search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Ravichandran"

    • ஸ்ரீகோமதி அம்பாள் பள்ளி வளாகத்தில் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பை சுற்றுப்பயண விழா நடந்தது.
    • நிகழ்ச்சியையொட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலகம் சார்பில் சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சென்னையில் நடைபெற உள்ள 7-வது ஹீரோ ஆசிய ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பை (பாஸ் தி பால்) சுற்றுப்பயண விழா நடந்தது.

    கலெக்டர் ரவிச்சந்திரன்

    நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வினு வரவேற்றார். உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., பாஸ் தி பால் நிகழ்வு மற்றும் கோப்பையினை அறிமுகப்படுத்தி பேசினார்.

    உற்சாக வரவேற்பு

    பின்னர் தனுஷ்குமார் எம்.பி., சதன்திருமலை குமார் எம்.எல்.ஏ.., தென்காசி மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் தமிழ்ச்செல்வி, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன், ஆக்கி யூனிட் ஆப் தென்காசி அமைப்பின் தலைவர் கல்யாணி சுந்தரம் மற்றும் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பழனிச்செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    தொடர்ந்து தென்காசி மாவட்டத்திற்கு வந்த கோப்பைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் புனிதா, நகர செயலாளர் பிரகாஷ், மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மாணவரணி உதயகுமார், அப்பாஸ் அலி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சரவணன், ராஜ், அன்சாரி, வீராசாமி, ராமர், ரகுமான் விளையாட்டு மேம்பாட்டு அணி மகாராஜன், தகவல் தொழில் நுட்ப அணி சிவாஜி மற்றும் சதாசிவம், காவல்கிளி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆக்கி யூனிட் ஆப் தென்காசி அமைப்பின் செயலாளர் பால்மகேஷ் நன்றி கூறினார்.

    • முகாமில் 100-க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு மார்பக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு திட்டத்தின் கீழ் மார்பக புற்றுநோய் அகற்றுதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    தென்காசி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசி மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி இணைந்து மருத்துவ முகாமை ஆலங்குளம் அருகில் உள்ள நெட்டூர் கிராமத்தில் கடந்த மாதம் நடத்தியது.

    முகாமில் 100-க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அறுவை சிகிச்சை மருத்துவர்களால் மார்பக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 4 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஸ்வர்ணலதா, விஜயகுமார், முத்துக்குமாரசுவாமி, ஜெரின் இவஞ்செலின், விக்னேஷ் சங்கர் ஆகிய மருத்துவக்குழுவினர்களால் மார்பக புற்றுநோய் அகற்றுதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இதுகுறித்து தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் டாக்டர் பிரேமலதா கூறும்போது, இதுபோன்ற உயிர் காக்கும் உயர் அறுவை சிகிச்சைகள், தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் நடப்பது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றார். கண்காணிப்பாளர் ஜெஸ்லின் கூறுகையில், தென்காசி மருத்துவமனையில் 4 பேருக்கும் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கப்பட்டது மிகப்பெரிய சாதனை. இதனை நடத்தி காட்டிய மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுக்கள் என்றார்.

    • பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
    • பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.4.70 கோடி கடன் உதவி தொகைக்கான ஒப்புதல் ஆணை, காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலம் மருதம் ரெஸிடன்சியில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவினை முன்னிட்டு வங்கி சேமிப்பு மற்றும் காப்பீட்டு திட்டங் களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு, ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள், சக்தி மகளிர் சுய உதவி குழுவினர், சிறப்பான வாடிக்கையாளர் மையம் ஆகியோருக்கு கேடயம் வழங்கப்பட்டது.

