search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை- கலெக்டர் பாராட்டு
    X

    புற்றுநோய் சிகிச்சை அளித்த மருத்துவக்குழுவினரை கலெக்டர் ரவிச்சந்திரன் பாராட்டினார்.

    தென்காசி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை- கலெக்டர் பாராட்டு

    • முகாமில் 100-க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு மார்பக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    • முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு திட்டத்தின் கீழ் மார்பக புற்றுநோய் அகற்றுதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    தென்காசி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசி மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி இணைந்து மருத்துவ முகாமை ஆலங்குளம் அருகில் உள்ள நெட்டூர் கிராமத்தில் கடந்த மாதம் நடத்தியது.

    முகாமில் 100-க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அறுவை சிகிச்சை மருத்துவர்களால் மார்பக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 4 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஸ்வர்ணலதா, விஜயகுமார், முத்துக்குமாரசுவாமி, ஜெரின் இவஞ்செலின், விக்னேஷ் சங்கர் ஆகிய மருத்துவக்குழுவினர்களால் மார்பக புற்றுநோய் அகற்றுதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இதுகுறித்து தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் டாக்டர் பிரேமலதா கூறும்போது, இதுபோன்ற உயிர் காக்கும் உயர் அறுவை சிகிச்சைகள், தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் நடப்பது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றார். கண்காணிப்பாளர் ஜெஸ்லின் கூறுகையில், தென்காசி மருத்துவமனையில் 4 பேருக்கும் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கப்பட்டது மிகப்பெரிய சாதனை. இதனை நடத்தி காட்டிய மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுக்கள் என்றார்.

    Next Story
    ×