search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேட்மிண்டன்"

    • ஹெச்.எஸ். பிரனோய் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றார்.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 22-24 24-22 21-19 என தோல்வியடைந்தது.

    தாமஸ் கோப்பை பேட்மிண்டன் சீனாவின் செங்டு நகரில் நடைபெற்று வருகிறது. இந்தோனேசியா, இந்தியா ஆகியவை ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ளனர். இரு அணிகளும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

    இந்த நிலையில் குரூப்பில் யார் முதல் இடம் பிடிப்பதற்கான கடைசி லீக்கில் இரு நாடுகளும் மோதின. இதில் இந்தோனேசியா 4-1 என வெற்றி பெற்றது.

    2022-ல் நடைபெற்ற தாமஸ் கோப்பை போட்டியில் இந்தோனேசியாவை 3-0 என வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இந்த நிலையில் அதற்கு பழிவாங்கும் விதமாக தற்போது இந்தோனேசியா இந்தியாவை வீழ்த்தியுள்ளது.

    ஹெச்.எஸ். பிரனோய் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றார். இதனால் இந்தியா 1-0 (13-21 21-12 21-12) என முன்னிலைப் பெற்றது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 22-24 24-22 21-19 என தோல்வியடைந்தது. இதனால் இந்தியா- இந்தோனேசியா ஸ்கோர் 1-1 என சமநிலை ஆனது.

    லக்ஷயா சென் 18-21 21-16 17-21 எனத் தோல்வியடைந்தார். இதனால் இந்தோனேசியா 2-1 என முன்னிலைப் பெற்றது.

    4-வது போட்டியில் த்ருவ் கபிலா- சாய் பிரதீக் ஜோடி 20-22, 11-21 என நேர்செட் கேமில் தோல்வியடைந்தது. கடைசி போட்டியில் கிதாம்பி ஸ்ரீகாந்த் முதல் கேம்-ஐ 21-19 எனக் கைப்பற்றினார். அதன்பின் 2-வது மற்றும் 3-வது கேம்களை 14-21, 22-24 இழந்தார். இதனால் இந்தியா 1-4 எனத் தோல்வியை தழுவியது.

    • பக்கவாட்டு சுவற்றில் பேட்மிண்டன் பிரபலங்கள் படங்கள்
    • வீரர்கள், பயிற்சியாளர்கள் அமர இருக்கைகள் அமைப்பு

    பொதுவாக மேம்பாலத்திற்கு கீழ் உள்ள பகுதி வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்படும். சில இடங்களில் பூங்கா உருவாக்கி, பயன்படுத்தப்படும். ஆனால், அசாமில் உள்ள ஒரு இடத்தில் தொழில் அதிபர் ஒருவரால் ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழ் பகுதி அழகிய பேட்மிண்டன் மைதானமாக உருவாகியுள்ளது.

    அசாம் மாநிலம் ஜோர்ஹத் மாவட்டத்தில் உள்ள நா-அலி (Na-Ali) ரெயில்வே பாலம் செல்கிறது. ரெயில்வே பாலத்திற்கு கீழ் நீளமான இடம் காலியாக இருந்தது. இந்த இடத்தை பேட்மிண்டன் மைதானமாக மாற்றினால் என்ன? என அந்த பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் எம்.பி. அகர்வாலாவிற்கு தோன்றியது.

    இதுகுறித்து ஜோர்ஹாட் மாவட்ட பேட்மிண்டன் நிர்வாகத்தை அணுக, அவர்களும் அனுமதி வழங்கினர். அதனைத் தொடர்ந்து அகல்வாலா அந்த இடத்த அழகிய பேட்மிண்டன் மைதானமாக மாற்றினார். சுவற்றின் இரு புறங்களிலும், பேட்மிண்டன் பிரபலங்களின் படங்கள் வரையப்பட்டுள்ளன.

    வீரர்கள், பயிற்சியாளர்கள் அமர்வதற்கான இருக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான நுழைவுத் தேர்வு மிகவும் குறைவாக நிர்ணயிக்க இருப்பதால், பேட்மிண்டன் பயிற்சி மேற்கொள்ளும் வீரர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும்.

