search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CM Edappadi palanisamy"

    தேசிய பத்திரிகை தினத்தையொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். #NationalPressDay #cmEdappadipalanisamy

    சென்னை:

    தேசிய பத்திரிகை தினத்தையொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உண்மை நிகழ்வுகளை மக்களுக்கு நடுநிலையோடு எடுத்துரைத்து, அவர்தம் அறிவுக்கண்ணை திறக்கும் உயரிய பணியை ஆற்றுவதால் பத்திரிகை துறை ஜன நாயகத்தின் நான்காவது தூணாக போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க பத்திரிகை மற்றும் ஊடகத்துறையின் பணியினை கெளரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16-ந்தேதி தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில், அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #NationalPressDay #cmEdappadipalanisamy

    திருச்செங்கோட்டில் வருகிற 18-ந் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார். #Edappadipalanisamy

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வருகிற 18-ந் தேதி அன்று பள்ளிபாளையம், குமார பாளையம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு வருகை தர உள்ளார்.

    அதற்கான பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சமூக நலம் மற்றும் சத்துணவு துறை அமைச்சர் சரோஜா, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். #Edappadipalanisamy 

    திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார். #EdappadiPalanisamy #SivanthiAditanar #Manimandapam #Tiruchendur
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 22.11.2017 அன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடந்தது. அந்த விழாவில், ‘‘தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும். இதற்கான பணி 2018-19-ம் ஆண்டு எடுத்துக்கொள்ளப்படும்’’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    அதன்படி மணிமண்டபம் அமைப்பதற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (நினைவகங்கள்) துறை ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்டது.

    இதைத்தொடர்ந்து மணிமண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா திருச்செந்தூரில் தூத்துக்குடி பிரதான சாலையில் உள்ள ஆதித்தனார் கல்லூரி அருகே சிவந்தி அகாடமி வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

    விழாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி, சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.



    அதேநேரத்தில் திருச்செந்தூரில் நடைபெறும் விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர்.

    இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். #EdappadiPalanisamy #SivanthiAditanar #Manimandapam #Tiruchendur
    காஞ்சீபுரத்தில் நாளை அண்ணா பிறந்த நாள் கூட்டம் நடக்கிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். #edappadipalanisamy

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    காஞ்சீபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார். இதற்காக அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

    முன்னதாக காஞ்சீபுரத்துக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட எல்லையான படப்பையில் பூரண கும்ப மரியாதையுடன் மேள தாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பின்னர் வாலாஜாபாத், காஞ்சீபுரம் டோல்கேட் பகுதிகளிலும் முதல்- அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்கு செல்லும் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    பின்னர் காஞ்சீபுரம் ரங்கசாமி குளம் அருகே காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் அமைக்கப்பட்டு உள்ள கல்வெட்டினைத் திறந்து வைத்து அ.தி.மு.க. கொடியினை ஏற்றி வைக்கிறார்.

    இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி காஞ்சீபுரம் தேரடி ஆஞ்சநேயர் கோவிலில் சாமி கும்பிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குகிறார்.

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 501 சதுர அடி பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கூட்டரங்கினையும் அவர் திறந்து வைக்கிறார்.

    நிகழ்ச்சியையொட்டி காஞ்சீபுரம் மேற்கு மாவட்டத் திற்குட்பட்ட பகுதிகளில் பிரம்மாண்டமான பதாகைகள், தோரணங்கள், கட்சிக் கொடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத்.பா.கணேசன் செய்து வருகிறார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பெஞ்சமின், கொள்கை பரப்புச் செயலாளர்வைகைச் செல்வன், மாவட்டச் செய லாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம்.

    அமைப்புச் செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி, மரகதம் குமரவேல் எம்பி, பழனி எம்.எல்.ஏ., நிர்வாகிகள் கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், காஞ்சி பன்னீர் செல்வம், குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, தும்பவனம் ஜீவானந்தம், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, அத்திவாக்கம் ரமேஷ், அக்ரி நாகராஜன், என்.பி.ஸ்டாலின், ஆர்.டி. சேகர், ஆர்.வி.ரஞ்சித்குமார், கரூர் மாணிக்கம், மனோகரன், ராஜசிம்மன், ஜெயராஜ், பாலாஜி, விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். #edappadipalanisamy

    தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 15 போலீஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கம் மற்றும் விருதுகள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #IndependenceDay #TNCM #EdappadiPalanisamy
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட காவல் அதிகாரிகளுக்குச் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்-அமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்களை வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    1. லாவண்யா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை.

    2. நமசிவாயம், துணை காவல் கண்காணிப்பாளர், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை, மதுரை.

