search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின பேரணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    பேரணியை கலெக்டர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்த காட்சி.

    தென்காசியில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின பேரணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    • பேரணியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு வாசகம் பொறிக்கப்பட்ட அட்டைகள் உபயோகப்படுத்தப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் எடுக்கப்பட்டது.

    எதிர்ப்புதின பேரணி

    இதன் பின்னர் சமூக நலத்துறையின் சார்பாக முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின பேரணியை கலெக்டர் ரவிச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரையில் நடத்தப்பட்டது. இதில் ஊதா நிற ரிப்பன் மற்றும் கொடுஞ்செயல் எதிர்ப்பு வாசகம் பொறிக்கப்பட்ட அட்டைகள் உபயோகப்படுத்தப்பட்டது.

    கலந்து கொண்டவர்கள்

    பேரணியில் மாவட்ட சமூகநல அலுவலர் மதிவதனா, மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்) முத்து மாரியப்பன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராம சுப்பிரமணியம், களப்பணியாளர்கள், சகி, ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் முதலான சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.

    மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தொடர்பான பேனர்கள் காட்சிப்படுத்தப்பட்டது. முதியோர் உதவி எண் 14567 தொடர்பான துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

    Next Story
    ×