    இந்த மைதானத்தை ஜோர்ஹாட் பேட்மிண்டன் சங்கம் பராமரிக்கும் என அசாம் மாநில பேட்மிண்டன் சங்க செயலாளர் திகான்டா புர்காகோஹைன் தெரிவித்துள்ளார்.

    தொழில் அதிபர் அகர்வாலா, தனது தந்தையின் நினைவாக இந்த மைதானத்தை கட்டி கொடுத்துள்ளார். கடந்த 16-ந்தேதி இந்த மைதானத்தை அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மான தொடங்கி வைத்தார். விரைவில் இந்த மைதான நடைமுறை பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.

    • சிறுநீரகம் 25 சதவீதம் மட்டுமே செயல்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
    • மகள் ரோகினி ஆச்சார்யா தந்தை லாலுவுக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கினார்.

    ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும் பீகார் முன்னாள் முதல் மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு நோய் உள்ளது.

    இதன் காரணமாக அவருடைய உள் உறுப்புகள் பலவும் பாதிக்கப்பட்டு உள்ளன. சிறுநீரகமும் மோசமாக பாதிக்கப்பட்டது.

    அவருடைய சிறுநீரகம் 25 சதவீதம் மட்டுமே செயல்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாற்று சிறுநீரகம் பொருத்துவதும் இப்போது சரியாக இருக்காது என்றும் கூறினர்.

    பின்னர், மேற்சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற லாலுவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிறுநீரக அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவரது மகள் ரோகினி ஆச்சார்யா தந்தை லாலுவுக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கினார்.

    அறுவை சிகிச்சை முடிந்து 6 மாதங்கள் ஆன நிலையில், லாலு பிரசாத் யாதவ் நேற்று முழு ஆற்றலுடன் பேட்மிண்டன் விளையாடும் காட்சி காண்போரை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • அரையிறுதியில் ஜப்பான் வீரர் கென்ட்டா நிஜிமோட்டாவை லக்சயா சென் வீழ்த்தினார்.
    • மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியிடம் தோல்வியடைந்தார்.

    கனடா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய இளம் வீரர் லக்சயா சென் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீரர் கென்ட்டா நிஜிமோட்டாவுடன் மோதிய லக்சயா சென், 21-17, 21-14 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று அசத்தினார்.

    இதன்மூலம், ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பிறகு சர்வதேச போட்டியின் இறுதிப் போட்டிக்கு லக்சயா சென் தகுதி பெற்றுள்ளார். கடைசியாக ஆகஸ்ட் 2022 இல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, அரையிறுதியில் உலகின் நம்பர்-1 வீராங்கனை அகானே யமகுச்சியிடம் 14-21, 15-21 தோல்வியடைந்தார்.

    சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார் பி.வி.சிந்து. கடந்த ஜனவரி மாதம் காயத்திலிருந்து மீண்டபின் எந்த பட்டத்தையும் வெல்லவில்லை. கணுக்காலில் காயம் ஏற்படுவதற்கு முன்பு ஆகஸ்ட் 2022இல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றார். அவர் மேட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் போட்டியில் இரண்டாம் இடத்தையும், மலேசியா மாஸ்டர்சில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.

    • இரண்டாவது செட் ஆட்டத்தில், சுதாரித்த ஸ்ரீகாந்த் அதிரடியான ஷாட்களை அடித்து எதிராளியை திக்குமுக்காட வைத்தார்.
    • வெற்றியை உறுதி செய்வதற்கான மூன்றாவது செட் ஆட்டத்தில் அதே பாணியில் ஆட்டத்தை தொடர தவறிவிட்டார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சீனாவின் லி ஷி ஃபெங் ஆகியோர் மோதினர். இப்போட்டியில் ஸ்ரீகாந்த் 14-21, 21-14, 12-21 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தார். அத்துடன், தொடரில் இருந்தும் வெளியேறினார்.

    தரவரிசையில் இடம் பெறாத ஸ்ரீகாந்த், ஃபெங் இருவருமே துவக்கம் முதலே கடுமையாக போராடினர். ஆட்டத்தின் துவக்கத்தில் ஸ்ரீகாந்த் முன்னேறினாலும், பிறகு ஃபெங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆட்ட இடைவேளையின் போது 11-7 என முன்னிலை வகித்தார். ஸ்ரீகாந்த் சில தவறுகளை செய்ததால் பின்னடைவை சந்தித்தார்.

