என் மலர்
செய்திகள்

தேசிய பத்திரிகை தினம்- எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
தேசிய பத்திரிகை தினத்தையொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். #NationalPressDay #cmEdappadipalanisamy
சென்னை:
தேசிய பத்திரிகை தினத்தையொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உண்மை நிகழ்வுகளை மக்களுக்கு நடுநிலையோடு எடுத்துரைத்து, அவர்தம் அறிவுக்கண்ணை திறக்கும் உயரிய பணியை ஆற்றுவதால் பத்திரிகை துறை ஜன நாயகத்தின் நான்காவது தூணாக போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க பத்திரிகை மற்றும் ஊடகத்துறையின் பணியினை கெளரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16-ந்தேதி தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில், அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #NationalPressDay #cmEdappadipalanisamy
Next Story






