என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக பேட்மிண்டன்"

    பெண்களுக்கான ஒற்றையர் சுற்று ஆட்டத்தில் பிவி சிந்து- கலோயானா நல்பந்தோவாவுடன் மோதினார்.

    பாரீஸ்:

    29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 21-வது இடம் வகிக்கும் லக்ஷயா சென், எச்.எஸ். பிரனாய், ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்றவரும், 2019-ம் ஆண்டு உலக சாம்பியனுமான பி.வி.சிந்து ஆகிய இந்தியர்கள் களம் இறங்குகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக பார்மின்றி தடுமாறும் சிந்து தடுமாறி வருகிறார்.

    இந்நிலையில் இன்று பெண்களுக்கான ஒற்றையர் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து பல்கேரியாவை சேர்ந்த கலோயானா நல்பந்தோவாவுடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் பிவி சிந்து 23-21, 21-6 என்ற செட் கணக்கில் கலோயானாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி விளையாடுகிறது.
    • கலப்பு அணிகள் பிரிவில் துருவ் கபிலா- தனிஷா கிரஸ்டோ ஜோடிகள் விளையாடுகிறது.

    பாரீஸ்:

    29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று தொடங்கி 31-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 21-வது இடம் வகிக்கும் லக்ஷயா சென், எச்.எஸ். பிரனாய், ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்றவரும், 2019-ம் ஆண்டு உலக சாம்பியனுமான பி.வி.சிந்து ஆகிய இந்தியர்கள் களம் இறங்குகிறார்கள். ஆனால் இவர்கள் தொடக்க சுற்றுகளை தாண்டுவதே சிக்கல் தான். அந்த அளவுக்கு போட்டி அட்டவணை கடினமாக அமைந்துள்ளது.

    2021-ம் ஆண்டு உலக பேட்மிண்டனில் வெண்கலம் வென்றவரான லக்ஷயா சென் தனது முதல் சுற்றில் 'நம்பர் ஒன்' வீரரான சீனாவின் ஷி யூ கியுடன் கோதாவில் குதிக்கிறார். அவருக்கு எதிராக இதுவரை 4 முறை மோதியிருக்கும் லக்ஷயா சென் அதில் ஒன்றில் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளார். பிரனாய் தனது முதல் சுற்றில் பின்லாந்தின் ஜோகிம் ஓல்டோர்ப்பை எதிர்கொள்கிறார். இதில் அவர் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றில் 2-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஆண்டர்ஸ் அன்டோன்சனுடன் மோத வேண்டி இருக்கும்.

    கடந்த 2 ஆண்டுகளாக பார்மின்றி தடுமாறும் சிந்து, கலோயானா நல்பந்தோவாவுடன் (பல்கேரியா) தனது சவாலை தொடங்குகிறார். இந்திய ஓபனில் கால்இறுதிவரை முன்னேறியதே இந்த சீசனில் அவரது சிறந்த செயல்பாடாக இருப்பது கவனிக்கத்தக்கது. பெண்கள் ஒற்றையரில் ஒலிம்பிக் சாம்பியனான அன்சே யங் (தென்கொரியா), சீனாவின் வாங் ஷி யி, சென் யூ பே ஜப்பானின் அகானே யமாகுச்சி ஆகியோரில் ஒருவர் பட்டம் வெல்லவே அதிக வாய்ப்புள்ளது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் இணையான இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி, கலப்பு அணிகள் பிரிவில் துருவ் கபிலா- தனிஷா கிரஸ்டோ ஜோடிகள் நேரடியாக 2-வது சுற்றில் ஆடுகிறது.

    ‘டாப்-8’ வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவில் இன்று தொடங்குகிறது. #BWFWorldTour #Badminton #PVSindhu #SameerVerma
    குவாங்சோவ்:

    ‘டாப்-8’ வீரர்-வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில் இன்று (புதன்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் கடந்த ஆண்டில் 2-வது இடம் பிடித்தவரும், உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொள்கிறார். அவர் கடினமான ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளார். அந்த பிரிவில் நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சி (ஜப்பான்), நம்பர் ஒன் வீராங்கனை தாய் ஜூ யிங் (சீன தைபே), தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ஷாங் பீவென் (அமெரிக்கா) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதனால் அரைஇறுதிக்கு முன்னேறுவதற்கு சிந்து கடும் சவால்களை சந்திக்க நேரிடும்.

    இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் பி.வி.சிந்து, நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சியை சந்திக்கிறார். இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில், முதல் முறையாக தகுதி பெற்றுள்ள இந்திய வீரர் சமீர் வர்மா ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளார். இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் சமீர் வர்மா, ஜப்பான் வீரர் கென்டோ மொமோட்டோவை சந்திக்கிறார்.#BWFWorldTour #Badminton #PVSindhu #SameerVerma
    ×