என் மலர்
நீங்கள் தேடியது "returf chennai"
சேலத்தில் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். #TNCM #EdappadiPalanisamy
சென்னை:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலத்துக்கு சென்றார்.
இதற்கிடையே, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென பின்னடைவு ஏற்பட்டு சிறிது நேரத்தில் சீரானது. அங்கு தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சேலத்தில் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரத்து செய்தார். சேலத்தில் இருந்து கோவை சென்ற அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்த்டைந்தார். #TNCM #EdappadiPalanisamy






