என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Championship badminton"

    • 2009ஆம் ஆண்டு ஐதராபாத்தில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டது.
    • 16 வருடத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டு டெல்லியில் நடத்தப்பட இருக்கிறது.

    பேட்மிண்டன் உலகத் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அடுத்த வருடம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெறும் என உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    2025 சாம்பியன்ஷிப் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்- சிராக் ஷெட்டி ஜோடி வெண்கல பதக்கம் வென்றது.

    16 வருடத்திற்குப் பிறகு இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த உள்ளது. 2009ஆம் ஆண்டு ஐதராபாத்தில் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது.

    • 2ஆவது கேம்-ஐ 21-13 எனக் கைப்பற்றினார்.
    • ஆனால், முதல் மற்றும் 3ஆவது கேம்- இழந்தார் ஏமாற்றம் அடைந்தார்.

    உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் காலிறுதியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, உலகத் தரவரிசையில் 9ஆவது இடத்தில் இருக்கும் இந்தோனேசியாவின் புத்ரி வர்தானியை எதிர்கொண்டார். முதல் கேம்-ஐ 14-21 என பிவி சிந்து இழந்தார்.

    என்றாலும் 2ஆவது கேமில் சுதாரித்துக் கொண்டு அபாரமான விளைாடினார். இதனால் 2ஆவது கேம்-ஐ 21-13 என எளிதாக வென்றார். வெற்றியை தீர்மானிக்கும் 3ஆவது கேமில் இந்தோனோசியா வீராங்கனை அபாரமாக விளையாடினார். இதனால் பிவி சிந்து 16-21 என இழந்து, தொடரில் இருந்து வெளியேறினார்.

    சீனாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். #SainaNehwal
    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முன்னாள் சாம்பியன் வீராங்கனையான தாய்லாந்தின் ரட்சனோக் இந்தானோன்-ஐ எதிர்கொண்டார்.

    இதில் சாய்னா நேவால் 21-15 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொள்கிறார்.



    கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - அஸ்வினி பொன்னப்பா ஜோடி மலேசியாவின் கோஹ் சூன் ஹயாத் - ஷெவோன் ஜெமி லாய் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 20-22, 21-14, 21-6 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
    ×