    3. உலகநாதன், காவல் ஆய்வாளர், கம்பம் வடக்கு காவல் நிலையம், தேனி மாவட்டம்.

    4.கிருஷ்ணமூர்த்தி, காவல் ஆய்வாளர், வி-7 நொளம்பூர் காவல் நிலையம், சென்னை பெருநகர காவல்.

    5. சரவணன், காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை, நாகப்பட்டினம் மாவட்டம்.

    6. கிளாஸ்டின் டேவிட், காவல் ஆய்வாளர், மத்திய குற்றப்பிரிவு, சென்னை பெருநகர காவல்.

    7. மகேஷ்குமார், காவல் ஆய்வாளர், பி-3 தெப்பக்குளம் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம், மதுரை மாநகர்.

    8. சித்ராதேவி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை, தேனி மாவட்டம்.

    9. ஜெயந்தி, காவல் ஆய்வாளர், இருப்புப் பாதை காவல் நிலையம், ஜோலார்பேட்டை.

    10. சுரேந்தர், காவல் உதவி ஆய்வாளர், கண்டோன் மென்ட் காவல் நிலையம், திருச்சி மாநகரம்.

    இதே போன்று பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்- அமைச்சரின் காவல் பதக்கம் வழங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    1. மகேஷ்குமார் அகர்வால், காவல் ஆணையர், மதுரை மாநகரம், தற்போது காவல்துறை தலைவர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.

    2. முத்தரசி, காவல் துறை உதவி தலைவர், (நிர்வாகம்), காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகம், சென்னை.

    3. கண்ணன், காவல் கண்காணிப்பாளர், தனிப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.

    4. ராஜ்நாராயணன்,காவல் ஆய்வாளர் (தொழில் நுட்பம்) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, அயல் பணி இயக்குநர் அலுவலகம், சென்னை.

    5. ஆனந்தராஜன், காவல் உதவி ஆய்வாளர், திட்டச்சேரி காவல் நிலையம், அயல்பணி, நாகப்பட்டினம் மாவட்ட தனிப்பிரிவு.

    விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள்.

    மேற்கண்ட விருதுகள், முதல்-அமைச்சர் பங்கேற்கும் சிறப்பு விழாவில் மேற்கூறிய காவல் துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்படும். #IndependenceDay #TNCM #EdappadiPalanisamy
    நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது உளம் கனிந்த சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #IndependenceDay
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    நம் பாரத நாட்டிற்கு வணிகம் செய்வதற்காக வந்து, படிப்படியாக நம்மை அடிமையாக்கி ஆட்டிப் படைத்த ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து, நம் இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற இந்த இனிமையான நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த சுதந்திர தினத்திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரைத் துச்சமென மதித்து, உயிர் தியாகம் செய்ததோடு, வன்முறைகளுக்கு இடம் கொடாமல், அஹிம்சை மூலமே அடிமை விலங்கைத் தகர்த்தெறிந்த தியாகச் செம்மல்கள் நிறைந்த மாநிலம் நம் தமிழ்நாடு.

    நாட்டின் விடுதலை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தங்களின் சொந்த நலன்களை பற்றி சிந்திக்காமல், நாட்டு விடுதலைக்காகவே தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து போற்றும் பொன்னாள் சுதந்திர திருநாளான இன்னாள் ஆகும்.

    தாய் மண்ணை மீட்கப் போராடிய சுதந்திர போராட்ட தியாகிகளின் சிறப்பினை போற்றிடும் வகையில், அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, விடுதலை போராட்டத் தியாகிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 12,000 ரூபாயிலிருந்து 13,000 ரூபாயாகவும், அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தை 6,000 ரூபாயிலிருந்து 6,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியது; வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, வ.உ.சிதம்பரனார் ஆகியோரது வழித்தோன்றல்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர சிறப்பு ஓய்வூதியத்தை 6,000 ரூபாயிலிருந்து 6,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியது.

    சுதந்திரப் போராட்ட வீரர்களின் அளப்பறிய தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்து போற்றிடும் வகையில், தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம், தியாகி தீரன் சின்னமலை நினைவுச் சின்னம், தியாகி வாஞ்சிநாதன் நினைவு மண்டபம், வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம், வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னம், வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம்.

    தியாகி சுந்தரலிங்கனார் மணி மண்டபம், திண்டுக்கல் மாவட்டத்தில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் நினைவு மண்டபம், என பல்வேறு சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவகங்களை நிறுவி சிறப்பித்து வருவதுடன், விடுதலைப் போராட்ட தியாகிகளின் நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், நினைவுச் சின்னங்கள், மணிமண்டபங்கள் ஆகியவற்றை புனரமைத்தும் வருகிறது.