    ஃபெங்கின் கோர்ட் கவரேஜ் மற்றும் எதிர்பார்த்து ஆடும் திறமை, ஸ்ரீகாந்த்தின் ஆட்டத்தை விட சிறப்பாக இருந்தது. ஸ்ரீகாந்த் வலைக்கு அருகில் பல தவறுகளை செய்தார்.

    முதல் செட் ஆட்டத்தில், தன்னுடைய பழைய விளையாட்டு பாணியை இழந்தவராக தெரிந்த ஸ்ரீகாந்த், ஒரு சில இடங்களில் மட்டுமே நன்றாக ஆடினார். இந்த ஆட்டத்தில் முற்றிலுமாக வழக்கமான ஆட்டத்தில் இருந்து விலகியவராக தெரிந்தார். அதே சமயம் ஃபெங், தனது டிராப் ஷாட்களை துல்லியமாக அடித்து அந்த செட்டை எளிதில் கைப்பற்றினார்.

    இரண்டாவது செட் ஆட்டத்தில், சுதாரித்த ஸ்ரீகாந்த் அதிரடியான ஷாட்களை அடித்து அடுத்தடுத்து எதிராளியை திக்குமுக்காட வைத்தார். குறிப்பாக வலைக்கு அருகில் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அந்த செட்டை கைப்பற்றி 1-1 என சமன் செய்தார்.

    ஆனால் வெற்றியை உறுதி செய்வதற்கான மூன்றாவது செட் ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் அதே பாணியில் ஆட்டத்தை தொடர தவறிவிட்டார். இதனால் ஃபெங் வசம் ஆட்டம் திரும்பியது. இடைவேளையின்போது, ஃபெங் தனது காலில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு மருத்துவ உதவி தேவைப்பட்ட நிலையிலும், 5 புள்ளிகள் எடுத்து முன்னிலை வகித்தார்.

    அதன்பின்னரும், காயத்தையும் பொருட்படுத்தாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஸ்ரீகாந்தால் புள்ளிகளுக்கான இடைவெளியை நிரப்ப முடியவில்லை. இதனால் ஃபெங் அந்த செட்டையும் எளிதாக கைப்பற்றி வெற்றி பெற்றார். 

    இவர்கள் இருவரும் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளனர். இருவரும் தலா ஒருபோட்டியில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளனர்.

    • கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர்- சிக்கி ரெட்டி ஜோடி, வெள்ளிப் பதக்கம் வென்றது.
    • இவர்களின் சாதனை நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன.

    புதுடெல்லி:

    ஸ்லோவேனியாவின் மரிபோர் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மா தங்கம் வென்று அசத்தி உள்ளார். இவர், ஆடவர் ஒற்யைர் இறுதிப்போட்டியில் தைவான் வீரர் சூ லீ யாங்கை 21-18 21-14 என்ற நேர்செட்களில் வென்றார்.

    இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர்- சிக்கி ரெட்டி ஜோடி, வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்த ஜோடி அரையிறுதியில் டென்மார்க் ஜோடியை 21-15 21-19 என்ற செட்கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால் இறுதிப்போட்டியில் டென்மார்க்கின் மற்றொரு ஜோடியிடம் 12-21 13-21 என தோல்வியடைந்தது. 

    ரோகன் கபூர்- சிக்கி ரெட்டி

    ரோகன் கபூர்- சிக்கி ரெட்டி

    இந்திய பேட்மிண்டனின் தொடர் வளர்ச்சி மற்றும் வெற்றியை இந்த வீரர்களின் சாதனைகள் பிரதிபலிக்கின்றன. அத்துடன், நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன.

    • 1965ம் ஆண்டு ஆடவர் ஒற்றையர் பிரிவில் தினேஷ் கன்னா தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
    • சாத்விக் மற்றும் சிராக் 2022ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றனர்.