    மேலும் எஸ்டேட் வங்கியின் மூலம் கடனுதவிப் பெறும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.4.70 கோடி கடன் உதவி தொகைக்கான ஒப்புதல் ஆணை மற்றும் காசோலைகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

    இம்முகாமில் பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டார துணைப் பொது மேலாளர் ஆபிரகாம் செல்வின், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேசன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் மாரியம்மாள், ஸ்டேட் வங்கியின் நெல்லை மண்டல மேலாளர் ஷர்மிளா, மாவட்ட மேலா ளர் சுந்தரராஜ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிர மணியன், வங்கி அலுவ லர்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    • மாவட்ட அளவில் வருகிற 11-ந் தேதி (செவ்வாய்கிழமை) தென்காசி, மாவட்ட கலெக்டர் வளாகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
    • முகாமில் ஊரகப் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையலாம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்கிழமை அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார அளவிலும், இரு மாதங்களுக்கு ஒரு முறை இரண்டாவது செவ்வாய்கிழமை மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் முன்னிலையிலும் குறைகேட்பு முகாம்கள் நடத்தப்பட சென்னை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, இயக்குநர் கடிதத்தின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில், இந்த மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற விருக்கும் குறைகேட்பு முகாமிலும், மாவட்ட அளவில் வருகிற 11-ந் தேதி (செவ்வாய்கிழமை) தென்காசி, மாவட்ட கலெக்டர் வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் முன்னிலையில் நடைபெறவிருக்கும் குறைகேட்பு முகாமிலும் ஊரகப் பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தெரி வித்துள்ளார்.

    • இந்த வாகனம் உணவு பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வினை பொதுமக்களிடம் ஏற்படுத்த உள்ளது.
    • எளிய பரிசோதனை மூலம் உணவு பொருட்களின் தரம் கண்டறிப்படும்.

    தென்காசி:

    நடமாடும் உணவு பகுப்பாய்வகம் எனப்படும் வாகனம் தமிழ்நாடு அரசால் உணவு பாதுகாப்பு துறை யின்கீழ் பாளை, தஞ்சாவூர், சேலம், கோவை பகுதிகளில் இயங்கும் உணவு பகுப்பாய்வகங்களுக்கு கடந்த ஜனவரி மாதம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

    பொதுமக்களிடம் விழிப்புணர்வு

    இந்த வாகனமானது உணவு பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வினை பொதுமக்களிடம் ஏற்படுத்த உள்ளது. இதில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையானது அவர்களிடையே நல்ல சுகாதாரமான சத்தான உணவினை உட்கொள்ள ஒரு தூண்டுகோலாக அமை யும்.

    இந்த வாகனம் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்ட பயன்பாட்டிற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.

    கலெக்டர் தொடங்கி வைத்தார்

    இந்நிலையில் நேற்று முதல் ஒரு மாதத்திற்கு தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை மாவட்ட கலெக்டர் ரவிச் சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பொதுமக்கள், வியா பாரிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மூலம் பரிசோதனைக்காக பெறப்படும் உணவுப் பொருட்கள் இவ்வாகனத்தில் மேற்கொள்ளப்படும் எளிய பரிசோதனை மூலம் அப்பொருட்களின் தரம் கண்டறிப்படும்.

    பாதுகாப்பு அதிகாரிகள்

    மேலும் மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலமாக பள்ளி- கல்லுாரி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

    இதேபோல் சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வை யாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணி யாளர்கள் இவ்வாகனத்தை பயன்படுத்தி, அவர்களது பகுதியில் மக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள் வார்கள்.

    உணவு பரிசோதனை

    இவ்வாகனத்தில் உணவு பரிசோதனையானது முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது. இவ்வாய்ப்பினை பொது மக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லுாரி மாண வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    தொடக்க விழா நிகழ்ச்சி யில் மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாது காப்புத்துறை) டாக்டர். சசிதீபா, உணவு பாது காப்புத்துறை அலுவலர்கள் மகாராஜா, செல்வராஜ், முத்துராஜா, நாகசுப்பிர மணியன், முகமது அப்துல் ஹக்கிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    • பேரணியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு வாசகம் பொறிக்கப்பட்ட அட்டைகள் உபயோகப்படுத்தப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் எடுக்கப்பட்டது.