    மேலும், விடுதலைப் போராட்ட தியாகிகளை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த நன்னாளில், பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கவும், இந்தியத் திருநாட்டை வல்லரசாக்கவும், தமிழ்நாட்டை வளம் மிக்க முன்னோடி மாநிலமாக உருவாக்கிடவும், நாம் அனைவரும் சாதி, மத, பேதங்களை கடந்து, இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுடன், அயராது உழைத்திட வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #IndependenceDay #TNCM #EdappadiPalanisamy
    முன்னாள் மக்களவை தலைவரும் மூத்த இந்திய அரசியல் வாதியுமான சோம்நாத் சாட்டர்ஜி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். #TNCM #EdappadiPalanisamy #SomnathChatterjee
    சென்னை:

    முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் மக்களவை தலைவரும் மூத்த இந்திய அரசியல் வாதியுமான சோம்நாத் சாட்டர்ஜி இன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

    அஸ்ஸாம் மாநிலம், திஸ்பூரில் பிறந்த சோம்நாத் சாட்டர்ஜி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட காலமாக உறுப்பினராக இருந்தார். பத்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த சோம்நாத் சட்டர்ஜி, இந்தியாவிலேயே நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் என்ற சாதனை படைத்தவர்.

    நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களில் தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக எடுத்து வைப்பதில் பெயர் பெற்றவர்.


    அதுமட்டுமின்றி, 1996ஆம் ஆண்டு சிறந்த நாடாளுமன்றவாதிக்கான விருதினை பெற்ற பெருமைக்குரியவர் ஆவார். சோம்நாத் சாட்டர்ஜி, மக்களவை தலைவராக ஜூன் 2004 முதல் மே 2009 வரை பதவி வகித்து, மக்களவையை திறம்பட வழிநடத்தியவர். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களாலும் மதிக்கப்பெற்றவர்.

    சோம்நாத் சாட்டர்ஜியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy #SomnathChatterjee
    பல்வேறு சம்பவங்களில் பலியான 9 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    சென்னை:

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வேலூர் அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த ரகுராமன் சாலை விபத்தில் உயிரிழந்தார். சென்னை அண்ணாசாலை போலீஸ் நிலையம் அருகில் இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் நிர்மலா மற்றும் அவரது மகன் மகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பொன்னேரி கிராமத்தைச் சேர்ந்த முத்துமாடனின் மகன் காசி, மகள் ஆனந்தி இருவரும் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தனர்.

    திருவாரூர் திட்டாணி முட்டம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் ரோகித், பாலாஜி ஆகிய இருவரும் பாண்டவையாற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஆற்று நீரில் மூழ்கியும், மதுரை கிழக்கு மதுரை கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் முத்து வீரகணபதி மற்றும் வண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் அருண்குமார் ஆகியோர் கண்மாயில் குளித்துக் கொண்டிருந்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    விபத்துக்களில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும், உயிரிழந்த 9 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் மற்றும் இத்தொழில் சார்ந்த தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளது. #EdappadiPalanisamy #HandloomDay
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சுதேசி இயக்கத்தின் போர் வாளாகவும், கைத்தறி தொழிலின் முக்கியத்துவமும், அது சமூக பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பங்களிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், கைத்தறித் தொழிலை மேம்படுத்தி, கைத்தறி நெசவாளர்களின் பெருமையை உயர்த்திட வேண்டுமென்ற உயரிய நோக்கிலும் ஆகஸ்ட் திங்கள் 7-ந்தேதி தேசிய கைத்தறி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் சுமார் 1.90 லட்சம் நெசவாளர் குடும்பங்கள் உள்ளதோடு, இத்தொழில் 3.19 லட்சம் நெசவாளர்கள் மற்றும் நெசவு சார்ந்த உப தொழில் புரிவோருக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது.

    தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் முதியோர் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கும் திட்டம், நெசவாளர்களுக்கு முதல்-அமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் வழங்கும் திட்டம், கைத்தறி நெசவாளர்களுக்கு ஆயுள் காப்பீடு திட்டம், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ காப்பீடு திட்டம், நெசவாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம்,

    மாநில அளவில் சிறந்த நெசவாளர் விருது வழங்கும் திட்டம், திறன்மிகு கைத்தறி நெசவாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் திட்டம், உற்பத்திப் பொருட்களில் புதுமை முயற்சிகளையும் பல்வகைப்படுத்துதலையும் ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி அளிக்க கைத்தறி உதவித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

    நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பிரிவு மக்களும், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் விற்பனை நிலையங்களிலும்,

    கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும், தூய சரிகை, தூய பட்டு மற்றும் பருத்தி கைத்தறி ரகங்களை வாங்கி அணிந்து, கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    கைத்தறி தொழில் மேன்மேலும் வளரவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை தரம் உயரவும், அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொண்டு, தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் மற்றும் இத்தொழில் சார்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy #HandloomDay
    பல்வேறு சம்பவங்களில் பலியான 14 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மதுரை மாவட்டம், மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்த ஞானபிரகாசம் மின் மோட்டார் பழுது நீக்கும் பணியின் போது உயிரிழந்தார்.

