search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் வங்கி சேமிப்பு விழிப்புணர்வு முகாம்
    X

    கலெக்டர் ரவிச்சந்திரன் பரிசு வழங்கிய காட்சி.

    தென்காசி மாவட்டத்தில் வங்கி சேமிப்பு விழிப்புணர்வு முகாம்

    • பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
    • பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.4.70 கோடி கடன் உதவி தொகைக்கான ஒப்புதல் ஆணை, காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலம் மருதம் ரெஸிடன்சியில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவினை முன்னிட்டு வங்கி சேமிப்பு மற்றும் காப்பீட்டு திட்டங் களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு, ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள், சக்தி மகளிர் சுய உதவி குழுவினர், சிறப்பான வாடிக்கையாளர் மையம் ஆகியோருக்கு கேடயம் வழங்கப்பட்டது.

    மேலும் எஸ்டேட் வங்கியின் மூலம் கடனுதவிப் பெறும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.4.70 கோடி கடன் உதவி தொகைக்கான ஒப்புதல் ஆணை மற்றும் காசோலைகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

    இம்முகாமில் பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டார துணைப் பொது மேலாளர் ஆபிரகாம் செல்வின், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேசன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் மாரியம்மாள், ஸ்டேட் வங்கியின் நெல்லை மண்டல மேலாளர் ஷர்மிளா, மாவட்ட மேலா ளர் சுந்தரராஜ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிர மணியன், வங்கி அலுவ லர்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    Next Story
    ×