    எதிர்ப்புதின பேரணி

    இதன் பின்னர் சமூக நலத்துறையின் சார்பாக முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின பேரணியை கலெக்டர் ரவிச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரையில் நடத்தப்பட்டது. இதில் ஊதா நிற ரிப்பன் மற்றும் கொடுஞ்செயல் எதிர்ப்பு வாசகம் பொறிக்கப்பட்ட அட்டைகள் உபயோகப்படுத்தப்பட்டது.

    கலந்து கொண்டவர்கள்

    பேரணியில் மாவட்ட சமூகநல அலுவலர் மதிவதனா, மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்) முத்து மாரியப்பன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராம சுப்பிரமணியம், களப்பணியாளர்கள், சகி, ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் முதலான சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.

    மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தொடர்பான பேனர்கள் காட்சிப்படுத்தப்பட்டது. முதியோர் உதவி எண் 14567 தொடர்பான துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

    • அரசு நிர்ணயித்த அளவை விட அதிகளவில் கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
    • அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து இழப்பீடு தொகையை அவர்களிடம் இருந்து பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் பழனிசங்கர் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் கலெக்டர் துரை ரவிச்சந்திரனிடம் ஒரு கோரிக்கை மனு வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது:-

    ரூ. 800 கோடி

    தென்காசி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் அரசு நிர்ணயித்த அளவை விட அதிகளவில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு ரூ. 800 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அதனை ஈடு செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து இழப்பீடு தொகையை அவர்களிடம் இருந்து பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கனிம வளங்கள் தொடர்ந்து எடுக்கப்ப டுவதால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் இல்லாமல் போய்விடும். இது குறித்து கலெக்டர் நேரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். விதி மீறும் தனியார் குவாரிகள் அனைத்தையும் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கல்குவாரிகள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சந்துரு சுப்பிரமணியன், தலைமை செயற்குழு உறுப்பினர் முப்புடாதி முத்து, தென்காசி ஒன்றிய செயலாளர் வேலாயுத பாண்டியன், நகர செயலாளர் பேச்சி, ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன் (பாப்பாக்குடி), உதயகுமார் (கீழப்பாவூர்), வேதகண்ணு ரங்கசாமி (கடையம் வடக்கு), கேப்டன் மன்ற மாவட்ட செயலாளர் கேப்டன்சாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் பி.எம். சாமி, மாவட்ட துணை செயலாளர் காமராஜ் மோகன், ஆலங்குளம் நகர பொருளாளர் ராஜேந்திரன் என்ற தாசன், மத்தளம்பாறை ஜார்ஜ், பொதுக்குழு உறுப்பினர் சுரண்டை கருப்பு நிலா கணேசன், தென்காசி ரவி, ஆழ்வார்குறிச்சி பேரூர் செயலாளர் சண்முகம் சேட், வாசு, கழுநீர்குளம் செல்வம் உள்பட தென்காசி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கோழிக் கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருத்தல் வேண்டும்.
    • மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் ரூ. 1,50,825 மாநில அரசால் வழங்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாட்டுக் கோழி

    நாட்டுக் கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள் அலகு) நாட்டுக் கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் தென்காசி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

    தேர்வு செய்யப்பட வேண்டிய பனாளிகளின் தகுதிகள். ஆதார் நகல் சமர்ப்பிக்க வேண்டும்.

    கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ள மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளாக இருத்தல் வேண்டும். நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு உபக ரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு) மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் ரூ. 1,50,825 மாநில அரசால் வழங்கப்படும்.

    50 சதவீதம் மானியம்

    திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும். ஒவ்வொரு பயனா ளிக்கும் 250 எண்ணிக்கையின 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்படும்.

    பயனாளிகளுக்கு கோழிக் கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருத்தல் வேண்டும். இத்தப்பகுதி மனிதக் குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா, அடங்கல் நகல் வைத்திருக்க வேண்டும். பயனாளி அக்கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

    விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி யினத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். 2022-23-ம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்புத்திட்டத்தின்கீழ் பயனாளி பயனடைந்து இருக்க கூடாது.

    தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்கு குறையாமல் பண்ணையை பராமரித்திட உறுதி அளித்திடல் வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட திட்ட மிடப்பட்ட வங்கி கூட்டுறவு வங்கி பயனாளிக்கு நிதியளிக்க தயாராக இருக்க வேண்டும். அல்லது பயனாளி சொந்தமாக முதலீடு செய்ய முன்வந்தால் திட்டத்திற்கு நிதியளிப்பற்கான அவரது நிதி நிறன்களின் சான்றுகளை அளிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக உதவி மருத்துவர்களை அணுகி உடன் விண்ணப்ப ங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மனுதாரர்களுக்கு உரிய பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • 6 பேருக்கு ஒளிரும் மடக்கு குச்சிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. 265 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

    இந்த மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனு தாரர்களுக்கு உரிய பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.8,500 செலவில் காதொலி கருவிகளும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 6 பேருக்கு ஒளிரும் மடக்கு குச்சிகள் தலா ரூ.8,500 செலவிலும் ஆக மொத்தம் ரூ.68 ஆயிரம் மதிப்பில் உதவி உபகரணங்களை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

    கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், மாவட்ட வழங்கள் அலுவலர் சுதா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் நடராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பணி முன்னேற்றம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    • அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தென்காசி மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு தலைமையில், தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம், தென்காசி மாவட்டத்தில் நடைமுறை யில் உள்ள திட்டங்களான நில எடுப்புகள், பட்டா மாறுதல், இல்லம் தேடி கல்வி திட்டம், மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம், புதுமைப்பெண் திட்டம், அரசு விடுதிகள், உணவு தர கட்டுப்பாடு, சுரங்கத்துறை பணிகள், மருத்துவமனையில் மருந்துகளின் இருப்பு, முதல்- அமைச்சரின் சிறப்பு திட்டமான பள்ளிகளில் காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பணி முன்னேற்றம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் அனைத்து அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார். மேலும் தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது.

    • கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு பாதுகாவலர் நியமன சான்றிதழை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
    • பட்டாமாறுதல் உள்பட மொத்தம் 303 மனுக்கள் கூட்டத்தில் பெறப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

    இக்கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நல துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 1 மாற்றுத்திறனாளிக்கு காதொலி கருவி, தேசிய உள்ளூர் குழு (எல்.சி) வாயிலாக 1 மாற்றுத்திறனாளிக்கு பாதுகாவலர் நியமன சான்றிதழையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    மாற்றுத்திறனாளிகள் நல துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு மாற்றுத் திறனாளிக்கு காதொலி கருவி ரூ. 8,500 மதிப்பில் உதவி உபகரணம் மற்றும் தேசிய உள்ளுர் குழு (எல்.எல்.சி.) வாயிலாக ஒருவருக்கு பாதுகாவலர் நியமன சான்றுகளையும் வழங்கினார்.

    மேலும் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டாமாறுதல் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 303 மனுக்கள் பெறப்பட்டது.

    கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந் தப்பட்ட அனைத்துத்துறை அலுவ லர்களுக்கும் அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், வட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர நாராயணன், உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராம சுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 2-ந்தேதி வெளியிடப்பட்டது.
    • வாக்குப்பதிவு தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் நடைபெறும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகரப்பகுதி உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மாவட்ட அளவில் செயல்படுத் தப்படும் பல்வேறு திட்டங்களை ஒருங்கி ணைத்தல் ஆகிய பணிகளுக்காக மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட உள்ளது.

    இதைமுன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்களின் விவரங்கள் அடங்கிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 2-ந்தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல், வாக்காளர் பதிவு அலுவலர், மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட்டது.

    இத்தேர்தலில் ஊரகப் பகுதியில் 14 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து 7 உறுப்பினர்களும், நகரப்பகுதிகளில் 180 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் 260 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து 5 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    வாக்குப்பதிவு இருக்கு மானால் வாக்குப்பதிவு தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) முத்துகுமார், அலுவலக மேலாளர் (வளர்ச்சி) சண்முகசுந்தரம், செங்கோட்டை நகராட்சி ஆணையர் ஜெயபிரியா, செயல் அலுவலர் (குற்றாலம்) சுஷ்மா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×