    கருப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் அருவியில் குளிக்கச் சென்ற போது, தவறி விழுந்து உயிரிழந்தார்.

    போடிநாயக்கன்பட்டி கிராம உட்கடை பேட்டை புதூர் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி வாய்க்காலில் குளிக்கச் சென்ற போது ஆற்றில் விழுந்து உயிரிழந்தார்.

    கோயம்புத்தூர் மாவட்டம், ஊஞ்சவேலம்பட்டி கிராமத்தில், சாலை விபத்தில் ஜெயலட்சுமி, ஸ்ரீநிதி, ஆனந்தகிருஷ்ணன், நடராஜ் மற்றும் திருமுருகன் ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.

    ஆண்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குமார் குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

    தேவணாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சேவியர் பிரைட்டன் குமார் ஆழியார் அணையில் மூழ்கி உயிரிழந்தார்.

    திருவள்ளூர் மாவட்டம், போந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகள் தர்ஷினி ஆலய திருவிழாவின் போது, பட்டாசு வெடித்ததில், உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், கே.திப்பனபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பன் மனைவி மூக்கம்மாள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம், பட்டரைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி இரு சக்கர வாகனத்தில் சென்ற போது சாலை விபத்தில் உயிரிழந்தார்.

    அறந்தாங்கி வட்டம், பூவற்றக்குடி சரகம், திருநாளுர் கிராமத்தைச் சேர்ந்த மாரிக்கண்ணன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

    இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த மேற்கண்ட 14 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 16 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #Edappadipalanisamy
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டம், ஒட்டியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சேகர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரியபாடி கிராமத்தைச் சேர்ந்த சதாசிவம். கோயம்புத்தூர் மாவட்டம், ஜே. கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாசாணி. திருப்பூர் மாவட்டம், பெதப்பம் பட்டியைச் சேர்ந்த மாயவன் மனைவி ஜெயா. அரியலூர் மாவட்டம், த.சோழங்குறிச்சி மஜீரா காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையன்.

    திருவாரூர் மாவட்டம், ராமநாதன் கோவில் கிராமத்தைச் சேர்ந்த தங்க பாண்டியன். தேனி மாவட்டம், பண்ணைபுரம் கிராம உட்கடை பல்லவராயன் பட்டியைச் சேர்ந்த பெருமாள். தூத்துக்குடி மாவட்டம், மற்றும் கிராமத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன். நாமக்கல் மாவட்டம், மின்னாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொம்முலு மனைவி சாத்தம்மாள்.

    திருப்பூர் மாவட்டம், பிச்சம்பாளையம் புதூரைச் சேர்ந்த செந்தில்குமார். திருநெல்வேலி மாவட்டம், கீழபிள்ளையார்குளம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கி முத்து. திருநெல்வேலி மாவட்டம், கீழச்சுரண்டை பகுதியைச் சேர்ந்த சமுத்திரம். காஞ்சிபுரம் மாவட்டம், பழைய பல்லாவரம் யூனியன் கார்பைடு காலனியில் வசித்து வந்த சண்முகம். கடலூர் மாவட்டம், புலியூர் கிழக்கு மதுராசமட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

    மதுரை மாவட்டம், குமாரம் கிராமத்தைச் சேர்ந்த அருண் மகள் தட்சணா பாம்பு கடித்து உயிரிழந்தார்.

    இச்சம்பவங்களில் உயிரிழந்த 16 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #Edappadipalanisamy
    சேலத்தில் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். #TNCM #EdappadiPalanisamy
    சென்னை:

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலத்துக்கு சென்றார்.

    இதற்கிடையே, ஆழ்வார்பேட்டை காவேரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென பின்னடைவு ஏற்பட்டு சிறிது நேரத்தில் சீரானது. அங்கு தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

    இந்நிலையில், சேலத்தில் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரத்து செய்தார். சேலத்தில் இருந்து கோவை சென்ற அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்த்டைந்தார். #TNCM #EdappadiPalanisamy
    ×