    துபாய்:

    துபாயில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்களான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

    இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் ஓங் யியூ சின்-டியோ யி ஜோடியை 16-21, 21-17, 21-1 என்ற செட்கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் 58 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர்கள் ஆசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். இந்த சீசனில் சாத்விக்-சிராக் வென்றுள்ள இரண்டாவது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

    இதற்கு முன்பு லக்னோவில் 1965ம் ஆண்டு நடந்த ஆசிய போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தினேஷ் கன்னா என்ற வீரர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அதன்பின்னர் முதல் முறையாக இந்த ஆண்டு இந்திய வீரர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

    ஆசிய சாம்பியன்ஷிப் பட்டம் தவிர, சாத்விக் மற்றும் சிராக் 2022ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றனர். உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் உலக சுற்றுப்பயணத்தில் ஐந்து பட்டங்களை வென்றுள்ளனர்.

    • சாத்விக்- சிராக் ஜோடி கடந்த வாரம் நடந்த ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வி
    • இந்த சீசனில் இந்தியா பெறும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.

    பேசெல்:

    ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது. இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் ரென் ஜியாங்- டான் கியாங் ஜோடியை 54 நிமிடங்களில் 21-19, 24-22 என்ற நேர்செட்களில் வீழ்த்தி, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    சாத்விக்- சிராக் ஜோடி கடந்த வாரம் நடந்த ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்த நிலையில், இன்றைய வெற்றி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. இந்த சீசனில் இந்தியா பெறும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும். சாத்விக்-சிராக் ஜோடிக்கு இது ஐந்தாவது சாம்பியன் பட்டமாகும்.

    • இந்தியாவின் சிக்கி ரெட்டி-ரோகன் கபூர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
    • மற்ற இந்திய ஜோடிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்தனர்.

    வியட்நாம் பேட்மிண்டன் ஓபன் தொடர் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் ஜோடி பிரிவில் இந்தியாவின் சிக்கி ரெட்டி-ரோகன் கபூர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர். இந்த ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஹாங்காங்கின் பேன்காயான்-யுங் ஷிங் சோய் ஜோடியை 21-10, 19-21, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

    மற்ற இந்திய ஜோடிகளான மவுரியன் கத்வரன்-குஷான் பாலாஷ்ரி மற்றும் பொக்கா நவனித்-பிரியா கொன்ஜெங்பாம் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

    • மொமோட்டாவுக்கு எதிராக 8 முறை விளையாடி உள்ள பிரனோய் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
    • பெண்கள் இரட்டையர் பிரிவில், அஷ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஜோடி இரண்டாவது சுற்றில் தோல்வி

    டோக்கியோ:

    ஜப்பானில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியாவின் பிரனோய் மற்றும் லக்சயா சென் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.

    இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் பிரனோய், 21-17, 21-16 என்ற நேர்செட்களில் முன்னாள் உலக சாம்பியனான கென்டோ மொமோட்டாவை வீழ்த்தினார். இதுவரை மொமோட்டாவுக்கு எதிராக 8 முறை விளையாடி உள்ள பிரனோய் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

    லக்சயா சென்

    லக்சயா சென்

    மற்றொரு ஆட்டத்தில் லக்சயா சென், ஸ்பெயின் வீரர் லூயிஸ் பெனால்வரை 21-17 21-10 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். நாளை நடைபெறும் ஆட்டத்தில் பிரனோய் மற்றும் சென் ஆகியோர் மோத உள்ளனர்.

    முன்னதாக, ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் எம்.ஆர். அர்ஜுன்- துருவ் கபிலா மற்றும், சிராக் ஷெட்டி -சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஆகிய ஜோடிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறின. ஆனால் பெண்கள் இரட்டையர் பிரிவில், அஷ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஜோடி இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியது.

    • பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி தங்கம் வென்றது.
    • இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 22 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி, இங்கிலாந்தின் பென் லேன், சீன் மெண்டி ஜோடியை எதிர்கொண்டது.

    இதில், இந்திய ஜோடி 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

    இதன்மூலம் இந்தியா 22 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

    • பேட்மிண்டன் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் லக் ஷயா சென் தங்கம் வென்றார்
    • இதன்மூலம் கானம்வெல்த் போட்டியில் இந்தியா 20 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், பேட்மிண்டன் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் லக்‌ஷயா சென், மலேசியாவின் சீ யாங் விளையாடினர்.

    முதல் செட்டை 19-21 என கோட்டை விட்ட லக்‌ஷயா சென், அடுத்த இரு செட்களை 21-9, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்

    இதன்மூலம் இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

    ×