பாரீஸ் ஒலிம்பிக்: முதல் போட்டியில் பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பி.வி.சிந்து ஏற்கனவே 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்: முதல் போட்டியில் பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி
Published on

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து இன்று நண்பகல் 12.50 மணிக்கு நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் லீக் சுற்று போட்டியில் மாலத்தீவை சேர்ந்த பாத்திமா நபாஹா உடன் மோதினார்.

இப்போட்டியில் 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் பாத்திமா நபாஹாவை வீழ்த்தி பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார்.

ஜூலை 31 ஆம் தேதி பி.வி.சிந்து தனது இரண்டாவது ஆட்டத்தில் எஸ்தோனியாவின் கிறிஸ்டின் குபாவை எதிர்கொள்கிறார்.

பி.வி.சிந்து 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கமும் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பக்கமும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com