10 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பிரணாய் 21-19 21-16 என்ற கணக்கில் சீன தைபேயின் வாங் சூ வெய்யை வீழ்த்தினார். காலிறுதியில் அவர் ஜப்பானின் காண்டா சுனேயாமாவை எதிர்கொள்கிறார்.

    • மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் சீன வீராங்கனையிடம் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.
    • இதன்மூலம் மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியிலிருந்து அவர் வெளியேறினார்.

    கோலாலம்பூர்:

    மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீன தைபே வீராங்கனை டாய் சூ யிங் ஆகியோர் மோதினர்.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் சுற்றை 21-13 என்ற கணக்கில் பி.வி.சிந்து வென்றார். அடுத்து சுதாரித்துக் கொண்ட

    சூ யிங் அடுத்த இரு செட்களை 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வென்றார். இந்த தோல்வியின் மூலம் மலேசிய ஓபன் போட்டியிலிருந்து பி.வி.சிந்து வெளியேறினார்.

    துருக்கி வீராங்கனை நெஸ்லிகனுடன் இதுவரை நேருக்கு நேர் மோதிய 4 போட்டிகளிலும் சிந்து வெற்றி பெற்றுள்ளார்.
    பாலி:

    இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சூப்பர்-750 பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து (வயது 26) அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், பி.வி.சிந்து, துருக்கி வீராங்கனை நெஸ்லிகன் யிஜித்தை எதிர்கொண்டார்.

    துவக்கம் முதலே ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிந்து, 35 நிமிடங்களில் 21-13, 21-10 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார். நெஸ்லிகனும் சிந்துவும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர். இதில் 4 போட்டிகளிலும் சிந்து வெற்றி பெற்றுள்ளார். கடந்த மாதம் டென்மார்க் ஓபனிலும் நெஸ்லிகனை வீழ்த்தினார்.

    இந்தோனேசிய மாஸ்டர்ஸ் தொடரில் இதுவரை எளிதாக வெற்றி பெற்ற பி.வி.சிந்துவுக்கு அரையிறுதியில் கடும் சவால் காத்திருக்கிறது. ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி அல்லது தாய்லாந்து வீராங்கனை சோச்சுவாங்குடன் மோதுவார்.
    இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் காலிறுதி ஆட்டத்தில் துருக்கி வீராங்கனை நெஸ்லிகனை பி.வி.சிந்து எதிர்கொள்ள உள்ளார்.
    பாலி:

    இந்தோனேசியாவின் பாலியில் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சூப்பர்-750 பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கிளாரா அசுர்மெண்டியை 17-21 21-7 21-12 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். காலிறுதி ஆட்டத்தில் துருக்கி வீராங்கனை நெஸ்லிகனை சிந்து எதிர்கொள்ள உள்ளார்.

    நெஸ்லிகனும் பி.வி.சிந்துவும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர். 3 போட்டிகளிலும் சிந்து வெற்றி பெற்றுள்ளார். எனவே, காலிறுதி ஆட்டத்திலும் சிந்து ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்சயா சென், கலப்பு இரட்டையர் பிரிவில் துருவ் கபிலா- சிக்கி ரெட்டி ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினர்.
    மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் கிதாம்பி தோல்வியடைந்து கோப்பையை வெல்லும் வெற்றி வாய்ப்பை இழந்தனர். #MalaysianOpenBadminton #Pvsindhu #KidambiSrikanth
    கோலாலம்பூர்:

    மலேசிய ஓபன் பேட்மிண்டன் அரையிறுதி போட்டி கோலாலம்பூரில் இன்று நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து, உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் தை டுசு யிங் மோதினர். மிகவும் சிறப்பாக விளையாடிய சீன வீராங்கனை சிந்துவை தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். சிந்து சிறப்பாக விளையாடினாலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இது தையுடன் மோதி சிந்து தோல்வியடையும் 5 வது போட்டி இதுவாகும்.

    இதற்கிடையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி தோல்வியடைந்தார். இவர் ஜப்பானின் கெண்டோ மோமட்டவை எதிர்க்கொண்டார். ஸ்ரீகாந்த் 13-21, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்த இருவரும் இறுதி போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தனர். #MalaysianOpenBadminton #Pvsindhu #KidambiSrikanth
    ×